12 மணி அளவில் கயாவாலிகளை வரச் சொல்லியிருந்தார்கள்.
இந்த கயாவால் பிராமணர்கள் மாத்வர்கள். உத்தராதி மடத்தை சார்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே இங்கே ஶ்ராத்தங்கள் முதலானவைகளுக்கு புரோகிதர்கள் ஆக இருக்கிறார்கள். விஷ்ணு பாத கோவில், அக்ஷய்ய வட கோவில் ஆகிய இடங்களுக்கு இவர்களே பாண்டாக்கள். 11 மணி அளவில் சிலர் வந்துவிட்டார்கள். மனைவி பார்த்துவிட்டு சின்ன குழந்தை முதல் கொள்ளுத் தாத்தா அவரை வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். ஆமாம் அதில் ஒருவர் மிகவும் வயதானவர். பையாஜி என்று மற்றவர்கள் மிகவும் மரியாதையுடன் அவரை நடத்துகிறார்கள். சின்ன குழந்தைக்கு பூணூல் இன்னும் போடவில்லை சும்மா வந்து இருந்தாற்போல் இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் யாரோ அழைத்துப்போய்விட்டார்கள்.
இந்த கயா பிராமணர்களைப் பற்றி சில விஷயங்களை முன்னாலேயே சொல்லி இருந்தார்கள். இவர்களுடைய தேசாசாரம் நமக்கெல்லாம் ஒத்து வராது. இவர்கள் எதையும் தூக்கி குடிப்பதில்லை. எச்சில் செய்தே குடிக்கிறார்கள். நம் பக்கத்து ஶ்ரார்த்த உணவு இவர்களுக்கு சரிப்பட்டு வருவதில்லை என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அதெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நம்முடைய சாப்பாட்டுக்கு பழகிவிட்டார்கள் என்றும் இரண்டு விதமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டு வாத்தியார் இந்த யாத்திரை போய்விட்டு வந்தவர். அவர் வந்து இவர்கள் எல்லாம் சாப்பிடுவார்கள் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பால்பாயசம் பூரி ஆகியவை. ஆகவே அதை நிச்சயமாக செய்து விடுங்கள் மற்றபடி நம் சௌகரியம் போல் செய்யலாம் என்று சொல்லியிருந்தார். பெண்கள் அதற்கு சரியாகவே தயார் செய்து கொண்டிருந்தனர் நிறைய பால் பாயசமும் பூரியும் செய்து மற்றபடி நம் வழக்கமான தமிழ்நாட்டு ஶ்ராத்த சமையல் ஆக செய்திருந்தார்கள்.
எப்படி இருந்தாலும் நம் பக்க மக்கள் இவர்களை கொஞ்சம் இளக்காரமாக தான் பார்க்கிறார்கள். ஒரு ஶ்ராத்தத்தில் போக்தாவாக இருந்தால் ஆயிரம் காயத்ரி ஜபம் செய்து அடுத்த கர்மாவுக்கு அருகதை ஆவார்கள் என்று சாஸ்திரம். ஆனால் இவர்களோ தினசரி ஏதோ ஒரு ஶ்ராத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். சந்தியாவந்தனம் செய்கிறார்களோ இல்லையோ என்று நம்மவர்கள் சந்தேகிக்கிறார்கள். அது எப்படி இருந்தாலும் க்ஷேத்திர வாசிகளை தூஷிக்கக் கூடாது என்று இருக்கிறது. இவர்கள் இல்லாமல் நாம் இங்கிருந்து யாரையும் அழைத்துப் போய் எல்லாம் சரிப்படாது. ஆகவே இவர்களை வைத்து ஶ்ராத்தத்தை நடத்த வேண்டியது.
நம் பக்கத்து சிரார்த்த நடைமுறை அனைத்தும் அந்த தாத்தாவுக்கு தெரிந்து இருந்தது. சரியாக பிரதி வசனமும் சொன்னார். கொஞ்சம் முன்னே பின்னே மற்றவர்கள் இருந்தாலும் இவரை ஒட்டி அவர்களும் பிரதி வசனம் சொல்லிக் கொண்டு போனார்கள். வரணம் எல்லாம் நான் செய்தேன். சில உபசாரங்கள் என் பையர் செய்தார்.
இவர்களுடைய ஆச்சாரத்தை பற்றி அவ்வளவு சொல்லி இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனித்தேன். வழக்கமான இந்த மாதிரி விஷயங்களுக்கு போகக்கூடிய பிராமணர்கள் கைகால்களை பார்த்தாலே சில விஷயங்கள் புரிந்துவிடும். அதிகமாக பிரதி கிரகம் வாங்கின தோஷங்களும் காயத்ரி செய்யாமல் ஶ்ராத்தங்களில் திருப்பி திருப்பி பங்கெடுக்கும் தோஷங்களும் காலில் இருக்கும் தோல் வியாதியில் தெரிந்துவிடும். இவர்களுடைய கால்களை நாம் கழுவி விடும்போது இதைப் பார்த்து விடலாம். ஆனால் இவர்கள் கால்கள் நன்றாகவே இருந்தன உண்மையில் மிகவும் சுத்தமாக இருந்தன. இந்த இடத்தின் விசேஷமோ இல்லை விஷ்ணு பாதத்தின் விசேஷமோ எப்படி இருந்தாலும் இவர்கள் சுத்தர்கள் என்று என் மனதில் ஒரு திருப்தி உண்டாயிற்று.
ஹோமம் முடிந்து இவர்களுக்கு இவர்களுக்கு உணவிடும் நேரம் வந்தது. இவர்களுக்காக பிளாஸ்டிக்கில் டம்ப்ளர்கள் வாங்கி வைத்திருந்தார்கள். அவற்றை ஒன்றுக்கு இரண்டாக பக்கத்தில் வைத்துவிட்டார்கள். தண்ணீர் பாயசம் முதலியவை இதிலேயே கொடுத்தார்கள். பார்த்த அளவில் அவர்களுக்கு நம் பக்கத்து உணவு சரிப்படவில்லை தான். நாம் நம் பாரம்பரியத்தின் படியே சமைப்போம் என்று இருப்பதை விட்டுக் கொடுத்துவிட்டு இவர்களுக்கு தகுந்தாற்போல் சமைத்து கொடுப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர்கள் சாப்பிட்டு திருப்தி அடைவதே மிகவும் முக்கியம். நீங்கள் திருதியாகவே இருக்க மாட்டீர்கள் என்று சீதை சாபம் கொடுத்து இருந்தாலும் ஶ்ராத்தத்தின் முடிவில் இவர்கள் இரு கைகளையும் தூக்கி திருப்தி சொல்லி ஆசீர்வாதம் செய்தது மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.
இவர்களை அனுப்பிவிட்டு பிண்ட தானத்துக்கு உட்கார்ந்தோம். இதைப்பற்றி கொஞ்சம் ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால் இறந்துபோன என் உறவினர்கள் ஜாபிதா தயாராக வைத்திருந்தோம். காருண்ய பித்ரு என்று சொல்லி இவர்கள் அனைவருக்குமே பிண்டம் கொடுத்தோம். இது இல்லாமல் என் மனைவியும் பையனும் சில பெயர்கள் வைத்திருந்தார்கள். சிலர் அவர்களுடைய நண்பர்கள். சில நாட்களுக்கு முன் கோதாவரியில் நதியில் தண்ணீரில் மாட்டிக்கொண்டு இறந்துபோன பாடசாலை வாத்தியார் வித்யார்த்தி அவர்களுக்கும் பிண்டம் தரப்பட்டது. இந்த சமயத்தில் திடீரென்று தோன்றி ட்விட்டரில் இருந்து ஒரு சின்ன பதிவு போட்டு யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் பெயரும் கோத்திரமும் சொன்னால் பிண்டம் வைக்கிறேன் என்று சொல்லி ஒரு பத்து பன்னிரண்டு பெயர்கள் கிடைத்தது கிடைத்தன. அவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் பிண்டங்கள் வைத்தோம்.
இதில் ஸக்த பிண்டம் என்று ஒன்று வருகிறது. கோதுமை மாவை வறுத்து கொஞ்சம் நீர்த்த பால் சேர்த்து இதை பிண்டமாக பிடிக்கிறார்கள். அது ஒன்று வைக்க வேண்டி இருந்தது. யாரைக்குறித்து என்று நினைவில்லை.
இப்படியாக பல்குனி நதி ஶ்ராத்தம் முதல் நாள் இரண்டரை மணி போல முடிந்தது.

No comments:
Post a Comment