Pages

Friday, October 3, 2008

கர்மா பொது 5



சுலோகம் 44


போகமிகு செல்வத்துப் பூண்டதன் னெஞ்சழிந்தார்க்
கேக வகையுற்ற வெழிற்புந்தி - யோக
மமைவுறா துள்ளத்தி லாதலால் வேதச்
சமைவுதான் கேளாய் தரித்து.

புலன்நுகர்வு, செல்வம் இவைகளை மிகவும் விரும்புவதால் மயங்கியவர்களின் மனங்களில், பரமப்பிரபுவின் பக்தித் தொண்டிற்கான நிலையான உறுதி உண்டாவதில்லை.

**
கண்ணன் சொல்கிறான்: வேதத்தை கத்துக்கொண்டு அதை பின் பற்றி செல்வம் சேர்க்கணும்; சுவர்க்கத்தை அடையணும்ன்னு நினைக்கிறாங்க. ஆனா அப்படி நீ நினைக்க தேவை இல்லை. சுவர்கத்தை அடைய செய்வது எல்லாம் காம்ய கர்மாக்கள். அதை மட்டுமே செய்கிறவங்களுக்கு மோட்சத்தில நாட்டம் வராது. உபநிஷத் சொல்கிற மோட்சத்துலதான் ஆசை இருக்கணும்.

அர்ஜுனனுக்கு சந்தேகம் வருது.
ஆயிரம் தாய் தந்தையர்களை விட அதிகமா வேதம் அன்பு காட்டுகிறதா சொல்கிறாங்க. அப்படிப்பட்ட வேதம் சொல்கிறதைதானே செய்யறேன்? வேதம் செய்யக்கூடாததை செய்யவா சொல்லும்? சாஸ்திரத்திலே சொன்னதை விடலாமா? வேதத்தில் சொன்னதை விடலாகாதே?
வேதம் பொய் சொல்லாதே? அதை விடச்சொன்னா அது தப்பில்லையா?

சுலோகம் 45
முக்குணத்தோர் பண்புரைக்கு மூண்டுமறை நீமன்னா
வக்குணத்து மன்னே லவாநெஞ்சா - யிக்குணத்தாற்
சாருதுய ரற்றெனேஉஞ் சத்துவத்தி னப்புறத்தி
லாருமியோ கக்கேகம மற்று.

வேதங்கள் பொதுவாக மூன்று பௌதிக இயற்கைக் குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா! இவை மூன்றிற்கும் மேற்பட்டவனாவாயாக. எல்லா இரட்டைகளிலிருந்தும், அடைதல் காத்தல் இவைகளுக்கான கவலைகளிலிருந்தும் விடுபட்டுத் தன்னில் நிலை பெற்றிருப்பாயாக.

**கர்ம காண்டத்தில் முக்குண மயமான விஷயங்களைதான் சொல்லி இருக்கும். தமோ குணத்தினனுக்கு சண்டையிட யாகம். ரஜோ குணம் உள்ளவனுக்கு சொர்க்கம் கிடைக்க யாகங்கள். வேதம் ஒரு சிலருக்கு சொல்ல வரலையே? முக்குணங்கள் உள்ளவர்களுக்கும்தான். நீ சத்வமாக இருக்கணும். அதனாலே சிலதை செய்ய தேவை இல்லை என்கிறேன்.

ஒரு அம்மா. 3 குழந்தைகள். ஒத்தன் சாது பிள்ளை. ஒரு கோபக்கார பிள்ளை. ஒரு சோம்பலான பிள்ளை.

எல்லாருக்கும்தான் அவள் தாயார். பிள்ளைகளுக்கு தகுந்தபடிதானே புத்தி சொல்லுவாள்? சோம்பலான பிள்ளைக்கு வேறதான் சொல்லுவாள். மண்ணை தின்னாதே என்று சொல்லுவாள். சாது பிள்ளை கேக்கும். பிரச்சினை இல்லை. சோம்பலான பிள்ளைகிட்டே சொல்லும்போது அது கேட்காட்டா அப்போதைக்கு விட்டு விடுவாள். பின்னால வயித்து வலி வரும்போது “பாத்தியா அப்பவே மண் தின்னாதேன்னு சொன்னேன், கேக்கலை. இப்ப உனக்கு வயித்து வலி வந்துடுத்தே? என்பாள். அது போல அவரவருக்கு தகுந்ததைதான் செய்ய சொல்லுவாள்.

ஒருவர் சின்ன நோக்கத்தில் ஒரு விஷயத்தை ஆரம்பிக்கலாம். வேதத்தில் நம்பிக்கை இல்லைன்னு வெச்சுக்கலாம். இன்பம் வேண்டி ஒரு யாகம் செய்யறார். அது கிடைத்தபிறகு நம்பிக்கை வருது. அதுக்கும் மேலே ஒண்ணு தேடுரார். நேரடியா மோட்சத்தில ஆசை வராது. ஏதோ ஒண்ணை சொல்லிதான் நம்பிக்கை வருது. இதுக்கு மேலே கேக்கிறவருக்கு மோட்ச வழியை பகவான் காட்டுவார்.

இரட்டைகள் இன்ப- துன்பம், வெற்றி - தோல்வி இது மாதிரி. இந்த இரட்டைகளால பாதிக்கப்படக்கூடாது. இதைதான் துவந்தம் இன்மை என்பாங்க.


7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா போட்டுக்கறேன் :)

Geetha Sambasivam said...

present sir

திவாண்ணா said...

என்னையாது வம்பா இருக்கு? கொஞ்ச நாளா ஆளுக்கு ஆளு உள்ளேன் போட்டுக்கிறாங்க.
பதிவுகள் ஏதாவது புரியாத மாதிரி இருக்கா இல்லை பழசுதானா? இல்லை வெண்பா பாத்து பயமா? என்ன சமாசாரம்.
சொல்லிபோடுங்க, இல்லை மெயிலுங்க!

Kavinaya said...

நான் உங்க விளக்கங்களதான் படிக்கிறது :) நீங்க சொன்ன கதை நல்லாருக்கு. ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கிற ஒரு கதையை நினைவுபடுத்தியது.

திவாண்ணா said...

அப்பாடா, கவியக்கா, பால வாத்தீங்க! சரியா எழுதலையோன்னு தோணிப்போச்சு!

//ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கிற ஒரு கதையை நினைவுபடுத்தியது.//

அவர் கதைகளை நல்லா இன்டர்னலைஸ் பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது! எந்த கதைன்னு சொல்லக்கூடாதா? ஏற்கெனவே எழுதி இருந்தா சுட்டுங்க.

Kavinaya said...

ஒரு தாய், தன் பிள்ளைகளின் ஜீரண சக்திக்கு ஏத்தாப்போல ஒரு பிள்ளைக்கு காரசார கறியும், இன்னொரு பிள்ளைக்கு ரசமும், இன்னொரு பிள்ளைக்கு கஞ்சியும் கொடுக்கக் கூடும். அதற்காக அவள் பிள்ளைகளிடம் ஒரே மாதிரி அன்பு இல்லைன்னு பொருள் இல்லை - அப்படின்னு சொல்ல்லியிருப்பார் (அவர் சொன்னதோட சாரத்தை என் சொந்த வார்த்தைகள்ல சொல்லியிருக்கேன்)

திவாண்ணா said...

ரொம்ப நல்ல உதாரணம் !