Wednesday, February 4, 2009
தூல சரீரம்
ம்ம்ம்.. அப்பாடா! நிறையவே கவர் பண்ணிட்டோம் போன கொஞ்ச நாட்கள்ளே! பல விஷயங்கள் புதுசு என்கிறதால நிதானமாவே போறோம். அப்பப்ப ரிவிஷனும் பண்ணிகிட்டு போறோம்.
இப்போதைக்கு இதெல்லாம் குண்ட்ஸா புரிஞ்சா கூட போதும். இன்னும் கொஞ்சம் மேலே போகப்போக நல்லாவே புரியும்.
இன்னும் தமோ குணம் பாக்கி இருக்கு. கொஞ்சம் நிதானமா பாத்தா இதுவும் புரிஞ்சுடும்.
சரீரங்கள்ளே காரண சரீரமும் சூக்கும சரீரமும் பாத்தாச்சு. மீதி ஸ்தூல சரீரம்.
அதே போல கோசங்கள்ளே ஆனந்த, பிராண. மனோ, விஞ்ஞான மய கோசங்களை பாத்தாச்சு. இன்னும் அன்ன மய கோசம் பாக்கி.
இப்ப இந்த சரீரங்கள், கோசங்கள், தன் மாத்திரைகள் - இதுக்கெல்லாம் ஒரு தொடர்பு தெரியுது இல்லையா?
சத்வம்- ஆனந்த மய கோசம்- காரண சரீரம்
ரஜஸ் - பிராண, மனோ, விஞ்ஞான மய கோசங்கள் - சூக்ஷ்ம சரீரம்.
இப்ப வரது தமஸ் - அன்ன மய கோசம் - ஸ்தூல சரீரம்.
ஒரே விஷயங்கள் வெவ்வேற மாதிரி- வார்த்தைகள்ளே சொல்லப்படுது. அவ்வ்ளோதான். இதை சரியா புரிஞ்சுகிட்டா இனிமே குழப்பம் இருக்காது.
தமோ குணத்து சமாசாரம் என்னன்னா ஈஸ்வரன் அதை ஒரு வடிவம் கொடுத்து நாம் பாக்கிறாப்பல செய்யறான். சூக்குமமா இருந்த அத்தனையும் இப்ப நாம பாக்கிறாப்போல ஸ்தூலமா இருக்கு.
என்னவா பாக்கிற மாதிரி ஆயிடுது?
ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண்.
அட இதையே முன்னால சொல்லல்லை?
அப்ப சொன்னது இதே பேர்கள்தான். ஆனா அதெல்லாமே வெறும் தத்துவமா இருந்தது- சூக்ஷுமமா. பாக்கிறாப்பல இல்லை.
இப்ப தமோ குணத்திலேந்து பாக்கிறாப்பல வருது. ஆனா அதே பேர்கள்தான்.
இது நடக்கிறது ஒரு ப்ராஸஸ்ஸாலே. அதுக்கு பஞ்சீகரணம் ன்னு பேர்.
40.
சூக்குமசகமிம் மட்டுஞ் சொல்லினோ மிப்பாற்றூலம்
ஆக்குமா ரோபந்தானு மடைவினின் மொழியக்கேளாய்
தாக்குமிவ் வுயிர்க்குத்தூல தநுவும்போகமு முண்டாகக்
காக்குமவ் வீசன்பஞ்சீ கரணங்கள் செய்தான்றானே
சூக்கும சகம் இம்மட்டும் (இது வரை) சொல்லினோம். இப்பால் தூலம் ஆக்கும் (தூல தேகம் முதலான பிரபஞ்சம் உண்டாகும்) ஆரோபந்தானும் (அத்தியாசத்தையும்) அடைவினில் (கிரமமாக) மொழிய கேளாய். [சூட்சும தேகத்தில்] தாக்கும் (சம்பந்தமான) இவ்வுயிர்க்கு (இந்த சீவர்களுக்கு) [கர்மத்துக்கு தக்க] தூல தநுவும் (தேகமும்) [விஷய] போகமும் உண்டாக, காக்கும் அவ்வீசன் (தமோ குண அம்சம் ஐந்தினையும்) பஞ்சீகரணங்கள் (ஐந்தாக பிரித்தல்) செய்தான்.
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
// அப்பப்ப ரிவிஷனும் பண்ணிகிட்டு போறோம்.//
அண்ணா, ரிவிஷன் பதிவுகளை தனியாக லிஸ்ட் தர முடியுமா? . அதை எல்லாம் மீண்டும் ஒருமுறை படிக்க மட்டும் இல்லை, பின்னாடி உங்களைப் பாஸ் பண்ண வைக்கவும் பெரிய பொறுப்பு இருக்கே, அதுக்கும் உபயோகமா இருக்கும் :-)
மௌலி மூலப்பிரகிருதி ஆரம்பித்து எல்லாமே திருப்பி திருப்பி படிச்சு புரிஞ்சுக்கிற விஷயங்கள்தான்.
ரிவிஷன் அங்ககங்க பண்ணிகிட்டு போறேன்.
இன்னும் பஞ்சீகரணம் பத்தி பதிஞ்சு முடிக்கணூம்.
அப்புறமா சேத்து ஒரு ரிவிஷன் பதிவே போடறேன்.
பாஸ் பண்ண எனக்கும் ஆர்வம் இருக்கு இல்லயா!
ஒண்ணுமே புரியல :(
தூல உலகிற்கு இறைத்தன்மையைக் கொண்டு வருதல் என்பதே 'இணைப்பு யோகம்' என்று பாண்டிச்சேரியில் அரவிந்தரும் அன்னையும் அவரைத் தொடர்ந்து பலரும் செய்து வந்தார்கள்; வருகிறார்கள். தமோ குணத்தில் உதித்த தூல உடலில்/உலகில் இறைத்தன்மை மறைந்து தானே இருக்கின்றது; அவர்கள் விரும்புவதைப் போலும் எதிர்பார்ப்பதைப் போலும் வெளிப்படையாக இறைத்தன்மையும் ஆன்மிகத் தன்மையும் தோன்றுமா? அவர்களின் கருத்துகளை நீங்கள் படித்திருக்கிறீர்களா?
//அவர்களின் கருத்துகளை நீங்கள் படித்திருக்கிறீர்களா?//
இல்லை. வாய்ப்பு இருந்தும் மனசு அந்தப்பக்கம் போகவில்லை. ஒரு மனத்தடை ன்னு நினைக்கிறேன். அங்கே ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால.
//தமோ குணத்தில் உதித்த தூல உடலில்/உலகில் இறைத்தன்மை மறைந்து தானே இருக்கின்றது;//
நிச்சயமாக!
// அவர்கள் விரும்புவதைப் போலும் எதிர்பார்ப்பதைப் போலும் வெளிப்படையாக இறைத்தன்மையும் ஆன்மிகத் தன்மையும் தோன்றுமா?//
யார் எதை விரும்பினாலும் அதற்கான சாதனை - செயலை- செய்தால் அது கிடைத்துவிடுகிறது. எதிர்பார்க்கிறது என்னவோ அதற்கு ஏற்ப சாதனையும் கடினம். இது நடைமுறை.
நாம் பார்த்து கொண்டு இருப்பது அத்வைதம். சாதாரண நடைமுறை மட்டத்துக்கு மேலே போய்விடும்.
தேவையை கேட்டு பெறுவதற்கும் தேவையே இல்லாமல் இருப்பதற்குமான வேறுபாடு!
குமரனும், நீங்களும் பேசிக் கொண்டிருக்கிறது நல்லாவே புரியுதுனு சொல்லிக்கிறேன்.
Post a Comment