Saturday, February 21, 2009
சத்துவ குணத்திலே படிகிற ப்ரம்ம சாயை
முதல்லே பாக்கபோறது சத்துவ குணத்திலே படிகிற சாயை என்ன ஆகிறது ன்னு.
நல்லா தெளிஞ்ச தண்ணீர் போல இது தோன்றும்.
சத்துவ குணத்தோடே விரவி கலந்து இருந்தாலும் குணங்களோடேயும் மாயையுடனும் ஒட்டாது. ஒரு க்ரிஸ்டல் துண்டு இருக்கு. அதுக்குன்னு ஒரு நிறமும் கிடையாது. பக்கத்திலே இருக்கிற பொருளோட வண்ணம் அதிலே தெரியும். அது போல இந்த நிழலும். தெரியும்; ஆனா ஒட்டாது.
இதுக்கு அந்தர்யாமி ன்னு பெயர். இது எல்லா சரீரங்கள் உள்ளேயும் இருக்கும். அதனாலதான் அந்தர்யாமின்னு பேர். ஜடமா இருக்கிற உடம்புக்கு உயிரோட்டம் கொடுத்து ஆட்டுகிறவன் இவனே. இவனை முன்னிட்டுதான் எல்லா செயல்களும் நடக்குது. இவனுக்கு பெயர் ஈசன் (ஈஸ்வரன்.)
இந்த ஈஸ்வரன் சிவன் இல்லை. அப்படி இங்கே தமிழ் நாட்டிலேதான் ஒரு மாயை இருக்கு. மத்த எல்லா இடத்திலேயும் இப்படி சொன்னா கடவுள் அப்படின்னுதான் புரிஞ்சுப்பாங்க.
32. முக்குணங்களால் ஜகஜீவ பரன் உற்பத்தி. முதலில் பரன் உற்பத்தி:
இக்குணங்களிலே விண்போன் றிருக்குஞ் சிற்சாயை தோன்றும்
முக்குணங்களி னுந்தூயதா முதற்குண மாயையாகும்
அக்குணப் பிரமச் சாயை யந்தரி யாமி மாயை
எக்குணங்களும்பற் றாதோ னிமித்தகா ரணனா மீசன்.
இக்குணங்களிலே (இந்த சத்துவம் முதலான குணங்களிலே) விண் போன்று (ஆகாயம் போல பிரியாமலும், எங்கும் நிறைந்தும், அதிசூக்குமமாயும், பற்றறும்) இருக்கும் சிற்சாயை (சித்தின் பிம்பம்) தோன்றும். முக்குணங்களினும் தூயதான முதற் குணம் மாயையாகும் [சத்துவம் மாயை எனப்படும்]. அக்குண (அந்த சத்துவத்தில்) பிரமச்சாயை (பிரதிபலிக்கும் பிரம சைதன்யத்தின் சொரூபம்) அந்தரியாமி [எனப்படும்]. {இந்த அந்தரியாமி காரண சரீரத்தை அபிமானித்துக் கொண்டு சகல சரீர உள்ளீடாக இருந்துகொண்டு ஆட்டுகிறவன்.} மாயை(யிலும்) எக்குணங்களும் (களிலும்) பற்றாதோன் (சம்பந்தப்படாதவன்) நிமித்த காரணனாம்; (யாருடைய சக்தியால் நடக்கிறதோ அவன் நிமித்த காரணன்) இவன் பெயர் ஈசன்.
கீழே ப்ரமத்திலேந்து மூல ப்ரக்ருதியும் அதிலேந்து 3 குணங்கள் வரது, சத்வ குணத்திலேந்து மூன்று விதமா ஈசனின் வெளிப்பாடும் பரிசோதனையா போட்டு இருக்கேன். எப்படி வருமோ பாக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
புரிஞ்ச மாதிரி இருக்குண்ணா..
//பரிசோதனையா போட்டு இருக்கேன். எப்படி வருமோ பாக்கலாம்.//
இது எனக்கு தெரியவே இல்லை.
நேத்து பரிசோதனைல வந்ந்தது. இப்ப வரலை. ஏன்னு ஒத்தர்கிட்டே கேட்டுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.
கோப்பை வேற இடத்துக்கு மாத்திட்டேன். இப்ப எனக்கு தெரியுது, உங்களுக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்.
Post a Comment