கோபத்துடன்
டீயை உறிஞ்சிக்கொண்டு இருந்தான்
அந்த இளைஞன். பக்கத்தில்
யாரோ வந்து உட்கார்ந்ததை
உணர்ந்தான். அது
அந்த பெரியவராகத்தான் இருக்க
வேண்டும் என்று தோன்றியது.
ஏனோ உதாசீனமாகவே
இருந்தான்.
அக்கம்
பக்கம் இருக்கும் எல்லா
கோவில்களில் இருந்தும்
பாட்டுச்சத்தம் காதை பிளந்து
கொண்டு இருந்தது. ஒரு
இடத்தில் இருந்து கதை சொல்லுவது
கேட்டது. அதில்
அங்கங்கே ஒருவர் ஆமா என்று
சொல்லிக்கொண்டு இருந்தார்.
நடுவில்
கதையை இடைமறித்து ஆங்காங்கே
இருக்கும் பக்த கோடிகள்…
என்று அறிவிப்பு வந்தாலும்
அந்த ஆமா நிற்கவில்லை!
"ஜபத்துக்கு
ரொம்பவே இடைஞ்சலா இருக்கோ?”
என்று மென்மையான
குரல் கேட்டது, இளைஞன்
சற்று ஆச்சரியத்துடன்
திரும்பிப்பார்த்தான்.
இவருக்கு
எப்படித்தெரியும்?
பெரியவர்
வெறுமே புன்னகை பூத்தார்.
“ஆமா!”
“இந்த
காலகட்டத்துல இப்படி இருக்கறது
சகஜம்தான்.”
“எப்படி
இருக்கறது?”
“ஜபம்
செய்யறோமே, அதுக்கு
இந்த பாட்டு சத்தம் எல்லாம்
இடைஞ்சலா இருக்கேன்னு
நினைக்கிறது.”
“ம்!
ரொம்பவே
தொந்திரவா இருக்கு.
ரொம்ப நாள்
முயற்சி செஞ்சு இப்பத்தான்
கொஞ்சம் கொஞ்சம் மனசு குவியுது.
இப்ப இது
வேற!”
“பரவாயில்ல.”
“எது
பரவாயில்ல? ஜபம்
பண்ண முடியாம இருக்கறதா?”
“ஆமாம்.
ஏன் இந்த
பாட்டு தப்புன்னு நினைக்கிறே?”
“பாட்டு?
பாட்டு எங்கே
இருக்கு? வெறும்
சத்தம்தான் அதிகமா இருக்கு!
அதுல ஒரு
கருத்தோ ஒரு ராகமோ இல்லியே?”
பெரியவர்
சிரித்தார். “ஆமா.
ஆனா அது ஒரு
பத்து வருஷம் முன்னால.
இப்ப கொஞ்சம்
கொஞ்சமா மாறிப்போச்சே!
அதோ கேளூ!
”
’குறையில்லை
தாயே… மீனாட்சி நீயே’ என்று
பாடல் கேட்டது. முடிந்த
சுருக்கிலேயே மகமாயீஈஈஈஈ
என்று இன்னொரு பாடல் ஆரம்பித்தது.
“ஒவ்வொத்தருக்கு
ஒவ்வொரு டேஸ்ட். இப்படித்தான்
வகை வகையா இருக்கும்.
மொத்தத்தில
இது இப்ப நல்லாத்தான் ஆகிகிட்டு
இருக்கு; அதாவது
உனக்கு பிடிச்ச மாதிரி நல்லா!”
என்னதான்
பண்ணச்சொல்லறீங்க?”
“பாட்டுல
வரதும் கடவுள் பேருதானே?
உன் வழக்கமான
ஜபத்தை விட்டுட்டு இதையேத்தான்
பாலோ பண்ணிப்பாரேன்!
என்ன தப்பு?
அதுவும்
கடவுள் பேருதான். இதுவும்
கடவுள் பேருதான். என்ன
ராமான்னு சொல்லறதை விட்டுட்டு
மகமாயி ந்னு சொல்வாங்க.
அவ்ளோதான்.”
“அப்ப்டி
சொல்லறீங்க?”
சிந்தனையில்
ஆழ்ந்த இளைஞன் ஒரு முடிவுக்கு
வந்து பேச யத்தனித்த போது
அவர் அருகில் இருக்க மாட்டார்
என்று தோன்றியது. அதே
போல் இல்லை!
No comments:
Post a Comment