श्रद्धावीर्यस्मृतिसमाधिप्रज्ञापूर्वक इतरेषाम् ।।20।।
ஶ்ரத்³தா⁴ வீர்ய ஸ்ம்ரு«தி ஸமாதி⁴ ப்ரஜ்ஞா பூர்வக இதரேஷாம் || 20||
உபாய பிரத்யயம்: விதேஹ லயர், பிரகிருதி லயர் ஆகியோரை விட வேறானவர்களுக்கு ஶ்ரத்தையும் அதனால் தாரணையும், அதனால் த்யானமும், அதனால் த்யானிக்கப்பட்டதின் சாக்ஷாத்காரத்தால் ஸமாதியும் இது வலுப்பட்டு ஸம்ப்ரக்ஞாத ஸமாதியும் நிகழ உபாயம் உண்டாகிறது. இந்த உபாயங்கள் வேண்டும் என்று குருவை அண்டுதலும், அவரால் உபதேசிக்கப்பட்டது இதற்கு அனுசரனையாக உள்ள யுக்திகள் – இவற்றை விஷயமாக கொண்ட சித்தத்தின் தெளிவே ஶ்ரத்தை ஆகும். அம்மா குழந்தையை பாதுகாக்கிறது போல ஶ்ரத்தை அப்பியாசம் செய்கிறவங்களை எல்லா இடையூறுகளிலிருந்தும் காப்பாற்றும்.
இந்த ஶ்ரத்தை பயிற்சி செய்வோருக்கு தாரணையில் ஈடுபாட்டை உண்டாக்கும். இதுவே வீர்யம். அதால் த்யானிக்கிற தத்துவத்தில் நிலைப்பாடு உண்டாகும். இது ஸ்ம்ருதி. இது முறையே ஸமாதி, ஸம்ப்ரக்ஞாத ஸமாதி, அஸம்ப்ரக்ஞாத ஸமாதி என கொண்டுவிடும்.
No comments:
Post a Comment