ஞானம் பெற்ற பின் நிலை எப்படி இருக்கும் என்று ஒருவர் மாஸ்டரிடம் கேட்டார்.
“அது
அடர்ந்த காட்டுக்குள் போன
பிறகு திடீரென்று, நம்மை
கவனிக்கிறார்கள் என்று
தோன்றினால் எப்படி இருக்கும்?
அது போல!”
“கவனிப்பது
யார்?”
”கற்கள்,
மரங்கள்,
மலைகள்….”
”பயங்கரமான
அனுபவமா இருக்கே?”
“இல்லை.
அப்பாடான்னு
ஆறுதலா இருக்கும்! ஆனா
இதுக்கு நாம் பழகலை.
அதனால் உடனே
திருப்பி நகரத்துக்கு ஓடி
வர நினைக்கறோம். அவங்களோட
சத்தம், வார்த்தைகள்,
சிரிப்புகள்,
கத்தல்கள்….
இவைதான்
நம்மை உண்மையான எதார்த்த
நிலையிலிருந்து விலக்கி
வைக்குது!”
No comments:
Post a Comment