யஜ்ஞஷிஷ்டாஷிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:।
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்॥ 3.13 ॥
வேள்வியினின் மிக்கதனை யுண்பார் விடப்படுவ
ரூழ்வினைக ளின்றொடர்ச்சி யுண்ணின்றுங்-கேள்வியிலாத்
தன்னுடம்புக் காகச் சமைத்துண்பார் பாவத்தை
முன்னுடனே யுண்பார் முயன்று.
வேள்வியினின் மிக்கது அதனை உண்பார் ஊழ் வினைகளின் தொடர்ச்சி விடப்படுவர். உண்ணின்றும் கேள்வியிலாத் தன் உடம்புக்காக சமைத்து உண்பார் பாவத்தை முன் உடனே உண்பார் முயன்று.
(வேள்வியில் எஞ்சிய உணவை உண்கின்ற சான்றோர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் எந்தப் பாவிகள் தம் உடலைப் பேணுவதற்காகவே உணவைச் சமைக்கிறார்களோ, அவர்கள் பாவத்தையே உண்கிறார்கள்.)
இந்த ஸ்லோகத்திலே கண்ணன் கொஞ்சம் ஓவரா போற மாதிரியே கூட தோணும்.
கணபதி ஹோமம் செய்கிறாங்க. மீதி இருக்கிற கொழுக்கட்டையை நமக்கு கொடுப்பாங்க. இஷ்டி பண்ணுகிறாங்க. புரோடாசம் என்கிற யக்ஞ மீதியை நமக்கு கொடுக்கிறாங்க. அது சாப்பிட ரொம்பவே உசந்தது.
பூஜை பண்ணுகிறோம். அவருக்கு சாத்தின ஒரு முழ பூவை எடுத்து நம்மகிட்டே கொடுக்கிறாங்க. கண்ணில ஒத்திகிட்டு அதை தலைல சூடிக்கிறாங்க. நிவேதனம் பண்ணி கேசரியை நம்மகிட்டே கொடுக்கிறாங்க. நாமும் பக்தியோட வாங்கி எல்லாருக்கும் விநியோகம் செய்துவிட்டு நாமும் சாப்பிடறோம். இப்படி எது நமக்கு கிடைத்தாலும் அதை முதல்ல பகவானுக்கு கை காட்டிட்டு (இந்த ப்ரேஸ் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு!வல்லி அக்காவுக்கு நன்னி.) நாம் எடுத்துக்கிறோம்.
நம்ம வீட்டில இருக்கிற தென்னை மரம் எவ்வளவு தேங்காய் நமக்கு கொடுத்தது? அதுக்கு என்னிக்காவது நன்னி சொல்லி இருக்கோமா? அவரை பந்தலுக்கு நன்னி சொன்னோமா? இப்படி எத்தனை நன்னி கெட்டவங்களா இருக்கோம்! சரி அதுகெல்லாம் நன்னி சொல்ல வேணாம். அதெல்லாத்தையுமே படைச்சு நமக்கு பயனாக்கின பகவானுக்காவது நன்னி சொல்லி சாப்பிடலாம்.
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:।
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:॥ 3.14 ॥
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்।
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்॥ 3.15 ॥
அன்னத்தாற் பூதங்க ளுண்டாகு மன்னந்தான்
மின்னத்தாழ் மாரியான் மிக்கியலு-மன்னத்தான்
மாரியது வேள்வியால் வந்தியலு மவ்வேள்வி
காரியம் தாலாகுங் காண்
இக்கருமங் காய மெனச்சேர் பிரமத்தா
மக்கருமஞ் சீவனா லாங்கதுவாஞ்-சிக்கெனவே
யெங்கு நிகழ்வுடலா மிப்பிரமம் வேள்வியிலே
தங்கு நிலையமருந் தான்.
அன்னத்தால் பூதங்கள் உண்டாகும். அன்னம்தான் மின்னத்தாழ் மாரியால் மிக்கு இயலும். அன்னத் தான் மாரி -அது வேள்வியால் வந்தியலும். அவ்வேள்வி காரியத்தால் ஆகும் காண் .
இக்கருமம் காயம் பிரமத்தால், அக்கருமம் சீவனால் ஆங்கு அதுவாம் எனச்சேர். சிக்கெனவே எங்கு நிகழ் உடலாம் இப்பிரமம் வேள்வியிலே தங்கும்.
(உயிரினங்களனைத்தும் உணவிலிருந்து உண்டாகின்றன. மழையிலிருந்து உணவின் உற்பத்தி ஏற்படுகிறது. மழை வேள்வியிலிருந்து உண்டாகிறது. வேள்வி விதிக்கப்பட்ட கர்மங்களிலிருந்து உண்டாகிறது. கர்மங்களின் தொகுப்பு வேதத்தில் உண்டானவை. மேலும் வேதம் அழிவற்ற பரமாத்மாவிடம் தோன்றியவை என்று தெரிந்து கொள். ஆகவே எங்கும் நிறைந்த அழிவற்ற பரப்ரம்ம பரமாத்மா எப்பொழும் வேள்வியில் நிலை பெற்றிருக்கிறார் (என்பது இதிலிருந்தே தெரிகிறது).)
7 comments:
//நிலைய மருந்தான். (??)//
நிலை அமரும் தான்?
//அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:।
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:॥ 3.14 ॥
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்।
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்॥ 3.15 ॥//
பதிவிலே எழுத்தே புரியலை! :(((((((
ஜீவா நன்றி. ஒரு கண் வெச்சுக்குங்க. கொஞ்சம் கடினமாதான் இருக்கு. வேற வெண்பாக்களுக்கு போயிடலாமான்னு பாக்கறேன்.
@ கீ அக்கா பாக்கலை. சரி பண்ணிடறேன்.
இக்கருமங் காய மெனச்சேர் பிரமத்தா
மக்கருமஞ் சீவனா லாங்கதுவாஞ்-சிக்கெனவே
யெங்கு நிகழ்வுடலா மிப்பிரமம் வேள்வியிலே
தங்கு நிலையமருந் தான்.
இக் கருமம் காயம் என சேர் பிரமத்தால் அக் கருமம் சீவனால் அங்கு அதுவாம் சிக்கெனவே எங்கு நிகழ் உடலாம் இப் பிரமம் வேள்வியிலே தங்கும் நிலை அமரும் தான்!
இப்படி வருமா??? தெரியலை, எதுக்கும் அர்த்தம் சரியா வருதானு பாருங்க.நேத்திக்குப் படிக்கவே முடியலை, இப்போ பரவாயில்லை.
உள்ளேனய்யா... :)
உயிர்கள் உணவால் உண்டாகின்றன; உணவு மழையால் உண்டாகின்றது; மழை யக்ஞத்தால் உண்டாகின்றது; யக்ஞம் செயல்களால் உண்டாகின்றது; செயல்கள் ப்ரஹ்மத்தால் உண்டாகின்றது; ப்ரம்ஹம் அழிவற்ற தன்மையில் உண்டாகின்றது; இதனை அறிவாய்; அதனால் எங்கும் நிறைந்திருக்கும் ப்ரஹ்மம் என்றைக்கும் யக்ஞத்தில் நிலைப்பட்டிருக்கிறது - இப்படித் தான் இந்த இரண்டு சுலோகங்களுக்கும் பொருள் தோன்றுகிறது.
இதில் யக்ஞம் நடுவில் வருகிறது. அப்படியிருக்க யக்ஞத்தில் தான் ப்ரம்ஹம் நிலைபெற்றிருக்கிறது என்று எப்படி சொல்லலாம்? புரியவில்லை. அழிவற்ற தன்மையில் தானே அனைத்தும் தோன்றுகிறது; அப்படியென்றால் அதில் தானே அவை நிலைபெற்றிருக்க வேண்டும் - அப்படியே தலைகீழாக அக்ஷரத்திலிருந்து பூதங்கள் வரை சொல்லிச் செல்லலாமே. அக்ஷரத்திலிருந்து உண்டாகும் ப்ரம்ஹம் என்ற போது நீங்கள் தந்திருக்கும் வெண்பா 'காயம் பிரம்மம்' என்று சொல்கிறது - அப்போது ப்ரஹ்ம சப்தத்திற்கு ஒரு பொருளான உடல் என்ற பொருளைக் கொள்ளலாம் - அது பொருத்தமாகவும் தோன்றுகிறது. செயல்கள் எல்லாமே உடலிலிருந்து தானே தோன்றுகின்றன. அக்ஷரத்திற்கு 'ஜீவன்' என்ற பொருளும் பொருத்தம் - ஜீவனில் தான் உடல் நிலைபெற்றிருக்கிறது. ஜீவனும் அக்ஷரம் - அழிவில்லாதது என்றொரு கருத்தும் உண்டு.
உரைநடையில் பொருள் சொல்லும் போது இரு வேறுபாடுகளைக் காண்கிறேன். யக்ஞம் 'விதிக்கப்பட்ட' செயல்களால் என்றும் ப்ரஹ்ம சப்தத்திற்கு வேதம் என்ற பொருளும் தரப்பட்டிருக்கிறது. ப்ரம்ஹ சப்தத்திற்கு வேதம் என்ற பொருளும் உண்டு தான்; ஆனால் இந்த சுலோகத்தில் 'விதிக்கப்பட்ட' என்ற பொருள் தரும் சொல் எதுவும் இல்லை. அதனால் இந்தப் பொருள் பொருந்தி வராதது போலும் வருண தருமத்தை வலியுறுத்த வலிந்து கொள்ளப்பட்டும் பொருளாகவும் தோன்றுகிறது.
அடியேன் சிறிய ஞானத்தன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
நீங்க எழுதி இருக்கிறது சரிதான் குமரன். சரியாகவே புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.
//அப்படியிருக்க யக்ஞத்தில் தான் ப்ரம்ஹம் நிலைபெற்றிருக்கிறது என்று எப்படி சொல்லலாம்? //
தான் வரவில்லையே? எங்கே இருக்கிறது?
வெண்பாவை சொல்கிறீர்களா? எனக்கு புரியாத விஷயத்தில் ஒரு ஜோர் இல் பிரவேசித்ததன் விளைவு. ரொம்ப கடுமையாக இருந்ததால் வேறு ஆசிரியருடைய வெண்பாக்களுக்கு அப்புறமாக தாவி விட்டேன்."
பிரித்து எழுதவே கஷ்டப்பட்டேன். இதன் பொருளே சுத்தமாக புரியவில்லை. இந்த பதிவுகளில் செய்த ஒரு பெரிய தவறு. :-(
அக்ஷரம் சமாசாரம் பின்னால் ஞான வழியில் பார்க்கலாம்.
Post a Comment