தயை
எட்டு ஆத்ம குணங்களிலேயும்
முக்கியமானதும் முதலாவதும்.
இது என்னன்னா
துன்பப்படற மத்த உயிர்களைப்பாத்து
இரக்கம் கொள்வது; ஐயோ
பாவம்ன்னு வருந்தி துன்பம்
தனக்கே வந்தாப்போல உணர்வது(empathy);
முடிஞ்ச வரை
உதவி செய்வது; அவங்களுக்கு
ஹிதமா பேசறது; அவங்க
நல்லா இருக்கணும்ன்னு
நினைக்கறது. துன்பம்
நீங்கினப்ப சந்தோஷப்படறது.
இது
போல... புரிகிறதில்லையா?
இது
மத்த ஜனங்களுக்குத்தான்னு
இல்லை. மத்த
எல்லா உயிரினங்களுக்கும்தான்.
இன்னும்
பார்க்கப்போனா உயிரில்லாததுக்கும்தான்!
மனித
நேயம் என்கிறதை பெரிசா சிலர்
சொல்லிகிட்டு இருக்காங்க.
இது அதையும்
தாண்டினது என்கிறதை உணரணும்.
இந்த
தயைக்கு ப்ரீ கண்டிஷன்ஸ்
இல்லை. என்னதான்
கெட்டவன்னு தெரிஞ்சாலும்
கூட தயை இருக்கவே இருக்கும்!
இங்கேதான்
மத்தவங்களிலிருந்து இந்த
சாதகர் வித்தியாசப்படறார்.
சாதாரணமா
நமக்கு மத்ததுகிட்ட இருந்து
துன்பம் வராத வரைக்கும் இந்த
தயையை காட்டிடலாம். ஆனா
நமக்கு ஒரு துன்பம் விளைவிச்ச
நபர்/ உயிர்/
வஸ்து ன்னு
இருந்தா தயை காட்டறது கஷ்டம்.
ம்ம்ம்ம்..
நல்லா வேணும்;
நீ அன்னைக்கு
அப்படி செஞ்ச இல்ல? இப்படி
செஞ்ச இல்ல? இப்ப
கஷ்டப்படுன்னு நினைக்கிறவர்
தயை என்கிற ஆத்ம குணத்தை
இன்னும் சம்பாதிக்கலை.
No comments:
Post a Comment