நிசப்தத்தை
மாஸ்டர் எப்படி கண்டுபிடித்தார்
என்று ஒரு சீடர் கேட்டார்.
மாஸ்டர் கதை
சொன்னார்:
ஒரு
தொழிற்சாலைக்கு தவளைத்தோல்
தேவையாக இருந்தது.
விளம்பரம்
செய்தார்கள். ஒரு
விவசாயி கடிதம் போட்டார்.
அதில் என்னால்
ஒரு லட்சம் தவளைகளை அனுப்பி
வைக்க முடியும். தேவையானால்
இன்னும் அதிகமாக என்று
குறிப்பிட்டு இருந்தது.
கம்பனியார்
ஆச்சரியப்பட்டு “முதல் தவணையாக
உடனே ஐம்பதாயிரம் அனுப்பி
வைக்கவும்“ என்று கடிதம்
அனுப்பினார்கள். இரண்டு
வாரங்கள் கழித்து ஒரே ஒரு
தவளை வந்து சேர்ந்தது.
கூடவே ஒரு
கடிதம். “மன்னித்துக்கொள்ளுங்கள்.
பக்கத்து
வயலில் இது மட்டுமே இருந்தது.
இதன் சத்தம்
என்னை ஏமாற்றிவிட்டது!”
பின்னால்
சொன்னார்: “மக்கள்
இடும் கூச்சல்களை காது
கொடுத்துக்கேள், ஆராய்ச்சி
செய். அடுத்து
உன் கூச்சலையும் விலகி நின்று
கவனி. எல்லாமே
அர்த்தமில்லாதவை என்று
புரியும். பின்னால்
நிசப்தமான அமைதியும் தெரியும்.
No comments:
Post a Comment