மூணாவது
அநஸூயா. பெண்மணி
பேரா இருக்கு இல்லே?
அஸூயை
இல்லாம இருக்கறது அநஸூயா.
அஸுயை என்கிறது
பொறாமை.
ஊர்ல
ஒத்தர் இருக்கார். அவர்
நிறைய நல்ல காரியங்களை
செய்யறார். நம்மால
அப்படி எல்லாம் செய்ய முடியலை
அல்லது செய்ய மனசில்லை.
இவன் பாட்டுக்கு
நல்ல பேர் தட்டிகிட்டு போறானே?
ன்னு மனசு
சகிக்கறதில்லை! பொறாமைப்பட்டு
"ஹும்!
உள்ளுக்குள்ள
கெட்ட மனசு. ஊர்
பணத்தை கொள்ளை அடிச்சான்.
எல்லாத்தையும்
மறைக்க இப்படி வேஷம் போடறான்'
னு சொல்லிண்டு
இருந்தா அது அஸூயை. நல்லது
செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
ன்னு இவங்களைப்பத்தித்தான் நரிவெரூஉத் தலையார் சொன்னாங்க.
நல்லது செய்தல் ஆற்றிர் ஆயினும்அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமா ரதுவே”
அவரவர் செய்த நல்ல கர்மாவின் வாசனையில் நல்ல காரியங்கள் செய்கிறார்கள். இதை உணர்ந்து பாராட்டுவதுதான் அநஸூயா.
எங்கே யார் நல்ல காரியங்கள் செஞ்சாலும் ஆஹா ஆஹா நல்லதுன்னு நினைக்கணும்.
No comments:
Post a Comment