Pages

Wednesday, February 25, 2009

மீள் பதிவு -பரப்பிரம்மத்திலேந்து வருகிற ராஜச குணம்



அடுத்து பரப்பிரம்மத்திலேந்து வருகிறது ராஜச குணம். இதுக்கு அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் அப்படி எல்லாம் பேர் உண்டு. இதுல பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை எப்படி பரிணாம மாற்றம் ஆகுதுன்னா இந்த கணக்கில்லாத சீவர்களா ஆகும். இந்த சீவர்களுக்கு பிரஞ்ஞானன் ன்னு பெயர்.
சிவனே ன்னு கிடக்கிற சத்வம் இறைவனாகவும், எப்பவும் ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கிற ராஜசம் இந்த இயல்புடைய மனிதர் (ஜீவன்கள்) ஆகவும் ஆகிறது புரிஞ்சுக்க முடியுதுதானே?

33.
ஈசனுக் கிது சுழுத்தி யிதுவே காரண சரீரம்
கோசமா னந்தமாகுங் குணமிரா சதம வித்தை
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவகோடி
நாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞனாமே

ஈசனுக்கு இது (இந்த சுத்த மாயையே) சுழுத்தி. இதுவே காரண சரீரம்; ஆனந்த மய கோசம் ஆகும்.

இரண்டாம் குணம் இராசதம் (ராஜஸம்). [அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் எனவும் பெயர்கள் உண்டு]. தேசறு (விளக்கமில்லாத) அவித்தை தோறும் (பிரதிபலித்த) சிற்சாயை (சித்தின் நிழல்) சீவகோடி(சீவன்). நாசமாகும் இந்த சீவ உயிர்க்கு அப்போது நாமமும் (பெயரும்) பிராஞ்ஞனாமே. (பிரஞ்ஞானன் ஆகும்).

இப்படி உண்டாகிற சீவர்களுக்கு அந்த ராஜஸ குணமே ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம். அதாவது சீவர்கள்தான் ராஜசம்; ராஜசம்தான் சீவர்கள்.

வித் என்பது ஞானம். அவித்தை ஞானமல்லாதது, அதாவது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திலேயே இருக்கிறதுதானே சீவர்களாகிய நம்மோட இயல்பு? அவித்தை கணக்கில்லாம இருக்கிறது. உண்மை ஒண்ணுதான். பொய் பலவாகவும் இருக்குமில்லையா? அது போல. இப்படி கணக்கில்லாம இருக்கறதால கணக்கில்லாத வகை சீவர்களையும் நாம் பாக்கலாம்.

ஈசன் சத்வத்திலே விஷ்ணு, ப்ரம்மா, ருத்திரன் ஆக சத்வ, ராஜச, தாமசம் வெளிப்பட்டாப்போல சீவர்களிலேயும் இதே போல பிரிவுகளை பாக்கலாம்.
சத்துவம் அதிகமாகும் போது ஞானத்திலே நாட்டம் இருக்கிறவங்களா இருப்பாங்க. ஆன்மீக பதிவுகள் எழுதுவாங்க; ஆன்மீகம் பார் டம்மீஸ் படிப்பாங்க. :-)
ராஜசம் அதிகமாகும் போது சீவர்கள் எப்பவும் வேலை செய்கிறவங்களா இருப்பாங்க. உலகமே இவங்களாலதான் இயங்குது!
தாமசம் அதிகமாகும் போது சோம்பி திரிஞ்சு மயக்கத்தோட காலம் போக்கறவங்களா இருப்பாங்க.

முன்னம் சொன்னது போல எல்லாருக்குமே ஒரு குணம் அதிகமானாலும் மற்ற 2 குணங்களும் கொஞ்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும்.

34
அழுக்கொடு பற்றுஞ்சீவர்க் கதுவேயா நந்தகோசம்
சுழுத்திகா ரணசரீரஞ் சொன்னதிம் மட்டுமோக
முழுக்குணத் திரண்டால் வந்த மூலவாரோபஞ் சொன்னோம்
வழுத்துசூக் குமவாரோப வழியுநீ மொழியக்கேளாய்

அழுக்கொடு (அவித்தையுடன்) பற்றும் (அவித்தையில் பொருந்தும்) சீவர்க்கு அதுவே (அந்த அவித்தையே) ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம். சொன்னது இம் மட்டும் (இவ்வளவும்) மோக (மயக்கமாக தோன்றிய பிரக்கிருதியின்) முழுக்குணத்து இரண்டால் (சத்துவ, ரஜோ குணங்கள்) வந்த மூல ஆரோபம் (காரண அத்தியாசம்) சொன்னோம். வழுத்து (கூறாத) சூக்கும ஆரோப வழியும் மொழிய நீ கேளாய்.

{ஸ்படிகம் அடுத்த வண்ணம் ஆவது போல அவித்தை. அவித்யா காரியங்களில் பொருந்துதலால் அது சீவனின் இயல்பும் ஆனதால் "அழுக்கொடுபற்றும்”. சுழுத்தி சுகத்தையும் ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளில் பிரியம், மோதம், பிரமோதம் முதலான சகத்தை அனுபவிப்பதால் "ஆனந்த மய கோசம்”. ஜக்ரத் ஸ்வப்ன அவத்தை அடங்கியிருத்தலால் "சுழுத்தி". சீவன் தோன்றினதற்கும் ஸ்தூல சூட்சும சரீரம் உண்டாவதற்கும் மூலம் ஆகையால் "காரண சரீரம்".}




10 comments:

Kavinaya said...

34 அவ்வளவா புரியல :(

மெளலி (மதுரையம்பதி) said...

படம் நன்றாகத் தெரிகிறது.... :-)

திவாண்ணா said...

பரவாயில்லை.
பூர்த்திக்காக செய்யுளையும் கொடுக்கிறேன். கருத்த பதிவு உள்ளே எழுதறேன்.

திவாண்ணா said...

// படம் நன்றாகத் தெரிகிறது.... :-)//

அப்பாடா! ஒரு வழியா எப்பாடி ப்லாஷ் செய்யறதுன்னு ஓரளவு கத்துண்டாச்சு!

Geetha Sambasivam said...

//சிவனே ன்னு கிடக்கிற சத்வம் இறைவனாகவும், எப்பவும் ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கிற ராஜசம் இந்த இயல்புடைய மனிதர் (ஜீவன்கள்) ஆகவும் ஆகிறது புரிஞ்சுக்க முடியுதுதானே?//

சத்வம் இறைவனாக மட்டுமே ஆகிறதா?? ராஜசம் மட்டுமே மனிதராய் ஆகுமா?? கொஞ்சம் குழப்பமாவே இருக்கு இங்கே. :(

//சத்துவம் அதிகமாகும் போது ஞானத்திலே நாட்டம் இருக்கிறவங்களா இருப்பாங்க. ஆன்மீக பதிவுகள் எழுதுவாங்க; ஆன்மீகம் பார் டம்மீஸ் படிப்பாங்க. :-)//

அட, அப்போ எனக்கும் சத்துவம் அதிகமாகி இருக்கு இல்லையா??? :)))))))))

இங்கே சத்துவம் அதிகமும் ஆகும்னு சொல்றீங்க. முழுதும் சத்துவமே நிறைஞ்சு அனைவரும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?

ம்ம்ம்ம்ம் ஈசனுக்கே மூன்று குணங்கள் என்னும்போது மனிதருக்கும் இருக்கத் தானே செய்யும்!

Geetha Sambasivam said...

மிச்சத்துக்கு மெதுவா வரேன். ரொம்ப கனமான விஷயம்.

Geetha Sambasivam said...

படம் எல்லாம் நல்லா இருக்கு. உங்கள் உழைப்புக்கு ஒரு "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ"

திவாண்ணா said...

//சத்வம் இறைவனாக மட்டுமே ஆகிறதா?? ராஜசம் மட்டுமே மனிதராய் ஆகுமா?? கொஞ்சம் குழப்பமாவே இருக்கு இங்கே. :(//

ஆமாம். ஆனா அதுக்கு அப்புறம் உள்பிரிவு வேற. அதிலேயும் திருப்பி சத்வம் ராஜசம் தாமசம் ந்னு பிரியும்.இதுதான் குழப்புதுன்னு நினைக்கிறேன்.

//அட, அப்போ எனக்கும் சத்துவம் அதிகமாகி இருக்கு இல்லையா??? :)))))))))/

ஹிஹிஹி1 ஒரு வாரம் தள்ளி ஆயிடுத்துன்னு நினைக்கிறேன்!
:P

//இங்கே சத்துவம் அதிகமும் ஆகும்னு சொல்றீங்க. முழுதும் சத்துவமே நிறைஞ்சு அனைவரும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? //

போரடிக்காது? வெரைடிதான் ஸ்பைஸ் ஆப் லைப் ந்னு சொல்லுவாங்க.

//ம்ம்ம்ம்ம் ஈசனுக்கே மூன்று குணங்கள் என்னும்போது மனிதருக்கும் இருக்கத் தானே செய்யும்!//
சரிதான்!

திவாண்ணா said...

படம் எல்லாம் நல்லா இருக்கு. உங்கள் உழைப்புக்கு ஒரு "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ"

நன்னி!

Geetha Sambasivam said...

//ஹிஹிஹி1 ஒரு வாரம் தள்ளி ஆயிடுத்துன்னு நினைக்கிறேன்!
:P//


grrrrrrrrrrrrrr