Pages

Thursday, October 30, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி --5:




யஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம் கர்மபந்தந:।
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9 ॥

ஐவகைய வேள்வியினுக் காகாக் கருமங்கண்
மெய்வகையே கட்டு மிகவுலகை-யிவ்வகையா
யாங்கதனுக் காக வமைந்துன் னசையைவிடுத்
தீங்கிதனை நின்றே யியற்று.

ஐவகைய வேள்வியினுக்கு ஆகாக் கருமங்கள் மெய் வகையே கட்டும் இகவுலகை. இவ்வகையாய் ஆங்கு அதனுக்காக அமைந்து உன் ஆசையை விடுத்து ஈங்கு இதனை நின்றே இயற்று.

(யாகத்தின் பொருட்டுச் செய்யப்படுகின்ற கர்மம் தவிர வேறு செயல்களில் ஈடுபடுவதனாலேயே இம்மனித ஸமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது. (ஆகையால்) அர்ஜுன! பற்றுதல் இல்லாமல் அந்த யாகத்தின் பொருட்டே கடைமையை நன்கு ஆற்றுவாயாக.)

கண்ணன் சொல்கிறான்: கர்மாவை விட்டதாலே மட்டும் லாபம் இல்லை. விட்டுவிடாததாலே மட்டும் அது தப்பும் இல்லை. கர்மாவோட பலனைதான் விடச்சொல்றேன்?

இங்கே யாகம் என்கிற சொல்லுக்கு கொஞ்சம் விரிவான அர்த்தமே எடுத்துக்கணும். பகவத் அர்ப்பணமா செய்கிற எல்லா கர்மாக்களையுமே அப்படி எடுத்துக்கலாம்.

கர்மா செஞ்சா அதோட பலன்- மேலும் விருப்பு, வெறுப்பு - மேலும் வேலை ன்னு ஒரு மாய சுழல்ல மாட்டிப்போமே என்பது கவலை. எதை செய்தால் அது நம்மை சம்சாரத்தில கட்டுப்படுத்தும், எதை செஞ்சா கட்டுப்பாடு செய்யாதுன்னு சரியாவே வரையரை செஞ்சு வெச்சு இருக்கான் பகவான். இததான் சாஸ்திரங்கள்ல சொல்லி இருக்கு. குடும்பத்தை நடத்த வேலை செய்வதும் அதுக்கான தேவையான வேலைகளை செய்வதும் க்ருஹஸ்த தர்மம். யார் யார் எந்த வேலை எப்படி எவ்வளவு செய்யணும்ன்னு விதிச்சாச்சு.

தேவ பூஜையா செஞ்ச எதுவும் ராகத்வேஷங்களை சம்பாதிச்சு கொடுக்காது. அப்படி இல்லாம சொல்லப்படாத ஏதேதோ வேலைகளை உன் பயனுக்காக செய்தால் அவை சம்சாரத்தில அழுத்தும்தான். உலகத்துக்கு நல்லதுன்னு செய்கிற எதுவும் அப்படி அழுத்தாது.

பயனை கருதாம ஆரம்பத்திலே இருப்போம்ன்னு இல்லை. முதல்ல ஏதோ ஒரு பயனை கருதிதான் செய்வோம். அப்புறமா முன்னேற முன்னேற பயன்கருதாம செய்வோம். அப்படி பயன்கருதாம செய்ய ஆரம்பிக்கிற போது கொஞ்சம் கொஞ்சமா விருப்பு வெறுப்பு போயிடும்.



6 comments:

Geetha Sambasivam said...

உள்ளேன் ஐயா!

Kavinaya said...

படிக்கும்போது சுலபமாகத் தெரிகிற விஷயம், நடைமுறையில் கடைப்பிடிக்க நினைக்கையில் ஆடுகிற கண்ணாமூச்சி இருக்கிறதே... அந்த மாயையிலிருந்து விடுபடவும் மாயக் கண்ணன் தான் அருள வேண்டும்.

திவாண்ணா said...

@geetha akka,

marked present.

@கவி நயா
நல்லா சொன்னீங்க.
சுலபமில்லைதான். நிறைய பேர் பிலாஸபி வேற கடை பிடிக்கிறது வேறன்னு வேற நினைக்கிறாங்க. அப்ப பிலாஸபி தெரிஞ்சுக்கிறது எதுக்குன்னு புரியலை. நிறைய மனத்தடை இதிலே!

மெளலி (மதுரையம்பதி) said...

கர்மாவை விடாம செய்யணுமுன்னு ஆரம்பிச்சாதானே அதன் பலா-பலன்களை விலக்கறது?.

கர்மாவை பண்ணாம டேக்கா குடுக்கத்தான் என்னைப் போன்றோர் எத்தனை வழி-முறைகள் உண்டோ அத்தனையும் செய்யறோமே? :)

திவாண்ணா said...

@ மௌலி
அது சரி!
:-))

குமரன் (Kumaran) said...

கர்ம வழி - 5 வரை தொடர்ச்சியாகப் படித்தேன் ஐயா. அடுத்த ஐந்து பாகங்களைப் பிரதி எடுத்து வைக்கிறேன். விரைவில் படிக்க வேண்டும்.