யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:।
ஷ்ரத்தாவந்தோ அநஸூயந்தோ முச்யந்தே தே அபி கர்மபி:॥ 3.31 ॥
யான்புகலிக் கொள்கைதனை என்னார் சிரத்தையொடு
பான்மையினால் உள்ளழுக்கம் பற்றாது-மேன்மையுற
எப்பொழுதும் கொண்டொழுகும் எண்ணுடையார் அன்னாரும்
தப்புவர்காண் கன்மத்திற் றாம்
யான் புகல் இக் கொள்கைதனை என்னார் சிரத்தையொடு பான்மையினால் உள்ளழுக்கம் பற்றாது-மேன்மையுற எப்பொழுதும் கொண்டொழுகும் எண்ணுடையார் அன்னாரும் தப்புவர் காண் கன்மத்திற்றாம்.
(எந்த மனிதர்கள் குற்றங்குறை காணாதவர்களாக, ச்ரத்தை உடையவர்களாக, என்னுடைய இக்கொள்கையை எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ அவர்களும் அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.)
இங்கே என் மதம்ன்னு சொல்லுகிறது கர்ம யோகத்தைதான். முதல்ல கடைப்பிடிக்கிறார்களோன்னு சொன்னான். ஆனா மக்கள் "அட கண்ணன் சொல்கிறது நல்லாதான் இருக்கு. ஆனா யார் செய்கிறது? முடியற காரியமா?" ன்னு நினைக்கலாம். அதுக்காக யார் சிரத்தை வைக்கிறாங்களோன்னு அடுத்து ஒரு சலுகை கொடுக்கிறான். அப்பவும் போதாதோன்னு சந்தேகம். அதுக்காக யாருக்கு இதில் குற்றம் குறை பாக்கலையோன்னு இன்னும் ஒரு சலுகை.
இப்படி சலுகையா கொடுத்தா என்ன அர்த்தம்ன்னு நினைக்கலாம். முதல்ல குற்றம் குறை பாக்கலைனா அப்புறம் பகவான் அனுக்கிரகத்தால சிரத்தை - ஆர்வம் வந்துடும். ஆர்வம் வந்தா அப்புறம் கடைபிடிக்க ஆரம்பிச்சுடுவோம்! ஆக அதெல்லாம் வேற படிகள், அவ்ளோதான்.
கர்மம் செய்யறதாலதான் ஈஸ்வரன். இல்லாட்டா அதுக்கு தேவையே இல்லாம பிரம்மமாவே இருக்கும். லோகத்தை சிருட்டி செய்யறதுல ஈஸ்வரனுக்கு என்ன பலன்? ஒண்ணுமில்லை. பலன் பாக்காத செய்யறதால்தான் அவன் சிறந்த கர்ம யோகி. நல்லவங்களா இருப்போம் என்கிற நம்பிகைலதான் அவன் நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பறான். நாம அப்படியா இருக்கோம்? இல்லாம போனா அவனுக்கு என்ன நஷ்டம்? இருந்தா அவனுக்கு என்ன லாபம்? அதனால அவனே அப்படி பலனை இப்படிதான் இருக்கணும்ன்னு பாக்காம இருக்கிறப்ப நாமும் இருக்க வேணாமா?
யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்।
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:॥ 3.32 ॥
கூறியவிக் கொள்கைதனைக் கூடும் பொறாமையினால்
பேறுபெறப் பின்பற்றிப் பேணாதார்- வீறுதரும்
நல்லறிவி னெல்லாம் மயங்கினராய் நாசமுறற்
கொல்லைவிரை வாருணர்வின் றூங்கு.
கூறிய இக் கொள்கைதனைக் கூடும் பொறாமையினால் பேறு பெறப் பின்பற்றிப் பேணாதார்- வீறு தரும் நல்லறிவின் எல்லாம் மயங்கினராய் நாசம் உற கொல்லை விரைவார் உணர்வின்று ஊங்கு.
(ஆனால் எந்த மனிதர்கள் என்னிடம் குறை காண்பவர்களாக என்னுடய இந்தக் கருத்தை ஏற்று நடப்பதில்லையோ, அந்த மூடர்களை முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும், சீரழிந்து போனவர்கள் என்றும் அறிந்து கொள்.)
பகவான் வார்த்தையிலேயே நம்பிக்கை இல்லைன்னா அப்புறம் என்ன இருக்கு? அப்படி இருக்கிறவங்க எந்த அறிவு இருந்தாலும் இல்லாதவனாக ஆகிறாங்களாம். வாழ்க்கையே போயிடுமாம். மனசு இருந்தும் இல்லாம போனவங்களாம். இப்படி கண்ணன் சொல்கிறான்.
இங்கே கர்மா தியரியை நாம கொஞ்சம் புரிஞ்சுக்கணும்.
நாம செய்கிற புண்ணிய காரியங்கள் பாபங்கள் நம்மை தொடர்ந்தே வரும். உப்பை தின்னா எப்படி தாகம் எடுத்து தண்ணியை குடிக்க வேண்டி இருக்கோ அத போல செய்கிற செயல்கள் எல்லாத்துக்கும் ஒரு விளைவு இருக்கும். அதை நாம அனுபவிச்சே ஆகணும். நம்ம நாட்டு பிலாசபி படி இந்த விளைவுகள் ஒரு பிறவில அனுபவிச்சு முடிக்கலைனா அடுத்த பிறவிக்கும்கூட வரும்.
இந்த புண்ணிய பாவம் பட்டியல்லே செய்ததும் அதுக்கு அனுபவிக்கிரதும் பாலன்ஸ் பூஜ்யத்துக்கு வர வரை இதெல்லாம் தொடர்ந்துண்டேதான் இருக்கும். எப்ப இது பூஜ்யம் ஆகிறதோ அப்பதான் பிறவி என்கிறது ஒழியும். சரி நான் பத்து புண்ணியம் பண்ணேன். நான் செய்யற பத்து பாவத்துக்கு ஈடா வெச்சுக்க ன்னு சொன்னா, அப்படி நடக்காது. செய்த பாவத்துக்கும் அனுபவிச்சுதான் தீரணும்; புண்ணியத்துக்கும் அனுபவிச்சுதான் தீர்க்கணும்.
சரி, சரி, அதான் புண்ணியத்துக்கு சொர்கம் போய் அனுபவிப்போம், பாவத்துக்கு நரகத்துக்கு போய் கஷ்டப்படுவோம்ன்னு சொல்லறாங்களே? அப்ப திருப்பியும் ஏன் கஷ்டப்படணும்?
நல்ல கேள்வி. அப்படி சொர்க்க/ நகரத்திலே அனுபவிச்சாலும் முழுக்க காலி ஆகிறதில்லை. கொஞ்சம் மீதி இருந்து பிறவி எடுத்தே அதையும் தீர்க்க வேணும்.
சரிய்யா. இது அநியாயமா இருக்கே? என்ன செஞ்சாலும் அது புண்ணியமோ பாவமோவாதானே இருந்து தீரும். அப்ப எப்பதான் கரை சேருகிறது?
அதுக்குத்தான் கண்ணன் இங்கே வழியை சொல்றான். பலனை கருதாதே; நீ செய்யலை; என்னால தூண்டப்பட்டு குணங்களாலேதான் செய்கிறாய். இப்படியே நினைச்சு வேலை செய்து வந்தா அந்த கர்மம் உன்னை ஒட்டாது; என்னைதான் ஒட்டும்.
இப்படி புரிஞ்சு கொண்டு வேலை செய்யலைனா மேலே மேலே கர்ம மூட்டை சேர்ந்து சீரழிஞ்சுதான் போவாய்.
7 comments:
//பலனை கருதாதே; நீ செய்யலை; என்னால தூண்டப்பட்டு குணங்களாலேதான் செய்கிறாய். இப்படியே நினைச்சு வேலை செய்து வந்தா அந்த கர்மம் உன்னை ஒட்டாது; என்னைதான் ஒட்டும்.//
ஆக என்ன தப்புப் பண்ணினாலும் அதெல்லாம் என்னில் கலந்த க்ருஷ்ணனின் குணானுபவங்கள், அதான் என்னை தப்புப் பண்ண வச்சுடுத்து அப்படின்னுடலாம் போல:)
//ஆக என்ன தப்புப் பண்ணினாலும் அதெல்லாம் என்னில் கலந்த க்ருஷ்ணனின் குணானுபவங்கள், அதான் என்னை தப்புப் பண்ண வச்சுடுத்து அப்படின்னுடலாம் போல:)//
செய்யலாமே!
அதுக்கு வரும் விளைவுகளையும் அவனைபோலவே ஸ்தித பிரக்ஞனனா ஏத்துக்க முடிஞ்சா!
//எந்த மனிதர்கள் குற்றங்குறை காணாதவர்களாக//
இதனாலதான் - குறையில்லை மறைமூர்த்தி கண்ணா-ன்னு சொன்னாங்களோ! ;-)
//கர்மம் செய்யறதாலதான் ஈஸ்வரன். இல்லாட்டா அதுக்கு தேவையே இல்லாம பிரம்மமாவே இருக்கும்.//
:-)
சிரத்தையுடன் செய்கின்ற கர்மமும் மெய்யாய்
மறுப்பிலாமல் கர்மயோகம் ஆற்றும் நேர்மையும்
உரமிடும் கர்மமிலாப் பேறு.
//ஆர்வம் வந்தா அப்புறம் கடைபிடிக்க ஆரம்பிச்சுடுவோம்! ஆக அதெல்லாம் வேற படிகள், அவ்ளோதான்.//
நல்லா சொன்னீங்க.
//ஆக என்ன தப்புப் பண்ணினாலும் அதெல்லாம் என்னில் கலந்த க்ருஷ்ணனின் குணானுபவங்கள், அதான் என்னை தப்புப் பண்ண வச்சுடுத்து அப்படின்னுடலாம் போல:)//
இதுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லுவார் - இறைவன் உன்னோட இருக்கான், அவனே இயக்குபவன் என்கிற எண்ணம்/நம்பிக்கை வந்த பின்னாடி உன்னால தவறாக எதுவுமே செய்ய முடியாது - அப்படின்னு.
ஜீவாவுடைய வெண்பாக்கள் எல்லாம் நல்லாருக்கு :)
@ கவி அக்கா
//ஜீவாவுடைய வெண்பாக்கள் எல்லாம் நல்லாருக்கு :)//
ஆமாம். கடைசில தொகுத்து போடலாம் போல இருக்கு!
Post a Comment