Pages

Wednesday, December 30, 2015

நான் யார்? - 6


ஏன், உலகம் இருக்கிறப்பவே, தெரியறப்பவே சொரூப தரிசனம் கிடைக்காதா?
கிடைக்காது.
ஏன்?
நாம் உள்ளதை உள்ளபடி பார்க்கவில்லை என்கிறதே அடிப்படையில் பிரச்சினை.
சயன்ஸ்படியே பார்க்கலாம். பல வருஷங்களுக்கு முன்னால (atom) ஆட்டம் ந்னு சொன்னாங்க. அதுக்கு அர்த்தமே பிளக்க முடியாதது என்பது. அப்புறமா அதை பிளந்தாங்க. ந்யூட்ரான் ப்ரோட்டான் எலக்ட்ரானு சொன்னாங்க. அப்புறம் இன்னும் மாறித்து… க்வார்க்ஸ் ந்னாங்க. இப்படியே போய் அது எனர்ஜியா இல்லை பருப்பொருளான்னே சந்தேகம் வந்துகிட்டு இருக்கு.
வெளிப்புறமா பார்க்க பல ஆட்டம்கள் சேர்து ஒரு எலெமெண்டாவும் அது பலது சேர்ந்து காம்பவுண்டாவும் அதுவே இன்னும் பல சேர்க்கையில் விதவிதமான பொருட்களாவும் எல்லையில்லாம விரிஞ்சுகிட்டே போகிறது. இப்படி ஒரு பொருளை உள்ளே நுணுக்கமா பார்க்கையில் ஒரு விதமாகவும் வெளியே விரிச்சு பார்க்கையில் பலவிதமாவும் இருக்கு.
ஆக உள்ளதை உள்ளபடி பார்க்க முடியலை.
மனசு ஒரு பொருளை எதுவா நினைக்குதோ அப்படி அது தோணுது. அதனால உண்மைப்பொருள் மேலே மனசு ஏற்றி வைக்கற பிம்பம்தான் நாம் “பார்க்கிற” பொருள். ந்த பிம்பம் போகாமல் உண்மையான பொருளை பார்க்க முடியாது. அரை குறை இருட்டுல கயிறு பாம்பா தெரியும் போது அது கயிறுதான் பாம்பு இல்லைன்னு நிச்சயமா தெரியறவரைக்கும் அதை பாம்பாத்தான் பார்ப்போம். அது போல இந்த லகங்களின் உண்மை இதுதான்னு சரியா தெரியற வரை அதன் அடிப்படையான சொரூபத்தை பார்க்க முடியாது.

  1. ஜகமுள்ள போதே சொரூப தரிசனம் உண்டாகாதா?
    உண்டாகாது.
  1. ஏன்?
    திருக்கும் திருசியமும் ரஜ்ஜும் சர்ப்பமும் போல. கற்பித சர்ப்பஞானம் போனாலொழிய அதிஷ்டான ரஜ்ஜுஞானம் உண்டாகாதது போல கற்பிதமான ஜக த்ருஷ்டி நீங்கினாலொழிய அதிஷ்டானமான சொரூப தரிசனம் உண்டாகாது.

No comments: