மாஸ்டரின் சீடர் ஒருவருக்கு அடிக்கடி டிப்ரஷன் வரும்.
“இதை கண்ட்ரோல் பண்ண டாக்டர் மருந்து சாப்பிடசொல்லறார் மாஸ்டர்!”
”பின்னே
சாப்பிடேன்!”
“அது
என்னோட கல்லீரலை பாதிக்கலாம்!”
”பாதிக்கலாமா?
உனக்கு எது
வேணும்? ஆரோக்கியமான
கல்லீரலுடன் டிப்ரஸ்டா
இருக்கறதா? இல்லை,
சிரிச்சுகொண்டு
இருக்கிறதா? ஒரு
வருஷம் உருப்படியா வாழறது
இருபது வருஷம் சோம்பி வழியறதுக்கு
சமம்!”
பிறகு
தன் சீடர்களிடம் சொன்னார்:
”வாழ்கை கதை
மாதிரி. எவ்வளவு
நீளம் என்கிறது விஷயமில்லை.
எவ்வளவு
நல்லா இருந்தது என்கிறது
முக்கியம்!”
No comments:
Post a Comment