ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிம்சந। நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி॥ 3.22 ॥
மூவுலகுந் தன்னுள்ளு முன்பெய்த தாய்ப்பின்பு மேவுமியல் பாலெய்த வேண்டுவதொன் - றாவதெனக் கில்லையா யேயிருக்க வெல்லாக்கருமத்து மொல்லையா னின்றியல்ல னோர்ந்து.
மூவுலகும் தன் உள்ளுமுன் பெய்ததாய், பின்பும் ஏவும் இயல்பால் எய்த வேண்டுவதொன்று ஆவது எனக்கில்லையாயே இருக்க, எல்லாக் கருமத்தும் ஒல்லை யான் இன்றி அல்லன் ஓர்ந்து.
(அர்ஜுன! எனக்கு மூவுலகங்களிலும் செய்ய வேண்டிய கடமை ஒன்றுமில்லை. அடைய வேண்டிய எதுவும் அடையப்படாமலுமில்லை. ஆயினுங்கூட நான் கர்மத்திலேயேதான் ஈடுபட்டுள்ளேன்.)
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:। மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 3.23 ॥ உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்। ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:॥ 3.24 ॥
யானியலாதிங் கொழியி லென்வழியைப் பின்செல்வர் மானிடர்மற் றிவ்வுலக மாயுமாற்-றானிலைசேர் நன்மரபு தான்கலக்கிநானே யிவர்தம்மைப் புன்மையினி லுய்தேனாய்ப் போம்.
யான் இயலாது இங்கு ஒழியில், என் வழியைப் பின்செல்வர் மானிடர். மற்று இவ்வுலக மாயுமால் தானிலை சேர் நன்மரபுதான் கலக்கி, நானே இவர் தம்மைப் புன்மையினில் உய்தேனாய்ப் போம்.
(நான் கர்மங்களைச் செய்யாமல்விட்டால் இம்மனிதர்கள் அனவரும் சீர்குலைந்து போவார்கள். மேலும் நான் சீர்குலைவு செய்கிறவனாகவும் இம்மாந்தர் அனைவரையும் அழிப்பவனாகவும் ஆவேன். ஏனெனில் பார்த்த! ஒருகால் நான் கவனத்துடன் கர்மங்களில் ஈடுபடாமல் இருந்தால் பெரிய தீங்கு விளயும். ஏனெனில் மனிதர்கள் எல்லாவிதங்களிலும் என்னுடைய வழியையே பின்பற்றுகிறார்கள்.)
சாதாரணமா முன் காலத்து உதாரணங்களைவிட தற்கால உதாரணம் நல்லா எடுபடும். அதுக்காக கண்ணன் அந்த நிகழ் காலத்து உதாரணத்தையே சொல்கிறான்.
ஜனகாதின்னு ஏன் யாரையோ சொல்லணும். என்னையே பாரேன். நான் எந்த கர்மாவ பண்ணி எனக்கு என்ன ஆகப்போறது?
நாரதரே சாட்சி. வீடு வீடா போய் பார்த்தார். 10108 மனைவிகள். எப்படி ஒருத்தன் சரியா அத்தனை குடும்பங்கள் நடத்த முடியும்? மெதுவா போய் எட்டிப்பார்த்தார். ஒரு வீட்டிலே குளிச்சுகொண்டு இருக்கான். அடுத்த வீட்டிலே பாத்தா அங்க ஒரு கண்ணன் சந்தியாவந்தனம் செய்கிறான். அடுத்த வீட்டிலே எட்டிப்பாத்தா பூஜை செய்கிறான். அடுத்த வீட்டுக்கு போனா வரவேத்து அதிதி உபசாரம் செய்கிறான். அடுத்த வீடு போனா அங்கேயும் ஒரு கண்ணன் வரவேற்கறான். இப்பதானே பாத்தேன்ன்னு சொல்லலை! இப்படி ஒவ்வொரு வீட்டிலேயும் சரியா க்ஹஸ்த தர்மத்தை அனுசரிக்கிறானாம். இப்படி பாகவதம் சொல்கிறது.
சட்ட திட்டங்கள் எல்லாம் பகவானுக்கும் அப்ளை ஆகுமா? அதையெல்லாம் உருவாக்கினவனே அவன்தானே? அவன் எதை செய்கிறானோ அதுவே சரியா இருக்கும். நல்லதாவே இருக்கும். அவனுக்கு மேலே அப்பீலே இல்லையே? இருந்தாலும் அவன் இந்த சட்ட திட்டங்களை மீறுகிறது இல்லை. அவனே மதிக்கலைனா மத்தவங்க எப்படி மதிப்பாங்க? அதனாலதான் - ஹிரண்யனை கொல்லனுமா? சரி, அவன் பிரம்மாகிட்ட வாங்கி இருக்கிற வரங்களுக்கு உட்பட்டே அவனை கொல்கிறான்.
அவன் கீதையை சொல்லனும், அர்ஜுனனை தூண்டி போர் செய்யணும்; அவதாரம் எடுத்த வேலையான பூமி பாரத்தை குறைக்கிறதை செய்ய அவன் இவ்வளோ கஷ்டப்பட வேண்டாமே! நினைச்ச மாத்திரத்திலேயே செஞ்சுடலாமே? ஆனா அவன் அப்படி செய்யலே. மத்தவங்க மாதிரியே செயல் பட்டுதான் வேலையை முடிக்கிறான். தன்னை பின்பற்றுகிறவங்க இருக்காங்கன்னா எப்படி நடந்துக்கணும் என்கிறதுக்கு கண்ணனே நல்ல உதாரணம்.
இதுக்கு லோக சங்கிரஹம் என்கிறாங்க.
12 comments:
நல்லா இருக்கு. இப்போ தான் இந்தக் கதையை, (நாரதர் கண்ணனை எங்கும் காண்பது) படிச்சேன். இங்கேயும் கண்ணனே! ம்ம்ம்ம்ம் சுகர் பத்தியும், தேடிட்டு இருக்கேன், ஒவ்வொரு புத்தகமா! அவரோட முன் ஜன்மமும், அதை மறக்காமல் இருக்கக் கிளி முகத்தோடயே இருக்கும்படிப் பிறக்கிறதும் கூட வரும் அதிலே.
ஆமாம். பாகவத சாரம் இரண்டாம் பாகம் பக்கம் 210 ராமக்ருஷ்னாமட பதிப்பு.
அல்லது ஆறாம் நாள் 10 : 69 முதல்...ஸ்ரீ கிருஷ்ண கிருஹஸ்ததர்ம தரிசனம் என்கிற தலைப்பில்......
சுகரா? தேடுங்க தேடுங்க! பிரம்மமாச்சே , எங்கேயும் இருப்பார்!
:-))
// பிரம்மமாச்சே , எங்கேயும் இருப்பார்!
:-))//
திவாண்ணா, இந்த போஸ்ட்டோட சிறப்பே மேல இருக்கும் பதில் தான் :-)))
@மெளலி, ஜால்ரா சத்தம் ரொம்ப பலமா இருக்கு! இப்போ பஜனைக்குப் போயிட்டு வந்ததன் பாதிப்போ?? :P:P:P:P
//ஆறாம் நாள் 10 : 69 முதல்...ஸ்ரீ கிருஷ்ண கிருஹஸ்ததர்ம தரிசனம் என்கிற தலைப்பில்......//
கிடைச்சது!
சுகர் கிடைக்கலை? கடையிலே அன்னியாய விலைதான். :P:P:P
No Sugar! :P:P:P:P
//@மெளலி, ஜால்ரா சத்தம் ரொம்ப பலமா இருக்கு! //
கீதாம்மா, பாம்பின் கால் பாம்பறியும் அப்படிங்கறது இதைத் தான் போல...நான் ஜால்ரா அடிக்கறது உங்களுக்குத்தான் கரெக்ட்டா தெரியுது...:-)
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:
கண்ணா... நாங்களும் (அப்பப்ப) முயற்சி செய்துகிட்டுதான் இருக்கோம் :(
//நாங்களும் (அப்பப்ப)//
;-))
முயற்சி திருவினை ஆக்கும். :-)
எனக்கு கீதையிலே சரம ஸ்லோகத்திற்கு அடுத்து மிகவும் பிடித்த சுலோகங்கள் இவை. :-)
Post a Comment