Pages

Monday, November 17, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 17


ஸத்ருஷம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி।
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி॥ 3.33 ॥

அறிவுடையோ னேனும் அவனியற்கைக் கொத்த
நெறியே நடந்திடுவன் நீடும்-திறலுடையாய்
பல்லுயிரும் அவ்வவற்றின் பண்பினையே பற்றியுறும்
வெல்லும்வகை யிற்றடுத்தல் வீண்.

அறிவுடையோனேனும் அவன் இயற்கைக்கு ஒத்த நெறியே நடந்திடுவன் நீடும்-திறலுடையாய் பல்லுயிரும் அவ்வவற்றின் பண்பினையே பற்றியுறும் வெல்லும் வகை இற்றடுத்தல் வீண்.


(எல்லா உயிரினங்களும் இயல்பை அடைகின்றன - அதாவது தம் இயல்புக்கேற்றவாறு தம்வசம் இன்றிச் செயல் புரிகின்றன. ஞானியும் தமது இயல்புக்கு ஏற்றுவாறு செயல் புரிகிறார் என்றால் இதில் ஒருவரை பலவந்தமான பிடிவாதம் என்ன செய்யும்?)

அடுத்த சில பாடல்கள்லே ஞான வழில இருக்கிற சில பிரச்சினைகளை சொல்கிறான் கண்ணன்.

பூர்வ வாசனையால் வரும் சுபாவம் விவேகிகளைக்கூட சமயத்துல கவுத்துடும். வாசனை அவ்வளோ பலம் உள்ளது. முயற்சியை விட வாசனை பலமானா முயற்சியை தோக்கடிக்கும். மாறாகவும் இருக்கலாம். இதை ஜாக்கிரதை படுத்ததான் இதை சொல்லறது. உற்சாகத்தை குறைக்க இல்லை. ஈசனை நாடிதான் இதை ஜெயிக்கணும். வாசனா பலத்தால அஜாமிளன் கெட்டு போனாலும் பகவானை நாடியதால கடை தேர்ந்தான்.

ஒவ்வொரு உயிரினத்துக்குமே ஒரு அடிப்படை உணர்வு உண்டு. இன்ஸ்டிங்ட் என்கிறார்களே, அது. அதை ஒட்டிதான் எல்லா பிராணிகளுமே செயல்படுகின்றன. மனுஷன் ஒத்தன்தான் இதுக்கு மாறா செயல்படுகிறவன்னு நினைச்சாலும் அப்படி உறுதியா கிடையாது. ஞானியே வெகு காலமா கூட வர இயல்பு படி நடந்துக்கிறான் அப்படின்னா மத்தவங்க எந்த மாத்திரம்? அடக்குமுறையால லாபம் கிடையாது.

ஒரு கூடையிலே ஒரு மணி நேரம் பூக்களை வெச்சு இருந்தாலே அதன் வாசனை கொஞ்ச நேரம் இருக்கே. கெட்ட வாசனைனா இன்னும் அதிக நேரம் இருக்கும். இப்படி இருக்கிறப்ப ஜன்ம ஜன்மமா வருகிற இந்த இயல்பு எங்கே போகும்?

ஒவ்வொத்தருக்கு ஒரு விஷயம் சிறப்பா இருக்கும். இதுதான் அவங்களோட இயல்பு. ஆனா நாம் யார் இந்த சிறப்புத்தன்மை என்னன்னு பாத்து அதோட போய் பலனடைகிறோம்? குறிப்பா இப்ப எல்லா குழந்தைகளையும் ஐடி எஞ்சினீர் ஆக்கணும், டாக்டர் ஆக்கணும்ன்னு முயற்சி செய்யறோம். அவங்களுக்கு என்ன பிடிக்கும், அவங்க திறமை எதுல இருக்குன்னு யார் யோசனை செய்யறோம்?

(அதனால அர்ஜுனா, க்ஷத்திரியனான நீ உன் இயல்புக்கு மாறா ஞானயோகத்திலே போக முயற்சி செய்யாதே என்கிறான் கண்ணன்.)


7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஜென்ம-ஜென்மாந்திர தொடர்புகளை நல்லாச் சொல்லியிருக்கீங்கண்ணா...சூப்பர்.

Geetha Sambasivam said...

அரியர்ஸெல்லாம் க்ளியர் பண்ணியாச்சு, முழு மார்க்கும் போட்டுடுங்க!

Kavinaya said...

//ஒரு கூடையிலே ஒரு மணி நேரம் பூக்களை வெச்சு இருந்தாலே அதன் வாசனை கொஞ்ச நேரம் இருக்கே. கெட்ட வாசனைனா இன்னும் அதிக நேரம் இருக்கும். இப்படி இருக்கிறப்ப ஜன்ம ஜன்மமா வருகிற இந்த இயல்பு எங்கே போகும்?//

அருமை.

திவாண்ணா said...

@மௌலி
நன்னி!

@ கீ அக்கா, க்ளியர் பண்ணியாச்சா? இனி டெஸ்ட் வைக்க வேண்டியதுதான்!

@ கவி அக்கா நன்னி.
அப்படியே மீன் வைத்த கூடையை கறபனை பண்ணி பாருங்க! சில வாசனைகளுக்கு பலம் மத்ததைவிட அதிகம்!

குமரன் (Kumaran) said...

நீங்கள் இந்த வாசனையைப் பற்றி சொன்னதைப் படித்த போது இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன 'மீனவப் பெண்கள் பூக்கடைக்காரரின் வீட்டில் தங்க நேரும் போது படும் வேதனை'க் கதை தான் நினைவிற்கு வந்தது. நீங்களும் அதைக் குறிபபாக கவிக்காவுக்குச் சொல்லியிருக்கீங்க. :-)

திவாண்ணா said...

:-))
கவி அக்கானாலே பரமஹம்ஸர் நினைவுதான் வருது!

Kavinaya said...

//கவி அக்கானாலே பரமஹம்ஸர் நினைவுதான் வருது!//

:)) நல்ல விஷயம்தானே. மிக்க மகிழ்ச்சி :)