படகு அடுத்த துறையில் இருந்தது. வாத்தியார் தலையை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கொண்டு வருகிறான். கூரையை காணோம். இதனால் அடையாளம் தெரியவில்லை. எல்லோரும் படகில் ஏறிக் கொண்டோம். ஏன் கூரையை போடவில்லை என்று கேட்டால் காத்து அதிகமாக வீசும் போது போட மாட்டோம் என்று சொன்னார்கள். அப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது போலிருக்கிறது. அது பிய்ந்து போய்விடுமா இல்லை படகு திசைமாறி தடுமாறுமா என்று யோசித்தேன். வெறுமே மேலே நிழலுக்காக காய போடுவது எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
படகு கிளம்பி விட்டது நேராக வாரணா போனோம். இது காட்களில் வடக்கு முனை. வழக்கமான ‘காட்’டுகள் எல்லாம் தாண்டி மொத்தமாக சுமார் 13 கிலோ மீட்டர் போக வேண்டியிருந்தது. இந்த இடத்தில் வாரணா நதி வந்து சேருகிறது. சுமார் பாதி தூரம் போன பிறகு ‘காட்’டுகளில் எல்லாம் முடிந்து விட்டன. ஒரு பாலம் வேறு தாண்டி சென்றது. இந்த இடத்தில் அரசு ஏதோ புதிதாக வாட்டர் ப்ராண்ட் கட்டுவதாக தெரிகிறது. வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சற்று தாண்டி ஒரு மிதக்கும் எல்என்சி ஜி பிளான்ட் ஒன்றை பார்த்தேன். இதுவும் துவங்கி இன்னும் முற்றுப்பெறாத ஒரு சமாசாரம் போலிருக்கிறது. இன்னும் போட் எல்லாமே டீசலில் தான் ஓடுகிறது. இன்னும் எல்என்சி க்கு மாறவில்லை. அது மாறினால் கங்கையில் இந்த டீசல் சேர்ந்து நாறுவது நின்று போகும். அந்த நாள் எந்த நாளோ!
ஒரு வழியாக வாரத்துக்கு போய் சேர்ந்தோம். இதற்கு ஆதிகேசவ காட் என்று பெயரும் உண்டு போலிருக்கிறது. இங்கே வந்து சேர்வதற்குள் முதலீடு சரு செய்து, அதை எடுத்து வைத்துவிட்டு இரண்டாவது ஈடும் வைத்து விட்டார்கள். இங்கே பிராமணர்கள் அவர்களுடைய ஆரம்ப பங்கு முடிந்தவுடன் இறங்கி சற்று தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலை பார்க்க போய்விட்டார்கள். இங்கே ஆறு அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால் வெகு வெகு அமைதியான சூழ்நிலை.
பிண்ட பிரதானம் தர்ப்பணம் முடித்து விட்டோம். கோவிலுக்கு போன பிராமணர்களும் திரும்பி வந்து விட்டார்கள். இங்கே இருந்து திரும்ப ஆரம்பித்தோம். இது வரை காற்று பலமாக அடித்துக்கொண்டு இருந்தது, இப்போது நின்று போயிற்று. படகுக்காரர் கூரையையும் போட்டுவிட்டார்.
அடுத்து பஞ்ச கங்கா காட். இங்கே தீர்த்தம் பிந்து மாதவ தீர்த்தம். இங்கேயும் வழக்கம்போல எல்லாவற்றையும் செய்தோம். அடுத்து மணிகர்ணிகா காட். இங்கே சக்கர புஷ்கரணி தீர்த்தம். இங்கே வந்து சேர்ந்தவுடனே என் ப்ரெண்ட் பச்சைக்குருவி வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நட்பு பாராட்டியது. இதுவே இரண்டு நாட்கள் முன்னே தீர்த்த ஸ்நானம் செய்வதற்காக வந்தபோது வந்திருந்தது. ‘என்னண்ணா திரும்பி வந்து விட்டீர்கள்!’ என்று கேட்க வந்தது போல் தோன்றியது! போன முறையும் சரி இப்போதும் சரி செல்போன் காமிராவுக்கு மட்டும் அது பிடிபடவே இல்லை!
மணிகர்ணிகா காட் மண் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அது வெள்ளி போல் ஜொலிக்கும். இது என்ன விஷயம் என்று படகோட்டியிடம் கேட்டேன். ஏதோ ஹிந்தியில் சொன்னார். ஒன்னும் புரியவில்லை. இதுகுறித்து ஜியாலஜி நிபுணர் ஆன என் உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் போட்டோ எடுத்து அனுப்பும் படி சொன்னார். இதற்காக அரவிந்தனிடம் செல்போனை கொடுத்து போட்டோ எடுக்க சொன்னேன். ஆனால் மண்ணை தனியாக எடுத்தால் கருப்பாக தான் தெரிகிறது. இது ஏதோ சமாசாரம் புரியவில்லை.
மணிகர்ணிகா ஶ்ராத்தத்தை வழக்கம்போல் முடிக்க ஐந்து கட்டங்களும் பூர்த்தியாகி விட்டன. அக்கம்பக்க படகுகளிலிருந்து பிராமணர்களை சிலரை கூப்பிட்டு ஆசீர்வாதம் செய்யச் சொன்னார்கள். அவர்களும் ஆசீர்வாதம் செய்து தக்ஷிணை வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
மீதி பூஜைகள் அடுத்த நாளுக்கு தள்ளிப்போயின.
சமீபத்திய காரிடார் நுழைவாயில் |
சீதளா காட் அருகே கங்கோத்ரி ஸேவா ஸமிதி, கங்கா ஸேவா நிதன், இங்கேதான் மாலை கங்கா ஹாரத்தி. |
முன்ஷி காட் அஹல்யாபாய் காட். |
கெய்ல் இன் மிதக்கும் சிஎன்ஜி ஸ்டேஷன். |
No comments:
Post a Comment