Pages

Monday, February 23, 2009

சூக்ஷ்ம சரீரம்.


சாதாரணமா நாம முழிச்சிட்டுதான் இருக்கோம். வாத்தியார் கணக்கு போட சொல்கிரப்பவும், டாமேஜர் வேலையை முடிச்சுட்ட இல்லன்னு கேட்கிரப்பவும் முழிக்கிற முழிப்பு இல்லே! நனவு! விழிப்பு. நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிகிறது. ஆபத்து வராம ஜாக்கிரதையா இருக்கோம்.
அஹா! அதான் ஜாக்ரத் என்கிறது.

அப்புறம் வாத்தியார் பாடம் நடத்தறப்ப போர் அடிச்சுதுன்னாலும் ஆபீஸ்லேயும் சொகமா தூங்கறோம். அப்ப நம்ம அபிமான தேவதைகள் எல்லாம் வந்து டான்ஸ் ஆடறாங்க. இப்படி கனவு காண்றோம்! பின்ன நனவுலேயா வந்து ஆடுவாங்க? அம்பி, யாருப்பா நீ ன்னு கேப்பாங்க. இது கனவு நிலை.

நாலு நாள் முழிச்சி கோட் எழுதி ப்ராஜக்ட் முடிச்சு கொடுத்திட்டு ஒரு வழியா அப்பாடான்னு போய் தூங்கறோம். செம தூக்கம். ஒரு வழியா முழிச்ச பிறகு ரூம் மேட் என்னடா எப்படி இருக்கேன்னு கேக்கிறான். அடடா! செம தூக்கம். சொகமா தூங்கினேன் ஒரு கனா கூட கிடையாதுங்கிறோம். ம்ம்ம்ம்ம்...விஞ்ஞானிகள் சொல்கிறாங்க; கனா காணாம யாருமே இருக்க மாட்டாங்க. அதை மறந்து போயிடுவாங்க. நம்ம ஜீவா மாதிரி முழுச்சுகிட்ட உடனே என்ன கனவு கண்டோம்ன்னு எழுதி வைக்கலைனா அது RAM ல இருந்த தரவு ஷட் டவுன் பண்ண கணினியிலே மறைஞ்சு போற மாதிரி மறந்து போயிடும்.
கனவு காணாமலும் பல நேரம் இருப்போம். இது ஆழ் துயில். இதுக்கு புரியாத மாதிரி பேர் வைக்கணும்நு சுசுப்தி என்கிறாங்க. சுழுத்தின்னும் சொல்வாங்க.

ஜாக்கிரதையோட இருக்கிற சமயம் நாம எதிரே ஆளை பாக்கிறோம். ஆளா? சாப்பாடால வளந்த உடம்புதான் முக்கியமா கண்ணுல படுது. அது என்ன? பாக்கிற ஆள் ராமன் நு வெச்சுப்போம். அந்த கை ராமனா? இல்லை. அந்த கால்? இல்லை. பின்னே? அந்த உடம்பை முழுக்க விவரிச்சாலும் அது ராமன் இல்லை. பின்னே? அது ராமனோட உடம்பு. அதாவது நாம பாக்கிரது சாப்பாட்டால வளர்ந்த ராமனோட உடம்பு. அன்ன மய கோசம். அன்னம் னா உணவு. ஆந்திரால இன்னும் சமைத்த அரிசி அன்னம்தான். தமிழ் வார்த்தையானாலும் நாம பயன்படுத்தறதில்லே! கோசம் ன்னா உறை. Cover.
இந்த பார்க்கக்கூடிய தொடக்கூடிய கண பரிமாணம் இருக்கிற உடம்பை தூல (ஸ்தூல) சரீரம் அப்படின்னும் சொல்கிறாங்க.

ஒருவர் இறந்து போனால் இந்த உடம்பு அப்படியேதான் இருக்கு, கொஞ்ச நேரமாவது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அழுகி சிதைந்துபோகும். அதுக்கு முன்னாலே அதை கொண்டு எரிச்சுடுவோம் அல்லது புதைச்சுடுவோம். டாக்டர் வந்து பரிசோதனை பண்ணி பாத்துட்டு சினிமால வர மாதிரி கண்ணாடியை கழட்டிட்டு ஐ ஆம் சாரி ன்னுட்டு போயிடுவார். ஏன் நாம அழறோம்? ராமனோட உடல் அங்கேயே இருக்கே?
உடல் அங்கதான் இருக்கு. ஆனா இந்த உடல் பாக்க முடியாது, மூச்சுவிடாது, கை கால்கள் அசையாது. இந்த உடலால சிந்தனை பண்ண முடியாது.
அப்ப ஏதோ காணாம போச்சு! என்ன அது?
இப்ப செத்து போனா தூய தமிழ்லே டெத் ஆயிடிச்சுங்கிறோம். முன்னேயெல்லாம் ப்ராணன் போயிடுத்து ம்பாங்க. இந்த ப்ராணன் என்கிறது நம்ம உடம்பிலே சில வேலைகள் நடக்க தூண்டுதலா இருக்கிற சக்தி. அது செய்கிற வேலையை பொறுத்து அதுக்கு 5 அல்லது 10 பேர் உண்டு. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதையே பிராண மய கோசம் - ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை என்கிறோம்.
இந்த ப்ராணன் போகு முன்னே கூட கை கால்கள் எல்லாம் செயலிழந்து போயிடும். இப்படி செயல் செய்கிரதெல்லாம் கர்ம இந்திரியங்கள் என்கிறாங்க. செத்துப்போனது என்ன சூப்பர் படமா இருந்தாலும் பாக்க முடியாது; ஓல்ட் ஸ்பைஸ் சென்டா இருந்தாலும் வாசனை நுகர முடியாது, டேய் ராமா ராமான்னு கரடியா கத்தினாலும் கேட்க முடியாது. அதாவது உணர்கிற -தெரிஞ்சுகிற சக்தி போச்சு. இப்படி உணர்கிறது ஞான புலன்கள். ஞான இந்திரியங்கள்.
செத்து போனது எதுவோ அது யோசிக்க முடியுமா? செத்து போயிட்டோம்ன்னு அழுமா? அடுத்த பிறவி எடுப்போம்ன்னு நிச்சயமா இருக்குமா? என்னென்ன இந்த வாழ்க்கையிலே சாதிச்சோம்ன்னு எண்ணுமா? நான் ன்னு ஒரு நினைப்பு அதுக்கு இருக்குமா?
ஏதும் இராது. இந்த விஷயங்களை அந்தக்கரணம் என்கிறோம். இந்த அந்தக்கரணம் காணாமல் போயிடும்.
இப்படி இருக்கிற உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் இதை எல்லாம் பாக்க முடியாதே! ஆனா ஆது எல்லாமே இருந்தது, செத்து போன பிறகு காணோம்ன்னு நமக்கு தெரியும். இப்படி பாக்க முடியாம இருக்கிறதை சூக்ஷுமமா இருக்கு என்பாங்க. இவை எல்லாமா சேர்ந்து ஒரு பேர். சூக்ஷ்ம சரீரம்.
4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//அன்னம் னா உணவு. ஆந்திரால இன்னும் சமைத்த அரிசி அன்னம்தான். தமிழ் வார்த்தையானாலும் நாம பயன்படுத்தறதில்லே//

அண்ணா, அன்னம் அப்படிங்கறது தமிழா-சம்ஸ்கிருதமா?. சோறு, சாதம் எல்லாம் தமிழ்....ஆனா இது கொஞ்சம் குழப்புதே?

திவாண்ணா said...

// அண்ணா, அன்னம் அப்படிங்கறது தமிழா-சம்ஸ்கிருதமா?. சோறு, சாதம் எல்லாம் தமிழ்....ஆனா இது கொஞ்சம் குழப்புதே?//

ரெண்டுத்துலேயும் இருக்கு. சம்ஸ்க்ருதம் ன்னு சொன்னா ¨தமிழன்¨ தமிழ்லேந்து அங்கே போச்சும்பான்! வெச்சுக்கட்டுமே, என்ன இப்ப?
:-))

குமரன் (Kumaran) said...

அன்ன மய கோசம், பிராண மய கோசம், ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம்ன்னு வேகவேகமா சொல்லிட்டீங்க. :-)

திவாண்ணா said...

rompa ezuthavum payamaa irukku kumaran!