மாஸ்டர்
ஒரு நாள் சொன்னார்:
அருமையான
செயல்கள் எல்லாம் நினைவு
பூர்வமாக செய்யப்படுவதில்லை.
அவை நினைவற்ற
நிலையில் செய்யப்படுகின்றன.
இதற்கு
பதிலாக நிறைய ஆட்சேபனைகள்
எழுந்தன. சரியான
நேரம் வரவில்லை என்று தோன்றினால்
மாஸ்டர் பதில் சொல்வதில்லை.
வழக்கம்
போல எல்லாவற்றையும் பதில்
சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.
ஒரு
நாள் அவரும் சிலரும் ஒரு மேதையின் பியானோ கச்சேரிக்கு
போனார்கள். எல்லோரும்
மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கும்
வேளையில் மாஸ்டர் அருகில்
இருந்தவரிடம் கிசுகிசுத்தார்..
“கைவிரல்கள்
பியானோ மீது நர்தனமாடுவதை
பார்த்தாயா? அதை
நினைவால் செய்ய முடியாது.
உயர்தரம்
வேண்டுமென்றால் அதை நினைவற்ற
நிலைக்கு விட்டுவிட வேண்டும்.”
No comments:
Post a Comment