Friday, February 6, 2009
பிஜி பாய்ன்ட்ஸ்!
அப்பாடா! இதுக்கு மேலே பிஜி பாய்ன்ட் தான். வேணான்னா விட்டுடலாம்.
5 ஸ்தூல பூதங்கள் - நாம பாக்கக்கூடிய ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் - லேந்து 25 தத்துவங்கள் வந்தன. எப்படி? ஒவ்வொண்ணும் மத்த நாலோடேயும் சம்பந்தப்பட்டதால.
ஆகாயத்தில் ஆகாயம் ன்னு ஆரம்பிச்சு இப்படியே அஞ்சும் முடிச்சு அடுத்து வாயுவில் ஆகாயம்ன்னு ஆரம்பிச்சு.... பெர்முடேஷன் காம்பினேஷன் புரியுது இல்லையா?
50% இருக்கிற ஆகாயம். இதில உண்டானாது மோகம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% வாயு கூடி உண்டானது வெட்கம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% அக்னி கூடி உண்டானது பயம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% நீர் கூடி உண்டானது த்வேஷம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% நிலம் கூடி உண்டானது ஆசை.
இதே போல மீதி பாக்கலாமா?
வாயு + ஆகாயம் = தத்தல்
வாயு = ஓடல்
வாயு + அக்னி = இருத்தல்
வாயு + நீர் = நடத்தல்
வாயு + நிலம் = கிடத்தல்
அக்னி + ஆகாயம் = சங்கமம்
அக்னி + வாயு = ஆலஸ்யம்
அக்னி = நித்திரை
அக்னி + நீர் = தாகம்
அக்னி + நிலம் =பசி
நீர் + ஆகாயம் = சுக்கிலம்
நீர் + வாயு = ரத்தம்
நீர் + அக்னி = வியர்வை
நீர் = சிறுநீர்
நீர் + நிலம் = உமிழ்நீர்
நிலம் + ஆகாயம் = உரோமம்
நிலம் + வாயு = நரம்பு
நிலம் + அக்னி = தோல்
நிலம் + நீர் = மாமிசம்
நிலம் எலும்பு
அப்பாடா! இதெல்லாம் எங்கேயிருந்து உரை ஆசிரியர் குப்புசாமி முதலியார் பிடிச்சாரோ தெரியலை.
இப்ப அவஸ்தைகள் மூணுன்னு நமக்கு தெரியும். ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி.
நனவு, கனா, சுழுத்தின்னு தமிழ்ல.
இது வரை நாம படிச்சதை இதுக்கு தொடர்பு படுத்தி பாக்கலாமா?
ஸ்தூல உடம்பிலே ஜாக்ரத் இருக்கும். சூக்கும உடம்பிலே ஸ்வப்னம். காரண உடம்பிலே சுசுப்தி.
பஞ்ச கோசங்களை கொஞ்சம் ரிவைஸ் பண்ணலாம்.
அன்ன மயம் - சுக்கில/ சுரோணிதங்களால ஆன இந்த – என்ன புரியலையா? விந்து, கரு முட்டையால ஆன- தோல், ரத்தம், மாமிசம், நரம்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் என்கிற ஏழு தாதுக்களால ஆக்கப்பட்டு அன்னத்தால வளர்ந்து, கடைசியிலே பூமியில் அழிகிற இந்த பருப்பொருளான உடம்பே அன்ன மய கோசம்.
கர்ம இந்திரியங்களோடு கூடின ப்ராணன்களே ப்ராணமய கோசம்.
ஞான இந்திரியங்களோடு கூடின மனமே மனோ மய கோசம்.
ஞான இந்திரியங்களோடு கூடின புத்தியே விஞ்ஞான மய கோசம்.
காரண தேகமே (அஞ்ஞானம்) ஆனந்த மய கோசம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வணக்கம்.,
நான் தாயுமானவனாக இருக்கிறேன்.வலைபூ கண்டேன்.மிக்க மகிழ்ச்சி.நாளதுவரை இப்படிப்பட்ட தகவல்கள் தாங்கிய வலைபூ பார்வைக்கு கிட்டாதா..என்ற ஏக்கம் நிீங்கியது. தொடரட்டும் உம் பணி.
உம் வலைபூவை எடுத்துசெல்ல என்னாலானதை நிச்சயம் செய்வேன்.
நன்றி.
வெங்கட்.தாயுமானவன்
நாராயணா! இவ்வளோ நாள் இந்த பின்னூட்டத்துக்கு பதில் போடாம இருந்து இருக்கேன்!
மன்னிக்கணும் வெங்கட். நல்வரவு.
பாராட்டுக்களுக்கு நன்றி!
Post a Comment