60. அபிஷேக தீர்த்தம் அருந்த.
அகால ம்ரு2த்யு ஹரணம்2 ஸர்வ வ்யாதி4 நிவாரணம் |
ஸமஸ்த பாப க்ஷயகரம் (சிவ/ விஷ்ணு/தே3வீ) பாதோ3த3கம்2 ஸு2ப4ம் ||
த3ர்ஸ2நாத் நிகி2ல கில்பி3ஷாபஹம்2 ஸ்பர்ஸ2நாத்3 அகி2ல காமத3ம் சுப4ம்|
ப்ராஸ2நாச்ச பரமார்த்த2 போ3த4கம் சந்த்ரசூட3 சரணோத3கம் ப4ஜே||
பார்த்தால் பாபத்தை அகற்றுவதும், தொட்டதால் இஷ்டத்தை தருவதும், சாப்பிடுவதால் வேதாந்தத்தை அறிவிப்பதுமான சந்த்ரசூடனது பாத தீர்த்தத்தை ஸேவிக்கிறேன். (சந்த்ரசூடன் சந்த்ரசேகரரான மஹாபெரியவாள் என்று கொள்ளலாம். பெரியவா பூஜை செய்பவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.)
- அவ்வாறே குரு பாத தீர்த்தம் அருந்த -
அஜ்ஞாந மூல நாஸா2ய ஜந்ம கர்ம நிவ்ரு2த்தயே |
ஜ்ஞாந வைராக்ய ஸித்3த்4யர்த்த2ம்2 கு3ருபாதோ3த3கம்2 ஸு2ப4ம்||