Pages

Tuesday, February 17, 2009

மூலப்ரக்ருதி மீள் பார்வை-2



அஹா! காரியம் நடந்துன்னு சொன்னா அது கர்மா ஆயிடுத்து.
அப்ப அதுக்கு எதிர்வினை இருக்கும், பலன் இருக்கும். அதை அனுபவிச்சு தீர்க்கணும் என்கிறது இயற்கை விதி. அப்படி தீர்க்காட்டா?

தீர்க்காட்டா திருப்பி பிறப்போம். அப்படி பிறக்கும்போது மேலும் பல காரியங்களை பண்ணுவோம்; திருப்பி பிறப்போம்.
இப்படி திருப்பி திருப்பி பிறக்கிறதை விடணும் என்கிறதுதான் நம்ம குறிக்கோள். அப்பதான் கஷ்டமில்லாம ஆனந்தமா இருக்கலாம். ஏன்னா பிறப்பில்லாத நிலை பூரணமான நிலை. அங்கே இருப்போம்; எல்லாமே அறிஞ்சு இருப்போம்; ஆனந்தமாயும் இருப்போம். இதைத்தவிர வேற ஒண்ணுமில்லை.
சரி அப்படி ஆகலை, திருப்பி திருப்பி பிறந்தா இப்படியே முடிவில்லாம போய் கொண்டு இருக்குமா?
-----
இல்லை, படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பகல் பொழுது ஆனதும் தூங்க போயிடுவாராம்! அப்போ சிருஷ்டி எல்லாம் நின்னு போயிடும். பிறப்பு எல்லாம் இடை நிறுத்தம் ஆகிடும். பூ,புவ, சுவர் லோகங்கள்லே இருக்கிற அத்தனையும் ஒண்ணா போயிடும். பிரம்மா விழிச்சுக்கொண்டு திருப்பி படைக்க ஆரம்பித்தால் திருப்பி சீவர்கள் தோன்றி தோன்றி... இப்படி ஒரு பகல் என்கிறது ஒண்ணும் அதிகமில்லை ஜென்டில்மென்! நம்ம கணக்கிலே 4,320,000,000 வருஷங்கள்தான்! இரவு அதே நேரம். இந்த நேரத்திலே சிருஷ்டி இருக்காது. இப்படி 360 நாட்கள் ப்ரம்மாவுக்கு ஒரு வருஷம். இப்படி 100 வருஷம் அவரோட ஆயுசு!

அப்புறம் பிரம்மாவோட காலமும் முடிஞ்சு போயிடும். எல்லா சீவர்களும் திருப்பியும் ஒடுங்கிடுவாங்க. இப்படி ஆனது முடிஞ்சு சிருஷ்டி திருப்பி ஆரம்பிக்க அடுத்த பிரம்மா தோன்றணும்.

முன்னே சொன்னதுக்கு அவாந்தர பிரலயம் ன்னும் பின்னாலே சொன்னதுக்கு மகா ப்ரலயம்ன்னும் சொல்கிறாங்க. இப்ப இந்த 2 போதும்!

அவாந்தரத்திலே இந்த 3 லோகங்கள்லே இருக்கிற சீவர்கள் எல்லாம் பிரம்மத்தோட ஐக்கியமாகிடும். அதே போல மகா ப்ரலயத்திலே 14 லோகங்களில் உள்ளதும் லயமாயிடும்.

லயம்ன்னா ஒரு தனித்தன்மையும் இல்லாமன்னு இல்லை. ஒரு செயலும் இல்லாம.

மெழுகு உருண்டையிலே பொன் துகள் போல லயமான பொருளிலே சீவர்களோட ஒரு தன்மை இருக்கும். அது அந்த சீவனோட கர்மாவை பொறுத்தது. அது திருப்பியும் சீவன் பிறப்பெடுக்கும்போது தனி சீவனா பிறக்க காரணமாகும். காரணம்... ஆமாம், பிறவிக்கு காரணம்தான். அதனால இதுக்கு காரண சரீரம்ன்னு பேர். இது என்னன்னு அப்புறம் பாக்கலாம்.

முதல் முதல்லே கர்மா இல்லாம எப்படி சீவர்கள் பிறந்தாங்க?
இதுக்கு விடை கிடையாது.

மேலை விஞ்ஞானத்திலே ஆந்த்ரபோமார்பிக் பிரின்சிபிள்ன்னு ஒரு விஷயம். இந்த உலகம் இருக்க ஒரு சின்ன வாய்ப்புதான் இருக்கு. அது இருக்கிறதாலேதான் இந்த உலகமும் இருக்கு; இதைப்பத்தி பேசிகிட்டு நாமளும் இருக்கோம். இது எப்படி வந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணா விடை இல்லை.
அப்ப இதை ஒத்துக்க முடியாதுன்னா சொல்ல முடியும்? எப்படியோ நடந்து இருக்கிறதாலதானே இதைப்பத்தி பேசறோம்?
அதனால எப்படி நடந்ததுன்னு தெரியலைனா அது நடக்கவே இல்லைன்னு சொல்ல முடியாது. நடந்ததோட அத்தாட்சிதான் - ரிசல்ட் தான் எதிரிலியே இருக்கே!

சரி சரி, லயத்திலேந்து பிறப்புன்னா அது எப்படி நடந்ததுன்னு கேட்கலாம்.
ஆ! அதுக்கு விடை இருக்கு.


5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

மஹா பிரளய சமயத்தில் லயம் என்ன ஆகிறது?.

திவாண்ணா said...

ஈரேழு உலகங்களும் காணாமல் போயிடும்.காலம் என்கிறதே கூட இல்லாமல் போயிடும்.காலமே இல்லை என்கிறதால எப்ப அடுத்து என்கிற கேள்வி இல்லை. காலதத்துவம் வந்து பிரம்மா வந்து படைப்பு நடக்கும். எப்போது ஒடுங்கின சீவர்கள் கர்மா படி திருப்பி வர ஆரம்பிக்கிறாங்களோ அப்ப சிருஷ்டி ஆரம்பிக்கிறது அப்படின்னே வெச்சுக்கலாம்.அந்த ப்ராஸஸ்தான் ப்ரம்மத்திலேந்து ஒவ்வொண்ணா வருகிறதுன்னு முன்னே சொன்னேன். இனி திருப்பி சொல்வேன்.
மகா ப்ரலயத்திலேயும் சீவர்களோட காரண சரீரம் செயலத்து ஒடுங்கி இருக்கும்.

Kavinaya said...

இப்ப கொஞ்சம் பரவாயில்லாம புரியுது :)

Geetha Sambasivam said...

//காலதத்துவம் வந்து பிரம்மா வந்து படைப்பு நடக்கும். எப்போது ஒடுங்கின சீவர்கள் கர்மா படி திருப்பி வர ஆரம்பிக்கிறாங்களோ அப்ப சிருஷ்டி ஆரம்பிக்கிறது //

இது ரொம்ப நாளா குழப்பம் ஒரு விஷயமா இருக்கு. ஒவ்வொரு மஹா ப்ரளயத்தின் போதும் ஏற்கெனவே ஒடுங்கிய சீவர்கள் தான் அவரவர் கர்மாவுக்கு ஏற்றாற்போல் பிறப்பு எடுப்பாங்களா? இல்லைனா முழுதும் புதுசா?

அதாவது இப்போ "நான்" என்னும் இந்த உடம்பினுள் இருக்கும் என்னுடைய இந்தப் பிறப்பின் ஆதாரமான சீவனே திரும்பியும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்குமா?? கொஞ்சம் மெதுவாவே படிக்க வேண்டி இருக்கு!

Geetha Sambasivam said...

//மகா ப்ரலயத்திலேயும் சீவர்களோட காரண சரீரம் செயலத்து ஒடுங்கி இருக்கும்.//

அதாவது ஏற்கெனவே பிறப்பெடுத்திருந்த அனைத்து சீவர்களும்??? எல்லாமே முன்னால் தீர்மானிக்கப் பட்டு இருக்கும்???? ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு ராமாவதாரம் நடக்கும்னும் சொல்றாங்க இல்லை? அது மாதிரி? அப்போ திரும்பவும் வர கலியுகத்தில், இதே மாதிரி நான் நானாகவே பிறப்பேன்???