Pages

Wednesday, December 8, 2010

ப்ரத்யாஹார​ம்



स्वविषयासंप्रयोगे चित्तस्वरूपानुकार इवेन्द्रियाणां प्रत्याहारः ।।54।।
ஸ்வவிஷயாஸம்°ப்ரயோகே³ சித்தஸ்வரூபாநுகார இவேந்த்³ரியாணாம்° ப்ரத்யாஹார​: || 54||

ஸ்வவிஷயா = தமது விஷயங்களில்; ஸம்°ப்ரயோகே³ = (சப்தம் முதலானவற்றுடன்) சம்பந்தம் விலகியபோது; சித்த ஸ்வரூபாநுகார இவ =சித்தத்தின் சொரூபத்தை அனுசரிப்பது போல; இந்த்³ரியாணாம்° = இந்திரியங்களின்; ப்ரத்யாஹார​: = ப்ரத்யாஹாரமாகும்.

சப்தம் முதலானவை மோகம், ராகம் முதலானவைகளை உண்டு பண்ணக்கூடியவை. இவற்றில் இந்திரியங்கள் செல்லும்போது அது யோகத்துக்கு இடையூறாகும். முன் சொன்ன யமம், நியம, ஆஸன, ப்ராணாயாமங்களை சரியாக செய்து வருபவருக்கு சித்தம் தன் இயல்பான சத்வ தன்மையை அடையும். இப்படி தெளிவதால் வெளி விஷயங்களிடத்தில் பற்று குறைந்து விடும். இந்திரியங்களும் சித்தத்தைப்போலவே சத்வமாகிவிடும். இந்த்ரியங்கள் விஷயங்களை நாடாததால் மனதும் தூய்மையாக இருக்கும். மனம் தத்துவத்தை நாடி நிற்குமானால் இந்திரியங்கள் தம் பால் அதை இழுக்கா. இதுவே ப்ரத்யாஹாரம் எனப்படும்.

4 comments:

sury siva said...

நான் கூடவே வருகிறேன்.

ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்களது ப்ரஹ்ம ஸூத்ர வகுப்புகள்
பிரதி ஞாயிறு தி. நகர், பாண்டி பஜார் தெலுகு பள்ளியில் மாலையில் நடக்கின்றன.
செவ்வாய் அன்று ப்ரஹதாரண்யகம் நடக்கிறது. அங்கு தாங்கள் செல்வதுண்டா ?
உங்கள் இ.மெயில் ஐ.டி.தர இயலுமா ?
சுப்பு ரத்தினம்.

yrskbalu said...

GI,
ATLEAST YOU GIVE 2-3 SLOGA IN ONE TIME . TOTAL TOPIC OR VERSION TAKING TOOMUCH TIME. THIS IS NOT GOOD FOR REGULAR READING.

I HOPE YOU UNDERSTAND.

திவாண்ணா said...

வாங்க சூரி சார்! நான் சென்னையிலே இல்லையே! கடலூரில் இருக்கேன். சென்னை ஆன்மீக நாட்டம் கொண்டு நிறைய பிரசங்க கேட்க விரும்புவர்களுக்கு நல்ல இடம்தான்! ஹும்!
மின்னஞ்சல் முகவரி வலிப்பக்கத்திலேயே வலது பலகத்தில இருக்கே?
aanmikam@gmail.com

திவாண்ணா said...

dear balu sir, the subject is a little tough for the uninitiated. so more than one stanza a day will be tough on them. where possible to post two, i shall do so.
i will post the first two parts as pdf. look for the links on the right side panel.