தாப த்ரயம் = தவனம் -துன்பங்கள்- மூன்று- -1. ஆதியாத்மிகம்: இந்திரியங்களாலும், (உடல் சம்பந்தப்பட்ட வயிற்று வலி, சிரங்கு, கண்வலி போன்ற துன்பங்கள் )
2.ஆதி தெய்விகம்: புவன தெய்வங்களாலும் (பனி, மழை, காற்று முதலியவை, சுவர் இடிந்து விழுதல், மரம் முறிந்து விழுதல் போன்ற தெய்வச்செயல்களாலும்),
3.-ஆதிபௌதிகம்: பூத பௌதிகங்களாலும் (மற்ற மனிதர், விலங்குகள் போன்றவற்றாலும்) விளையும் துன்பங்கள்.
ஈஷணாத் திரயம்: ஆசைகள் மூன்று. மனைவி,மக்கள், பொருள்.
பஞ்சகோசம்: ஐந்து உறைகள். அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆநந்தமய கோசங்கள். மனிதன் இவ்வைந்து கோசங்கள் உள்ளவனாக சொல்லப்படுகிறான்.
அவஸ்தா த்ரயம்
கனவு, கனவில்லா ஆழ் துயில், நனவு (ஸ்வப்ன, சுசுப்தி, ஜாக்ரத்) ஆகியன அவஸ்தா த்ரயம் எனப்படும்.ஞான இந்திரியங்கள் ஐந்து:
காதின் கேட்டல்
தோலின் தொடுணர்ச்சி
கண்களோட பார்த்தல்
நாக்கோட ருசித்தல்
மூக்கின் நுகர்தல்
கர்ம இந்திரியங்கள் ஐந்து:
1.வாக்
2.கை
3.கால்
4.பாயுரு
5.உபஸ்தம் - ஆண் குறி/ பெண் குறி
பஞ்ச ப்ராணன்கள்.
பிராணன் முதலான வாயுக்கள் 5.
1.வியானன்
2.பிராணன்
3.அபானன்
4.சமானன்
5.உதானன்
2 comments:
கர்ம வினைப்பயன்களினால் நாம் அவதிப்படும் இன்னல்களை
ஆதி தெய்வீகம் என்னும் பகுதியில் சொல்வதா ?
சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
இல்லையே ஐயா!
இந்த வகைப்படுத்துதல் வருகிற வழியை மட்டுமே காட்டுகிறது. வருகிற சேதி மின்னஞ்சலா, குரியரா இல்லை கடிதாசா என்பது போல. செய்தி ஒன்றேதானே? அதுபோல கர்ம வினை எப்படியும் வரும். வருகிற வழி இப்படி வேறுபடலாம்.
Post a Comment