Pages

Friday, February 20, 2009

கேள்வியும் பதிலும்



வாசகர் கடிதம் ஒன்று வந்தது. அருமையான கேள்வி எழுப்பட்டு உள்ளது. கேள்வியும் பதிலும் இதோ:
கேள்வியும்

பொறிதுயில் ஆழ்த்துனருக்கு ஒரு கேள்வி -

தூங்கும்போது 'நான்' இல்லை, ஆனா 'நல்லாத் தூங்கினேன்' ன்னு சொல்றதுக்கு ஏதோ ஒண்ணு இருக்கு, அதுதான் consciousness -னு சொல்றோமே -

அப்படின்னா, நீங்க ஒருத்தரை பொறிதுயில்ல ஆழ்த்தும்போது அந்த consciousness கூட இல்லாம போயிடுதே. அப்ப அது எங்கே போகுது? என்ன ஆகுது? தூங்கும்போதும் ஐம்புலன்களும் விழிப்பாதானே இருக்கு? அதாவது வலியையோ வாசனையையோ அப்பவும் உணர முடியுமே. ஆனா அனஸ்தீஸியாவில் இருக்கும்போது ஒண்ணுமே தெரியறதில்லையே.

விளக்குங்களேன்...

பதிலும்
அருமையான கேள்வி!
பொதுவாகவே பதில் போட்டுட்டலாமா?
ஜாக்ரத், சொப்னம், சுசுப்தி - இது ஒரு மாதிரி வகைப்படுத்தல்தான். இதுக்கும் மேலே துரியம், துரியாதீதம்ன்னு எல்லாம் உண்டு.  பின்னால அஞ்ஞான பூமி ஏழும் ஞான பூமி ஏழும் வரப்போறது. அப்பவும் இந்த மாதிரி சிலது சரியா பொருந்தாது.

ஒத்தர் மயக்கம் போட்டு விழுந்துட்டா இது என்ன நிலை?
ப்ரம்ஹ சூத்திரத்துல என்ன சொல்றாங்கன்னா இது ஒரு ¨பாதி சுசுப்தி-ஆழ்துயில்¨ நிலை. இதோட தாத்பர்யம் என்னன்னா இது ஒரு ஸ்பெக்ட்ரம். நிச்சயமா இவ்வளவுதான்னு சரியா பிரிக்க முடியாது.
 ஆழ்துயில்- சுசுப்தி  நிலையிலே அந்தக்கரணமும் (அகங்காரமாய்),  பிராணனும் மட்டுமே இயங்கும். மத்ததெல்லாம் இயங்காது. அதனால வலி தெரியாது. ரிப்லெக்ஸ் இருக்காது.
அனெஸ்தீசியா ஆழ்துயில் போலத்தான். சாதாரணமா அதிலேந்து வெளி தூண்டுதலை அதிகமாக்கி எழுப்ப முடியும். இங்கே மருந்தோட விளைவால எழுப்ப முடியாது என்பதே வித்தியாசம்.
சிந்தனையை தூண்டியதுக்கு நன்றி!

திவா


4 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

இதுவரைக்கும் தாங்கள் சார்ந்த துறையை ஆங்கிலப்படுத்தி பார்க்கவேண்டும் என்று தோன்றியதேயில்லை... ஆச்சர்யமா இருக்கு ஏன் தோன்றவில்லையென்று போகட்டும்... கேள்விக்கு பதில் இன்னும் கொஞ்சம் விரிவா சொன்னா புரியுமோ....

திவாண்ணா said...

//இதுவரைக்கும் தாங்கள் சார்ந்த துறையை ஆங்கிலப்படுத்தி பார்க்கவேண்டும் என்று தோன்றியதேயில்லை//

:-))
என்ன துறைன்னு நினைச்சீங்க?
இன்னும் விவரிக்க இது நேரமில்லைன்னு நினைக்கிறேன். ஏற்கெனெவே கொஞ்சம் உற்சாகத்துல அதிகமா எழுதி நிறைய பேருக்கு புரிதல் குறைஞ்சு போச்சு. பதிவில எழுதின மாதி அஞ்ஞான பூமிகள் 7, ஞான பூமிகள் 7 ன்னு பின்ன்ன்ன்னாலே எழுதப்போறேன். அப்ப இன்னும் தெளிவாகலாம். குறிப்பா இப்ப எதாவது புரியலைன்னா சொல்லுங்க.

ரொம்ப எளிதா கேள்விக்கு பதில்:

வண்ணங்கள் ஏழுன்னு சொன்னாலும் நிறைய ஷேட் இருக்கிறாப்போலே இந்த மூன்று நிலைகளா சொன்னாலும் பல நிலைகள் உண்மையிலே இருக்கும்.

Kavinaya said...

//பின்ன்ன்ன்னாலே//

அப்படின்ன ரொம்ம்ம்ம்ப பின்னால போலருக்கு :)

//வண்ணங்கள் ஏழுன்னு சொன்னாலும் நிறைய ஷேட் இருக்கிறாப்போலே இந்த மூன்று நிலைகளா சொன்னாலும் பல நிலைகள் உண்மையிலே இருக்கும்.//

இப்படிச் சொல்லும்போது கொஞ்சம் புரியறாப்ல இருக்கு :)

திவாண்ணா said...

அப்படின்ன ரொம்ம்ம்ம்ப பின்னால போலருக்கு :)//

ஆமாம்!

இப்படிச் சொல்லும்போது கொஞ்சம் புரியறாப்ல இருக்கு :)//

இன்னும் கொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ண்ங்க. மூல வண்ணங்கள் மூணுதான். அதிலேந்து எத்தனை எத்தனை......