Pages

Monday, October 6, 2008

கர்ம வழி - 6 தொடர்ச்சி



முக்குணமில்லாமல் இருக்கணும். அதாவது ரஜோ தமோ குணங்களை தவிர்க்கணும்.
ரஜோ தமோ குணங்களை எப்படி நீக்கறது? இதை எல்லாம் கண்டு பிடிச்சு தொலைக்க முடியாது. பின்னே? சத்வ குணத்தை வளத்துக்கொண்டு போ. மத்தது கம்மியாயிடும்.

சத்வ குணத்தை வளர்ப்பது எப்படி? ஆத்ம சிந்தனையால் வரும். இதை தவிர ஏதும் வேண்டாம்ன்னு நினை. சுகமும் துக்கமும் வரத்தான் வரும். ஆனால் வந்தாலும் பாதிக்கக்கூடாது. கிடைப்பது/கிடைக்காதது,(யோகம்) நிலைப்பது/ நிலக்காதது (க்ஷேமம்) இதை எல்லாம் கண்டுக்காதே. ஆத்மா தவிர எதையும் கண்டு பிடிக்கவோ அனுபவிக்கவோ நினைக்காதே. இதுக்கு அடிப்படை ஆகார சுத்தி. (முன்னாலேயே பாத்தாச்சு இல்லையா?)

சுலோகம் 46
எங்கு நிறைநீ ரெழிற்றடத்து யாவர்க்கு
மிங்கு மருவுபய னென்னவா -மங்கனைத்து
வேதத்து மந்தணற்கு வேண்டுபய னவ்வளவாம்
போதத்துக் கீடாப் புணர்ந்து.

ஒரு சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகளெல்லாமே, ஒரு பெரும் நீர்த்தேக்கத்தால் உடன் பூர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவைகளுக்குப் பின் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்.

எல்லா இடத்திலும் நீர் இருக்கும் நீர் நிலையில் இருப்பவன்கிட்டே என்ன பாத்திரம் இருக்கோ அது என்ன எவ்வளவு கொள்ள முடியுமோ அவ்வளவே எடுக்க முடியும். நமக்கு தேவையான தண்ணி மட்டும் இல்லை. நிறையவே இருக்கு. அது போல வேதம் எல்லாருக்கும் சொல்லும். அவரவர்களுக்கு ஏற்புடையதை மட்டுமே எடுத்துக்கணும்.

இப்ப செய்யாதேன்னு சொல்வது இங்கே அர்ஜுனனுக்கு / அவனைப்போன்றவர்களுக்கு மட்டும்தான். அவன் மத்திய அதிகாரி. அதனால். சும்மா வெறும் ராஜ்யத்துக்காக சண்டை போடாதே. அது உன் கடமை என்கிறதாலே செய்.

ஆகவே ஆத்மாவில் நாட்டம் இருக்கிறவன் தேவையானதை மட்டுமே எடுத்துக்கணும்.


9 comments:

Kavinaya said...

//எல்லா இடத்திலும் நீர் இருக்கும் நீர் நிலையில் இருப்பவன்கிட்டே என்ன பாத்திரம் இருக்கோ அது என்ன எவ்வளவு கொள்ள முடியுமோ அவ்வளவே எடுக்க முடியும்.//

ஆமாம்... உண்மைதான்.

திவாண்ணா said...

:-)
எவ்வளவு எடுக்கணுமோ அது போதும் என்பதாக இந்த இடத்திலே கருத்து இருக்கு. அதை வேற மாதிரி சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.

ஆனா இந்த கருத்தும் சரிதான் இல்லையா? நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கக்கூடியது இருக்கு. நாம எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அவ்வளவு தெரிஞ்சுக்கலாம். அது போல.

ambi said...

கிடைக்கறது கிடைக்காம இருக்காது, கிடைக்காதது என்ன பண்ணாலும் கிடைக்காது. சரி தானே? :)

அடடா பல வகுப்புகளுக்கு நான் ஆப்சென்ட் போலிருக்கே. சரி, விட்டுபோன பதிவுகளை கவர் பண்ண ட்ரை பண்றேன்.

திவாண்ணா said...

யாரப்பா அங்க! அடென்டன்ஸ் ரிஜிஸ்தர எடுங்க. நீக்கின ஒரு பேரை திருப்பி சேக்கணும்.

//கிடைக்கறது கிடைக்காம இருக்காது, கிடைக்காதது என்ன பண்ணாலும் கிடைக்காது. சரி தானே? :)//

முதல் பகுதி சரிதான் அம்பி, இரண்டாம் பகுதி கொஞ்சம் சர்ச்சைக்கு உள்ளாவது. அப்புறமா இதை பத்தி வரும் (ன்னு நினைக்கிறேன்)
:-))

Geetha Sambasivam said...

//நீக்கின ஒரு பேரை திருப்பி சேக்கணும்.//

nooooooooooooooooooooo

மெளலி (மதுரையம்பதி) said...

இப்போதைக்கு உள்ளேனய்யா மட்டும் போட்டுக்கறேன்.

jeevagv said...

/ஆகவே ஆத்மாவில் நாட்டம் இருக்கிறவன் தேவையானதை மட்டுமே எடுத்துக்கணும்.
//
அழகாகச் சொன்னீர்கள்.
தன்னை அறிகின்ற தவமே பெரிதென்று நடக்க வேண்டும்.

திவாண்ணா said...

கீதா சாம்பசிவம் said...

//நீக்கின ஒரு பேரை திருப்பி சேக்கணும்.//

nooooooooooooooooooooo

:-))))))))))))))))))))))))))))))))

திவாண்ணா said...

மௌலி ஜீவா நன்றி.
@ அம்பி
2 நாள் முந்தி ரமணர் பத்திய புத்தகம் ஒண்ணு படிச்சா இதையே எழுதி இருந்தது.!
அப்புறம் என்ன, அப்பீலே இல்லை.