Pages

Friday, April 17, 2009

நெரூர்- அப்டேட்



கடந்த இரு நாட்கள் நெரூர் சென்று இருந்ததால் பதிவு இன்று போட முடியவில்லை.
அதற்குப்பதில் இதோ ஒரு போனஸ்!
 





நெரூர் கிராம மக்கள் சார்பில் அரசுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. சதாசிவர் உறையும் இடத்தில் முளைத்த வில்வ மரத்தின் வரலாற்றை குறிப்பிட்டு; பால், சந்தனம், தயிர் போன்றவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவதாலும் அதனால் மண் மூடப்பட்டு தண்ணீர் காற்று உள்ளே போக வழியில்லாமல் போனதாயும், மேலும் சுற்றி போடப்பட்ட தளமும் காற்று, நீர் உள்ளே போவதை தடுப்பதாயும் இவற்றுக்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர்.

பிறகு ஒரு பத்திரிகையாளர் வந்து பார்த்துபோய் அவர் எம்பியிடம் பேச மக்கள் சார்பாக ஒருவர் எம்பி யையும் சந்தித்து சில விளக்கங்கள் சொல்லப்பட்டன.

அதைத் தொடர்ந்து காவிரி நீர் தவிர வேறு எதையும் அபிஷேகம் செய்யக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இப்போது பிரச்சினையான தளமும் அகற்றப்பட்டுவிட்டது. மண்டபத்தையும் அகற்றிவிட்டார்கள். (தவிர்த்து இருக்கலாம் போல் இருக்கிறது.) கோவில் திருப்பணி நடக்கிறது.

இத்தனைக்கும் நடுவில் துளிர் விட்ட வில்வம் வளர்ந்து வருகிறது!

கேட்டுக்கொண்ட படி வில்வ மரத்தை சுற்றி வெறும் புல் தரை அமைத்தால் நல்லது.
சதாசிவர் என்ன செய்வாரோ பார்க்கலாம்!

Posted by Picasa

10 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சதாசிவர் ஒன்றும் செய்ய வேண்டாம். நாம் போய் பக்திப் பரவசத்தில் என்ன செய்கிறோம் என்பது கூடத்தெரியாமல், எதையாவது செய்யாமல் இருந்தாலே போதும்:-)

மிகவும் சந்தோஷமான தகவலைச் சொல்லி இருக்கிறீர்கள், நன்றி. நான் அங்கே போய் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாயிற்று. உங்களுடைய பதிவில் தான், சென்ற ஆண்டு, வில்வ மரம் பட்டுப் போனதைப் பற்றி படித்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கொங்கு வேளாளர்களும், நெரூர் மக்களும் விவசாயம் நன்கு அறிந்தவர்கள். அங்கேயே இப்படி நடந்தது என்பதை என்னால், நம்ப முடியவில்லை.

எது எப்படியோ, மரம் மறுபடி துளிர்க்க ஆரம்பித்திருப்பதைப் படத்தில் பார்த்து மிகவும் சந்தோஷம். கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு கே சி பழனிச்சாமி ஒரு நல்ல காரியத்தை, இந்த அரசின் மூலம் செய்ய வைத்திருப்பதற்கும் நன்றி.

துளசி கோபால் said...

சாமிக்கு சிமெண்ட்டை விட மண்ணே விருப்பம்.
பேசாம அந்த மேடையை எடுத்துட்டு மண் ரொப்பினால் போதும். வில்வம் மளமளன்னு வளர்ந்துரும்.

திவாண்ணா said...

//நாம் போய் பக்திப் பரவசத்தில் என்ன செய்கிறோம் என்பது கூடத்தெரியாமல், எதையாவது செய்யாமல் இருந்தாலே போதும்:-)//
உண்மைதான்!

//கொங்கு வேளாளர்களும், நெரூர் மக்களும் விவசாயம் நன்கு அறிந்தவர்கள். அங்கேயே இப்படி நடந்தது என்பதை என்னால், நம்ப முடியவில்லை.//

இந்த தளம் அமைப்பதற்கு முன் அதை குறித்த பலமான எதிர்ப்புகள் எழுந்ததாகவும் வழக்கமான ஈகோ பிரச்சினையால் எதிர்ப்பு எடுபடவில்லை என்றும் அறிகிறேன்.

//பாராளுமன்ற உறுப்பினர் திரு கே சி பழனிச்சாமி ஒரு நல்ல காரியத்தை, //
நல்ல காரியம்தான் செய்யறாரு. என்ன கொஞ்சம் தடாலடியா நடக்குது. அதனால சிலருக்கு வருத்தம். இன்னொரு பக்கம் பாத்தா அந்த மாதிரி ஆக்ஷன்தான் ரிசல்ட் தருது. ஒத்துணர்வு ஏற்படனும் ன்னு பாத்தா நடக்கவே நடக்காது போல இருக்கு!

Geetha Sambasivam said...

சந்தோஷமாய் இருக்கு வில்வம் துளிர் விட்டிருப்பதைப் பார்க்கும்போது. துளசி சொல்லறாப்போல் மேடையை எடுத்துவிட்டு மண்ணைப் போட்டாலே போதும், வில்வம் துளிர்த்துக் காய்த்துப் பழுக்கும். நம்பிக்கைத் துளிர்.

திவாண்ணா said...

அட துளசி அக்கா! ஸலன்டா படிச்சுட்டுதான் இருக்கீங்களா? நம்ம நண்பர் பைரவரை நினைச்சு கொண்டேதான் போனேன். என்னமோ ஆளை காணோம்!
ஆட்கள் வேலை செய்யறாங்கன்னு அப்புறமா போயிட்டார் போல இருக்கு!

ஞாபகம் வருதே... said...

நெரூர் அனுபவப்பதிவு ஒன்று போடலாமே?

திவாண்ணா said...

//நெரூர் அனுபவப்பதிவு ஒன்று போடலாமே?//
வாங்க ¨ஞாபகம்வருதே¨ ஐயா! நல்வரவு.
பதிவு தொடர் போட்டு இருக்கேனே!
கீழே இருக்கிற தொடுப்பை பாருங்க. அதில் இருந்து ஆரம்பிச்சு வரிசையா....

http://anmikam4dumbme.blogspot.com/2008/10/1.html

துளசி கோபால் said...

கூகுள் ரீடரில் போட்டுவச்சுருக்கேன்.
அதான் ஓசைப்படாமப் படிச்சுக்கிட்டுப் போறது.

நானும் கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக்க வேணாமா? :-))))

கிருத்திகா ஸ்ரீதர் said...

ம் போன வாரம் அந்தப்பக்கம் போனோம் சரி எப்படியாவது இந்த தடவை போயிட்டு வந்துடனும்னு ரொம்ப ஆசையா இருந்தா எங்க வாகனம் இடையிலேயே பழுதாகி ரொம்ப பிரச்சனையாயிடுத்து.. அதனால போக முடியலை.... வந்து உங்க பதிவு பார்த்தா ரொம்ப சந்தோஷமாயிருக்கு....

திவாண்ணா said...

//ம் போன வாரம் அந்தப்பக்கம் போனோம் சரி எப்படியாவது இந்த தடவை போயிட்டு வந்துடனும்னு ரொம்ப ஆசையா இருந்தா எங்க வாகனம் இடையிலேயே பழுதாகி ரொம்ப பிரச்சனையாயிடுத்து..அதனால போக முடியலை.... //

அடடா! பரவாயில்லை. அங்கே வேலை நடக்கிறதால அமைதி இல்லை. அடுத்த தரம் போய்க்கலாம்.

// வந்து உங்க பதிவு பார்த்தா ரொம்ப சந்தோஷமாயிருக்கு....//

நன்னி!