சீடன் அதெப்படின்னு கேக்கிறான்.
முன்னேயே பாத்ததுதான்:
முதல்ல பேரே வேறே!
சீவனும் ஈசனும் மாய சம்பந்தமுடையவர்கள்.
ஈசன் சத்வ குண மாயை.
ஜீவன் ரஜோ குண மாயை. அதாவது அசுத்த மாயை.
ஈசன் மாயையை தன் வசப்படுத்தினவன். ஜீவன் மாயை வசப்பட்டவன். இரண்டு பேரும் மாயா சம்பந்தம் உடையவர்களே!ஈசனுக்கும் ஜீவனுக்கும் என்ன ஏணி வெச்சாலும் எட்ட முடியாது! அதாவது என்ன ஆன்ம முன்னேற்றம் கண்டாலும் ஈசனுக்கு ஜீவன் சமமா ஆக முடியாது. ஒப்பிடவே முடியாது! ஈசனுடைய சர்வத்துவம் கிட்ட அணுகக்கூட ஜீவனால் முடியாது!
ஜீவன் பிண்டத்திலே இருக்கன். ஈசன் அண்டத்திலே!
ஜீவன் காரிய உபாதி ஈசன் காரண உபாதி! (அதாவது ஈசன்தான் பிறப்பிக்கிறான்; உண்டாக்குபவன். சீவன் பிறக்கிறான்; உண்டாகிறவன்.)
ஜீவன் வியக்தி தேகம் உள்ளவன். ஈசன் சமஷ்டி தேகம் உள்ளவன்.
ஜீவன் அற்ப ஞானம் உள்ளவன். ஈசன் சர்வஞ்ஞன். எல்லாம் தெரியும்!
அதனால பாதாலத்துக்கும் விண்ணுக்கும் இருக்கிற வேறுபாடு போல இந்த சீவனுக்கு ஈசனுக்கும் எப்பவுமே ஐக்கியம் சித்திக்காது.
ஜீவ ஈஸ்வர பேதத்தை கூறல்:
77.
பேதமா னதுவுங் கேளாய் பெயராலு மிடங்க ளாலும்
ஓதரு முபாதி யாலு முடலாலு முணர்வி னாலும்
பாதலம் விசும்பு போலப் பலதூர மகன்று நிற்பர்
ஆதலாலிவர்க் கெந்நாளு மைக்கிய மென்பது கூடாதே
[சீவ ஈஸ்வரர்கள்] பேதமானதுவும் (வித்தியாசமானதுவும்) கேளாய். பெயராலும் (சீவன் ஈசன்) இடங்களாலும் (பிண்டம், அண்டம்), ஓதரும் உபாதியாலும் ([ஒன்பது விதங்களாலும் நிச்சயித்து சொல்ல முடியாத] அவித்தை மாயை என்னும் உபாதிகளாலும்) உடலாலும் (வியஷ்டி, சமஷ்டி), உணர்வினாலும் (சிற்றறிவு பேரறிவு) பாதலம் விசும்பு (விண்ணுலகம்) போலப் பலதூரம் அகன்று (வேறுபட்டு) நிற்பர். ஆதலால் இவர்க்கு எந்நாளும் ஐக்கியம் என்பது கூடாதே (அபேதம் சித்திக்காது).
தாத்பர்யம்: வாச்சியார்த்த ஜீவ ஈஸ்வரர்களுக்கு பெயர் முதலான பேதம் உள்ளதால் அபேதம் சித்தியாது.
4 comments:
//சீவனுக்கு ஈசனுக்கும் எப்பவுமே ஐக்கியம் சித்திக்காது.//
இப்போ மறுபடியும் குழப்பம், இங்கே ஈசனைக் குறிப்பது தெய்வத் தன்மையைத் தானா? சீவன் முக்தி அடைவது அப்புறம் எப்போத் தான்? ஈசனோட ஐக்கியம் ஆகலைனா?? என்னாலே புரிஞ்சுக்க முடியலை! :(((((((((((((((((((((((((((((
ஈசனும் மாயைதான். சுத்த மாயை ஆனாலும் மாயைதான். அவன் குணங்கள் சக்திகள் எப்பவும் சீவனுக்கு வரா.
மனம் நீங்கினால் சீவன் கூடஸ்தன் ஆகிவிடுகிறான். அவன் பிரம்மத்தோட ஐக்கியம் ஆக முடியும். அப்பதான் முக்தி.
சரிதானே?
ம்ம்ம்ம்ம்?? ஈசனுக்கு இங்கே தெய்வீகத் தன்மை இல்லைங்கறீங்க அப்போ? அப்படித் தானே? அவனும் ஒரு மாயையே!
/ஈசனுக்கு இங்கே தெய்வீகத் தன்மை இல்லைங்கறீங்க அப்போ? அப்படித் தானே? அவனும் ஒரு மாயையே! //
தெய்வீகத்தன்மை என்னன்னு நினைக்கிறீங்க என்பதை பொறுத்தது. பிரம்மவாதிக்கு ஈசன் மாயைதான்.
சீவன் (மனிதன்) நிஜம்னா ஈசன் நிஜம்தான்.
இந்த மாயா லோகத்திலேயே ஈசனுக்கு இருக்கிற சக்திகள் ஜீவனுக்கு இல்லை. மலைக்கும் மடுவுக்கும் இருக்கிறாப்போல வித்தியாசம்.
Post a Comment