தன் சீடர்களுக்கு தான் பேசுவது
புரியாமல் போக நிறையவே
வாய்ப்பிருப்பது மாஸ்டருக்குத் தெரிந்துதான்
இருக்க வேண்டும்.
இருந்தாலும்
என்றோ ஒரு நாள் அது இதயத்தில்
இருந்துகொண்டு வெளிவந்து
மலர்ந்து விடும் என்ற
நிச்சயத்திலேயே பேசுவார்!
ஒரு
நாள் அவர் சொன்னார்:
“நேரம்
என்பது நம்மில் பலருக்கும்
எப்போது நீண்டதாகவே காத்திருக்கும்
போது தோன்றுகிறது; ஒரு
விடுமுறைக்கு; பரிட்சைக்கு;
அல்லது
எதிர்காலத்தில் மிகவும்
விரும்பியதோ பயந்ததோ நடக்க.
”
“ஆனால்
நடப்பதைப்பற்றி கவலையே இல்லாத;
அது திருப்பி
நிகழ வேண்டும் அல்லது நிகழவே
கூடாது என்னும் எதிர்பார்ப்பு
ஏதும் அற்ற; எப்போதும்
நிகழ்காலத்தில் வாழ்வதற்கு
பயின்ற ஒருவருக்கு காலம்
என்பது முடிவில்லாத ஒளிமயமானதாக
மாறிவிடுகிறது. ”
No comments:
Post a Comment