Pages

Saturday, December 26, 2015

நான் யார்? - 5


நான் எதுவெல்லாம் இல்லைன்னு லிஸ்ட் போட்டாச்சு. அப்ப யார்தான் நான்?
விசாரித்து இதெல்லாம் நானில்லை நானில்லைன்னு பட்டியல் போட்டோம் இல்லையா? இது எதிலேயும் சம்பந்தப்படாம விசாரிச்சு மிஞ்சி நிக்கற பேரறிவேதான் நான்.
  1. இவையெல்லாம் நான் இல்லாவிடில் பின்னர் நான் யார்?
    மேலே சொல்லிய எல்லாவற்றையும் நானல்ல நானல்ல என்று நேதி செய்து தனித்து நிற்கிற அறிவே நான்.

ம்ம்ம்? முன்னேயே ஐந்து புலன்கள் வழியா விஷயங்களை கிரகிக்கற அறிவு நான் இல்லைன்னு சொல்லியாச்சே! அப்ப இது வேறயா? இது எப்படிப்பட்டது? இதோட சொரூபம் என்ன? இதோட சொரூபம் மூன்றா சொல்லப்படும். ஒன்று இருப்பு. ரெண்டு பேரறிவு. மூன்று பேரானந்தம். இதை மூணும் சேத்து சத் சித் ஆனந்தம் - சச்சிதானந்தம் என்கிறாங்க.

  1. அந்த அறிவின் சொரூபமென்ன?
    அந்த அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.

த்து சித்துன்னு ஏதேதோ சொல்லறீங்க. இதை பாத்தாத்தானே அது என்னன்னு புரியும்? அதை எப்போ பாக்கிறது?
மனசு ஒண்ணு வெளியே பார்க்கும்; அல்லது உள்ளே பார்க்கும். வெளியே பார்க்க பார்க்க விஷயங்கள் அதிகமாகிட்டுத்தான் போகும். கண்ணுக்கு எட்டியதை பார்க்கிறோம். பிறகு கண்ணுக்கு எட்டாததை ஏதேனும் கருவி வைத்து பாக்கிறோம். உலகத்தில் இதை எல்லாம் ஆராய ஆராய இன்னும் அதிகமா அது வளர்ந்து கொண்டேதான் போகும். நமக்கு புரியலை என்கிறதுதான் அதிகமாகிக்கொண்டே போகும்.
இதையே உள்முகப்படுத்தலாம். உள்ளே கவனி. இது என்ன என்ன என்று விசாரி. வெளியே பார்த்ததை என்ன என்ன என்று விசாரிக்க இன்னும் தெளிவில்லாமல் போச்சு. ஆனா உள்ளே கிளம்புவதை இது என்ன என்ன என்று விசாரிக்க அவை மறையும். அதனால தெளிவுதான் அதிகமாகும். பார்க்கிற உலகம் என்கிற பொருட்களில் கவனத்தைவிட்டு பார்க்கிறவன் யார்ன்னு கவனித்தால் - கவனிக்க முடிஞ்சா - எல்லாம் விளங்கும். இந்த வழியைத்தான் பகவான் சொல்கிறார். விளக்கமா பின்னால பார்க்கலாம்.

4. சொரூப தரிசனம் எப்போது கிடைக்கும்?
திரிசியமான ஜகத் நீங்கியவிடத்து திருக்காகிய சொரூப தரிசனம் உண்டாகும்.

No comments: