Pages

Tuesday, July 1, 2008

மேலும் நியமங்கள்


மேலும் நியமங்கள்:

நின்று கொண்டு, நடந்து கொண்டு, தலையில் துணி கட்டிக்கொண்டு, தெற்கு முகமாக உட்கார்ந்து சாப்பிட்டால் அவன் உணவை ராக்ஷசர்கள் சாப்பிடுகிறர்கள்.

சாப்பிடும்போது கால்களை தொடக்கூடாது. கட்டிலிலோ கையில் வைத்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது. பாதுகை போட்டுக்கொண்டு சா.கூ. வண்டிகளில் இருந்து கொண்டு சா.கூ.
காய்கள், வேர்கள், பழங்கள், கரும்பு - இதெல்லாம் பற்களால கடிச்சு சா.கூ. (துண்டாக்கி பரிமாறினால் பிரச்சினையே இல்லை.)

தவறி வெளியே விழுந்ததும் சாப்பிட தக்கதல்ல.

அசுத்தனாக எதையுமே சா.கூ. படுத்துக்கொண்டு; கால்களை நீட்டுக்கொண்டு; மனசை (ஏதேனும் படிக்கிறது போல) வேறு எங்கேயோ வைத்துக்கொண்டு; இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது.

சந்தியா காலம், பிரதோஷ காலம், இருட்டில் விளக்கு இல்லாமல், இரவு பத்து மணிக்கு மேல்; இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது.

அன்னத்தில் கேசம், எறும்பு, அசுத்தத்தில் வாழும் புழு இப்படி ஏதேனும் இருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்ட அன்னத்தை எடுத்துவிட வேண்டும். மீதியை பிறகு நீரால் தெளித்து எடுத்துக்கொள்ளலாம். கையில் எடுத்ததில் அசுத்தம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். ஒரு வேளை அவை வாய்க்குள் போய் விட்டால் துப்பி விட்டு, தண்ணீரால் கொப்பளித்துவிட்டு, நெய் சாப்பிட வேண்டும்.

எவ்வளவு சாப்பிடலாம்?

பொதுவாக பசிக்கு தகுந்தபடி உணவு.

சன்னியாசி 8 கவளங்கள். வான பிரஸ்தன் (இப்ப ரிடயர்ட் ஆசாமி ) 16. க்ருஹஸ்தன் 32.
ப்ரஹ்மசாரி, அக்னிஹோத்திரம் செய்பவர், காளை மாடு இவர்களுக்கு இப்படி சட்ட திட்டமில்லை. ரெண்டு வேளை மட்டும் என்கிற சட்டம் கூட இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஏன்னா அப்படி தேவையான அளவு சாப்பிட்டாதான் அவங்க அவங்க வேலையை திறமையோட செய்ய முடியுமாம்.

ஏன் இப்படி சாப்பாட்டை பத்தி இவ்வளவு எழுதுகிறேன் என்று தோணலாம்.
பல கர்மாக்களை செய்யாமல் இருக்கிறோம். சாப்பிடுவதை மட்டும் எப்படியும் செய்தே தீர வேண்டும் இல்லையா? அதனால செய்கிற இந்த கர்மாவை சரியாக செய்யலாமே என்னுதான். புத்தகங்களை படித்து அத்தனையும் எழுதினால் பதிவுகள் மிக நீளமாக போகும்.

அதனால அடுத்த பதிவுல எதெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாதுன்னு பாத்துட்டு மேலே போகலாம்.



7 comments:

Unknown said...

நியமங்களினால் என்ன பயன். ஆகார நியமம் சாதகனுக்கு அவசியம் தான். ஆனால் இந்த அவசர உலகில் இது சாத்தியமா

Geetha Sambasivam said...

//பாதுகை போட்டுக்கொண்டு சா.கூ. வண்டிகளில் இருந்து கொண்டு சா.கூ.
காய்கள், வேர்கள், பழங்கள், கரும்பு - இதெல்லாம் பற்களால கடிச்சு சா.கூ. (துண்டாக்கி பரிமாறினால் பிரச்சினையே இல்லை//

"பாதுகை போட்டுக் கொண்டோ, வண்டிகளில் இருந்து கொண்டோ, காய்கள், வேர்கள், பழங்கள், கரும்பு இவை எல்லாம் பற்களால் கடிச்சோ சாப்பிடக் கூடாது."

இப்படி எழுதினால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சாப்பிடக் கூடாதுனு ஒழுங்கா எழுதலாம். கண்ணில் விளக்கெண்ணை ஜாஸ்தியாயிடுச்சுனு நினைக்கிறேன். :P

திவாண்ணா said...

ஜெய் இந்த காலத்துல இதெல்லாம் சிரம சாத்தியம்தான்.
ஆனால் ஆகாரம்தான் ஒருவனுடைய எண்ணங்களை நிர்ணயிக்குது. எண்ணங்கள் வாழ்வை நிர்ணயிக்குதுங்க. அதனால ஆகார நியமம் அவசியம். நான் பல முறை சொன்னபடி முடிந்த வரை கடைபிடிக்க முயற்சி செய்யணும்.

திவாண்ணா said...

@கீ அக்கா,
கண்ணெல்லாம் எரியுது!

ambi said...

அரிய தகவல்கள், இனிமே நின்னுன்டு சாப்ட மாட்டேன். நன்னி. :))


//"பாதுகை போட்டுக் கொண்டோ, வண்டிகளில் இருந்து கொண்டோ, காய்கள், வேர்கள், பழங்கள், கரும்பு இவை எல்லாம் பற்களால் கடிச்சோ சாப்பிடக் கூடாது."

இப்படி எழுதினால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சாப்பிடக் கூடாதுனு ஒழுங்கா எழுதலாம்.//

ஆக பாதுகை போட்டுக்காம, வண்டில இல்லாம இருந்தா பழங்கள், வேர்கள் எல்லாம் கடிச்சு சாப்பிடலாம். அப்படின்னு நான் சந்தேகம் கேட்டுட கூடாதுன்னு தான் திவா-54 அண்ணா, சா.கூ, சா.கூன்னு எழுதி இருக்கார். என்ன புரிஞ்சசோ கீதா பாட்டி 75? :p

பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் உள்ளனர், குற்றம் கண்டுபிடித்தே......

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா! நான் எத்தனை கவளம் சாப்பிடறேன்னு தெரியல்லையே...இன்னைக்கு எண்ணிப் பார்க்கறேன்.. :)

திவாண்ணா said...

எண்ணுங்க மௌலி.
அனேகமா குறைச்சலாவே இருக்கும்!