உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் இதை எல்லாம் பாக்க முடியாதே! ஆனா ஆது எல்லாமே இருந்தது, செத்து போன பிறகு காணோம்ன்னு நமக்கு தெரியும். இப்படி பாக்க முடியாம இருக்கிறதை சூக்ஷுமமா இருக்கு என்பாங்க. இவை எல்லாமா சேர்ந்து ஒரு பேர். சூக்ஷ்ம சரீரம்.
---
இந்த சூக்ஷ்ம உடம்பு நாம் விழிச்சுகிட்டு இருக்கிறப்ப இருக்கும். செத்து போன பிறகு இருக்காது.
நடுவிலே தூங்கி கனவு காணும்போதும் இருக்கும். கனவு காணும்போது நம்ம எங்கோ போகிறோம், வரோம், ஆனா உடம்பு இங்கேயேதான் இருக்கு. அப்ப அன்ன மய உறை- தூல உடம்பு சும்மாதான் கட்டை மாதிரி கிடக்கு. ஆனா உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் எல்லாம் சேத்து- என்ன பேர் சொல்லுங்க? ஆங்! சூக்ஷ்ம சரீரம், அது இருக்கும். கனவிலே எங்கோ போகிறோம். கை கால்கள் வேலை செய்வதா உணர்கிறோம். நான் என்கிற நினைப்பும் இருக்கு. மூச்சு விட்டுகிட்டுதான் இருக்கோம்.
இந்த கனவு நிலையிலே - அவஸ்தையிலே- சூக்ஷ்ம - சூக்கும சரீரம் இருக்கும்.
தூங்கி கனவு கூட இல்லாத நிலையிலே நாம ஆனந்தமா இருப்போம். கனவிலே அப்படி சொல்ல முடியாது. பயங்கர கனவு வந்து கஷ்டப்பட்டாலும் படுவோம். சுகமான கனவுகளும் வரலாம். ஆனா ஆழ் துயிலுக்கு பின்னே முழுச்சுகிட்டு அருமையான தூக்கம் சொகம் என்போம். இதுவே ஆனந்த மய கோசம்..
============
பரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இது ஆழ்துயில் போல- சுசுப்தி நிலை. இந்த உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு ஆனந்தமா இருக்கிறதால ஆனந்த மய கோசம்.
அது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...
சினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு துக்கப்பட்டு... புரியுது இல்லையா? ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். சினிமாதான் பாக்கிறோம், இது உண்மையில்லை என்கிறது போல. நமக்கு அப்படி தெரியாது, சினிமாலேயே ஒடுங்கி போனது போல.
இனிப்பிலேயே சர்க்கரை இனிப்பு, மாம்பழத்தின் இனிப்பு, மாவு பண்டங்களோட அசட்டு இனிப்பு ன்னு பலவிதமா இருக்கே! முதலாவது திகட்டிடும். இரண்டாவது நிறையவே சாப்பிடலாம். திகட்டாது. மூணாவது இனிப்பிலே சேத்தியாங்கிற அளவு கம்மியாவே இனிப்பு.
அது போல இந்த சத்துவத்திலேயே இன்னும் அதிக பிரிவா சத்துவம் ராஜசம் தாமசம் ன்னு பிரியும்.
முன்னேயே ஒரு வாக்கியம் பாத்தோம். முக்குணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொண்ணு தலைதூக்கும்.
ஈஸ்வரனா இருக்கிற பிரம்மம் ஒண்ணேதான். இருந்தாலும் ஈஸ்வரன் நேரம் செயல்களுக்கு தகுந்தாப்போலே பலதா இருப்பான்.
ராஜசம் அதிகமாகும் போது பிரம்மனா இருந்து படைக்கிறான்.
சத்துவம் அதிகமாகும் போது விஷ்ணுவா இருந்து காக்கும் தொழில் செய்யறான்.
தாமசம் அதிகமாகும் போது சிவனா இருந்து அழிக்கும் தொழில் செய்கிறான்.
[சைவர்கள் சிவனுக்கே 5 தொழில்ன்னு சொல்லி இதை எல்லாமே சேத்துடுவாங்க. அப்படி சொல்கிறபோது அவங்க சிவன் என்கிற பேரிலே பரம்பொருளைத்தான் சொல்கிறாங்க. அதே போல சாக்தர்களூம், வைணவர்களும். அழைக்கிற பொருள் ஒண்ணே; பெயர்தான் வேற வேற. விநாயக புராணம் பாத்தா அவரே முழுமுதற் கடவுள்ன்னு சொல்லும். சிவ புராணம் பாத்தா சிவன்தான் முதல்லே. இப்படியே மத்தது எல்லாமும். படிக்கிறவங்களுக்கு புரியணும், குழம்பக்கூடாதுன்னு இப்படி சொல்லி இருக்கு. ஆனா நாமோ எல்லாத்தையுமே படிச்சுட்டு குழம்பறோம்! பல வழிகளிலே ஒரே நேரத்துக்கு போகப்பாக்கிற மாதிரி இது!]
{பரப்பிரம்மத்தின் சத்துவ பாகத்தில் இருந்து ஈஸ்வரன் என்கிற கடவுள் தோன்றினார். அவரே மூன்று விதமாக செயல்படுகிறார். அப்போது அவருக்கு பெயரும் மாறுகிறது.}
7 comments:
//ஆனா நாமோ எல்லாத்தையுமே படிச்சுட்டு குழம்பறோம்!//
இதென்னவோ ரொம்ப நல்லா புரியுது :)
உள்ளேனய்யா!
//இதென்னவோ ரொம்ப நல்லா புரியுது :)//
:-))
@ மௌலி, ஏற்கெனெவே கவிநயா ஏன் இப்படி கமென்டறீங்கன்னு கேக்கிறாங்க....
//{பரப்பிரம்மத்தின் சத்துவ பாகத்தில் இருந்து ஈஸ்வரன் என்கிற கடவுள் தோன்றினார். அவரே மூன்று விதமாக செயல்படுகிறார். அப்போது அவருக்கு பெயரும் மாறுகிறது.}//
//வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு ஆனந்தமா இருக்கிறதால ஆனந்த மய கோசம்.//
உருவம் இருந்தால் தான் சுலபமாய் இருக்கும்கிறதுக்காக ஏற்பட்டதுனு கொள்ளலாமோ?? ஆனால் இது நன்றாகவே புரியறது. இரண்டும் ஒன்றே என! ம்ம்ம்ம்??? பரமாசாரியார் கூட இது பத்தி ஒரு அருமையான விளக்கம் கொடுத்திருக்கும் நினைவு. பார்க்கணும். இன்னும் மத்தது படிக்கணும்.
அந்த சினிமா உதாரணம் நல்லா இருக்கு, ரொம்ப சுலபமா!
சாமானியர்களுக்கும் போய்ச் சேரணும், புரியணும் என்கிறதுக்காக ஈசன் என்ற பெயர்னும் சொல்லலாம் அல்லவா???
இருக்கிறதுக்குள்ளேயே இது தான் ரொம்ப சுலபமாப் புரியும்னு நம்பறேன், என் போன்றவர்களுக்கும்! :))))))))))
//பரமாசாரியார் கூட இது பத்தி ஒரு அருமையான விளக்கம் கொடுத்திருக்கும் நினைவு. பார்க்கணும்//
kidaichathu. deivathin kural 1st partile Eswaran , thanks.
//உருவம் இருந்தால் தான் சுலபமாய் இருக்கும்கிறதுக்காக ஏற்பட்டதுனு கொள்ளலாமோ?? //
புரியாத ஒண்ணை நமக்கு தெரிஞ்ச சமாசாரத்திலேந்து புரிஞ்சுக்க பாக்கிறோம். அதுக்காகத்தான் இப்படி சொல்லப்படுது.
மத்த கமென்ட்ஸுக்கு நன்னி!
Post a Comment