“உண்மையான
ஆன்மீகம் சமுதாய சமாசாரம்
இல்லை; ஒவ்வொரு
நபருக்கும் தனித்துவமானது”
என்று மாஸ்டர் சொல்வது
மக்களுக்கு எட்டிக்காயாக
இருந்தது. இதை
கேட்ட மாஸ்டர் சொன்னார்:
ஒரு
துருவக்கரடிக்குட்டி இருந்தது.
அது தன்
அம்மாவிடம் கேட்டது “அம்மா!
என் அப்பா
ஒரு துருவக்கரடியா?”
“ஆமாம்ப்பா!”
கொஞ்ச
நேரம் கழித்து அது மீண்டும்
கேட்டது: “அம்மா!
என் தாத்தாவும்
ஒரு துருவக்கரடியா?”
“ஆமாம்ப்பா!”
கொஞ்ச
நேரம் கழித்து அது மீண்டும்
கேட்டது: “அம்மா!
என் கொள்ளு
தாத்தா எப்படி? அவரும்
ஒரு துருவக்கரடியா?”
“ஆமாண்டா
கண்ணு! ஆமா
ஏன் திருப்பித்திருப்பி
இப்படி கேக்கறே?”
“ஏன்னா
எனக்கு குளிர் தாங்கலே!”
மாஸ்டர்
முடித்தார்: “ஆன்மீகம்
சமூக சமாசாரமும் இல்லே;
பரம்பரை
சமாசாரமுமில்லே! அது
ரொம்பவே சொந்த சமாசாரம்!”
No comments:
Post a Comment