Pages

Thursday, October 9, 2008

கர்ம வழி பொது - 9


சுலோகம் 51

தீர்ந்த மனத்துத் தெளிவுற்றார் செய்கருமத்
தார்ந்த பயனை யறத்துறந்து - சேர்ந்த
பிறப்பணையுங் கட்டவிழ்ந்து பெய்துயர் நோய் தீர்ந்த
சிறப்பணைவர் நன்மையினைச் சேர்ந்து.

    சான்றோர், பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இறைவனிடம் அடைக்கலம் புகுந்து இகவுலகில் செயல்களின் பலன்களைத் துறப்பதால் ஜனன மரணச் சுழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர். இவ்விதமாக அவர்கள் துன்பங்களுக்கப்பாற்பட்ட நிலையை அடைய முடியும்.

சுலோகம் 52

எவ்வளவி னின்மோகத் திற்கலக்க மாமிதனை
யிவ்வகையே புந்தி யெழக்கடக்கு - மவ்வளவிற்
கேத மருவுதிநீ கேட்பதிலுங் கேட்டதிலு
மேத மிகும்பயனா மென்று.

    மயக்கமெனும் இவ்வடர்ந்த காட்டை உன் அறிவு தாண்டிவிட்டால், இதுவரை கேட்டவை, இனிக் கேட்க வேண்டியவை இவற்றிற்கு, சமநிலையுடையவனாகி விடுவாய் நீ

யோகத்தின் லட்சணமே சம நிலைதான். பலன் சித்தித்தாலும் இல்லைனாலும் அது வீண் உழைப்பு இல்லை. சம புத்தி எப்படி வரும்? ராமரே பட்டாபிஷேகம் என்றால் தயாராகத்தானே இருந்தார்? சுமந்திரன் வந்து அப்பா கூப்பிடறார்ன்னு சொல்லும் போதும் அடடா இத்தனை பெரியவர் வந்து கூப்பிடராரேன்னு சந்தோஷமாவே போனாற். அங்கேயோ எதிர்பாராத செய்தி. காட்டுக்கு போகணும்ன்னு. இப்படி பட்ட நிலையிலே மூடன் அழுவான்,  மூர்க்கன் உதைம்பான். ராமர் என்ன சொன்னார்? தர்மமே பெரிசுன்னு கிளம்பிட்டார்.

 அப்ப அவர் முகம் எப்படி இருந்ததுன்னு வால்மீகி சொல்றார். முகம் பிரசன்னமா இருந்ததாம். வெளியே பிரசன்னமா காட்டி உள்ளே புழுங்கிக் கொண்டு இருக்கலை. பின்னால பரதன் பொங்கி "என்ன இது" ன்னு கேட்டா, "இது சகஜம்- இயற்கைதானே" ன்னு சிரிச்சுண்டே சொல்றார். பகலும் இருட்டும் மாறி மாறி வரார்ப்போலே சுகம் துக்கம் மாறி மாறி வரது இயற்கைதானே. அதான் உலகத்தோட இயல்பு. இப்படி யார் கலங்காம இருப்பானோ அவனே சிறந்த கர்ம யோகி
.
இப்படி முக்கியமான ஸ்லோகங்களை பாத்தோம். அடுத்து கர்மயோகம் பத்தி கண்ணன் என்ன சொல்கிறான்னு பாக்கலாம். மூணாவது அத்தியாயம் கர்ம யோகம்.

9 comments:

ambi said...

ம்ம், சேற்றில் மலர்ந்த செந்தாமரை போலனு கம்பரும் சொல்லி இருக்கார் இல்லையா? (கீதா மேடம் ராமாயணம் படிச்சு ரொம்ப வால்மீகி பக்கம் போன மாதிரி இருக்கே!) :))

ஹிஹி, சரஸ்வதி பூஜை அன்னிக்கு கம்யூட்டர் தொடலாமோ? நேத்து ஒரு பதிவு வந்ருக்கே, அதான் கேட்டேன். :p

Kavinaya said...

ஸ்ரீராமர் உதாரணம் அருமை, பொருத்தம்.

மெளலி (மதுரையம்பதி) said...

// அப்ப அவர் முகம் எப்படி இருந்ததுன்னு வால்மீகி சொல்றார். முகம் பிரசன்னமா இருந்ததாம். வெளியே பிரசன்னமா காட்டி உள்ளே புழுங்கிக் கொண்டு இருக்கலை.//

அதானே!, அதெல்லாம் இப்போத்தான்...கலியின் சேஷ்டை அப்படின்னு விட்டுட்டு போகவேண்டியது, இல்லையா?. :)

jeevagv said...

வெண்பாக்களும் விளக்கங்களும் அருமை!

திவாண்ணா said...

அம்பி
//(கீதா மேடம் ராமாயணம் படிச்சு ரொம்ப வால்மீகி பக்கம் போன மாதிரி இருக்கே!) :))//

ஒரே ஒரு மேற்கோள் காட்டினா... :-))

// ஹிஹி, சரஸ்வதி பூஜை அன்னிக்கு கம்யூட்டர் தொடலாமோ? நேத்து ஒரு பதிவு வந்ருக்கே, அதான் கேட்டேன். :p//

கம்யூட்டர் தொடாட்டா என்ன? உண்மைல நான் ஊர்லேயே இல்லை. முன்னாலேயே 3 நாளுக்கு schedule பண்ணிட்டேன். கடைசி பதிவு தயார் ஆகலைன்னு மொக்கை போட்டுட்டேன்.

திவாண்ணா said...

கவி அக்கா, நன்றி!
thanks to krishnapremi anna

திவாண்ணா said...

@ mauli
கலியின் சேஷ்டைன்னு விட்டுட்டு போக முடியாதே மௌலி. கொஞ்சமாவது அதோட பிரவாகத்தை தடுக்கப்பாக்கணும். அப்புறம் பகவான் இருக்கான்.

திவாண்ணா said...

ஜீவா நன்றி! உங்களையும் கவி அக்காவையும் நினைச்சுண்டுதான் அத எல்லாம் சேத்தேன்.
பிடிச்சு இருக்கும்ன்னு...
:-))

மெளலி (மதுரையம்பதி) said...

//கலியின் சேஷ்டைன்னு விட்டுட்டு போக முடியாதே மௌலி. கொஞ்சமாவது அதோட பிரவாகத்தை தடுக்கப்பாக்கணும்//

நமது மனதில் புழுக்கம் இருந்தா தடுக்க முயற்சிக்க வேண்டியது அவசியம்...உண்மைதான் :))