வரலாற்று
ஆராய்ச்சி என்றால் மாஸ்டருக்கு
மிகவும் பிடிக்கும்.
ஆனால் அதன்
மாணவர்கள் அது தரும் முக்கிய
படிப்பினைகளை உணர்வதில்லை
என்று புகார் செய்வார்.
அப்படிப்பட்ட
ஒரு சமயம் ஒரு மாணவன் “உதாரணமாக?”
என்றான்.
“உதாரணமாக
ஒரு காலத்தில் மிகவும் முக்கிய
பிரச்சினைகளாக இருந்தவை
இப்போது வெறும் எழுத்துக்களாக
உறைந்து போய்விட்டன.
வரலாற்று
நாடகத்தில் மகத்தான வீரர்களாக
கருதப்பட்டவர்கள் வெறும்
பொம்மலாட்டத்தின் பொம்மைகள்தான்
என்று இப்போது நமக்குப்புரிவது
அப்போது அவர்களுக்குத்
தெரியவில்லை!”
No comments:
Post a Comment