तस्य प्रशान्तवाहिता संस्कारात् ।।10।।
தஸ்ய ப்ரஶாந்தவாஹிதா ஸம்°ஸ்காராத் || 10||
தஸ்ய = நிரோதம் அடையும் சித்தத்திற்கு; ஸம்°ஸ்காராத் = நிரோத ஸம்ஸ்காரத்தில் இருந்து; ப்ரஶாந்த வாஹிதா = ப்ரசாந்தமான விக்ஷேப வாசனை இல்லாத ஸம்ஸ்கார பிரவாகம் (உண்டாகிறது)
ஸமாதி பரிணாமம்:
सर्वार्थतैकाग्रतयोः क्षयोदयौ चित्तस्य समाधिपरिणामः ।।11।।
ஸர்வார்த²தைகாக்³ரதயோ: க்ஷயோத³யௌ சித்தஸ்ய ஸமாதி⁴பரிணாம: || 11||
ஸர்வார்த²தா = விக்ஷிப்த தன்மை; ஏகாக்³ரதயோ: = ஒருமுகப்பட்ட தன்மை; (இவற்றுக்கு முறையே) க்ஷய = தேய்வும்; உ த³யோ = உதிப்பதும்; சித்தஸ்ய =சித்தத்தின்; ஸமாதி⁴ பரிணாம: = ஸமாதி பரிணாமம் ஆகும்.
தன்னிலையில் இருந்து வெளி வரும் சித்தம் க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று நிலைகளை அடையக்கூடும்.
க்ஷிப்தம் என்பது: ரஜோ குண மேலீட்டால் வெளிப்பட்ட சித்தம் அருகாமையிலோ தூரத்திலோ உள்ள சுக துக்க விஷயங்களை சென்று அடைதலாகும்.
மூடம் என்பது: தமோ குண மேலீட்டால் இது செய்யத்தகுந்தது இது செய்யத்தகாதது என்ற பகுத்தறிவின்றி கோபம் முதலான உணர்ச்சிகளுடன் சம்பத்தப்பட்டு காரியம், தூக்கம், சோம்பல் ஆகியவறில் நிலை பெறுதலாகும்.
சத்வ குணம் மேலிட்டு சுகமாக இருக்கும் நிலை விக்ஷிப்தம் ஆகும். இந்த விக்ஷிப்தம் யோகம் இல்லை. ஏனென்றால் தமோ ரஜோ குண மூலமுண்டாகும் நிலையற்ற தன்மைக்கு செல்லவும் கூடும்; அல்லது அது மாறி சத் வஸ்துவில் நிலை அடையவும் கூடும். மேல் சொன்ன மூன்றும் ஸர்வார்த்ததை எனப்படும்.
சத் வஸ்துவில் நிலை அடைந்து த்யானிக்கத்தகுந்த வஸ்து தவிர வேறு எதிலும் நாட்டம் செல்லாது இருப்பதே ஏகாக்ரம் ஆகும். இதுவே மோக்ஷத்துக்கு சாதனம்; இதுவே சமாதி பரிணாமம்.
4 comments:
சத்வ குணம் மேலிட்டு சுகமாக இருக்கும் நிலை விக்ஷிப்தம் ஆகும். இந்த விக்ஷிப்தம் யோகம் இல்லை. ஏனென்றால் தமோ ரஜோ குண மூலமுண்டாகும் நிலையற்ற தன்மைக்கு செல்லவும் கூடும்; அல்லது அது மாறி சத் வஸ்துவில் நிலை அடையவும் கூடும். மேல் சொன்ன மூன்றும் ஸர்வார்த்ததை எனப்படும்.
சத் வஸ்துவில் நிலை அடைந்து த்யானிக்கத்தகுந்த வஸ்து தவிர வேறு எதிலும் நாட்டம் செல்லாது இருப்பதே ஏகாக்ரம் ஆகும். இதுவே மோக்ஷத்துக்கு சாதனம்; இதுவே சமாதி பரிணாமம். //
புரியலையே! :(
இது புரிஞ்சதும் மத்ததுக்கு வரேன். :(
சத்வ குணம் மேலிட்டாலும் தமோ ரஜோகுணத்தின் மூலமும் நிலையற்ற தன்மை எப்படி உண்டாகும்?? சத்வகுணம் மேலிடும்போது அதன் தன்மைதானே இருக்கணும்???? அது மாறினா இங்கே எதை மாறினு சொல்றது? ரஜோ தமோகுணத்தினால் உண்டாகும் நிலையற்ற தன்மையையா??
ம.ம.வுக்கு ஏறவே இல்லையே? :( இது புரிஞ்சுக்காமல் மத்ததுக்கு எப்படிப் போறது? :(
இதை அப்புறம் கமென்டலாம் என்று விட்டுவிட்டதில் மறந்து போயிற்று.
சத்வ நிலையை அடைந்த சித்தம் அப்படியேதானே இருக்கணும்?
நல்ல கேள்வி.
இது சுத்த சத்வம் இல்லை; ரஜோதமோ குணாங்கள் அடங்கி இருக்கிறது. இதுதான் விக்ஷிப்தம்.
சுத்த சத்வமே ஆனாலும் வாசனைகள் அப்படி இருக்க விடாது. சித்தம் அதனால் வெளி வரும். அப்போது என்ன நடக்கும் என்பதைத்தான் சொல்கிறார்கள். நிலையற்ற ரஜோ தமோ குணங்களுக்கும் போகலம. திருப்பி சத்வத்தில் நிலைக்கலாம்.
Post a Comment