Pages

Wednesday, August 18, 2010

யோகாப்யாசத்துக்கு விக்கினங்கள்:



व्याधिस्त्यानसंशयप्रमादाऽऽलस्याऽविरतिभ्रान्तिदर्शानाऽलब्धभूमिकत्वानवस्थितत्वानि चित्तविक्षेपास्तेऽन्तरायाः ।।30।।

வ்யாதி⁴ ஸ்த்யாந ஸம்°ஶய ப்ரமாதா³''லஸ்யா' விரதி ப்⁴ராந்தி த³ர்ஶாநா' லப்³த⁴ பூ⁴மிகத்வாநவஸ்தி² தத்வாநி சித்த விக்ஷேபாஸ்தே'ந்தராயா​: || 30||

யோகாப்யாசத்துக்கு விக்கினங்கள்:
வியாதி = வாதம், பித்தம், சிலேஷ்மம் என்ற தாதுக்களின் அன்னரசமான ரத்தத்தின் இந்திரியங்களுடைய இயற்கைக்கு மாறான நிலையும்,
ஸ்த்யான = கர்மம் செய்வதற்கு சித்தத்தின் நிலையும்
சம்சயம் = சந்தேகங்கள்
பிரமாத = யோகங்களை அனுஷ்டிக்காமல் இருப்பது
ஆலச்ய = சோம்பல், எதிலும் பிரவ்ருதி இல்லாமல் இருத்தல்.
அவிரதி = விஷயத்தில் ஆசை
பிராந்தி தர்சன = சாஸ்திரம் கூறியதை தவறாக புரிந்துகொள்ளுதல்.
அலப்த பூமிகத்வ = ஸமாதியின் கீழ் படியை அடையாமல் இருப்பதும்
அனவஸ்தி தத்வானி = கிட்டிய ஸமாதி நிலையில் சித்தம் நிலை பெறாமை.
சித்த விக்ஷேபா = மனத்தை அலைக்கழிக்கிற தோஷங்கள்
இவற்றில் எவை உண்டோ அவை யோகத்துக்கு விக்கினங்களாம் .

7 comments:

Geetha Sambasivam said...

ஒரு வழியா ஒரு தெரிஞ்ச விஷயம், புரிஞ்ச விஷயம், நன்றி ஐயா.

vijayaragavan said...

வியாதி = வாதம், பித்தம், சிலேஷ்மம் என்ற தாதுக்களின் அன்னரசமான ரத்தத்தின் இந்திரியங்களுடைய இயற்கைக்கு மாறான நிலையும், :
காபி குடிப்பதால் பித்தம் மாறுவது - இதுனாலேதானா பரமாச்சாரியார் அதை ஒதுக்கணும்னு சொல்லுறார்?
ஸ்த்யான = கர்மம் செய்வதற்கு சித்தத்தின் நிலையும் : இது புரியல ; உடம்போட ஒரு state அப்படித்தானே அர்த்தம் ஆறது? இது எப்படி விக்னம் என்கிற ஒரு வினைச்சொல்லுக்கு அர்த்தம் ஆகிறது?
அலப்த பூமிகத்வ = ஸமாதியின் கீழ் படியை அடையாமல் இருப்பதும்
&&
அனவஸ்தி தத்வானி = கிட்டிய ஸமாதி நிலையில் சித்தம் நிலை பெறாமை. :
எனக்கு இது நன்னா புரியுது, இதுல அப்யாசம் இல்லாம இதை புரிந்து கொள்ள முடியாதே ? இது ஒரு புறம் இருந்தாலும் இதெல்லாம் ஒரு யோகாபியாசத்ல இருக்கிற நிலைன்னா, அது எப்படி ஒரு ஆரம்ப விக்னம் ஆகும்?
- இதை type செய்யும் போதே அப்யாசம் நா அது சித்தி ஆகிறவரை அப்யாசம் தானேன்னு புரிஞ்சது ...

ரொம்ப நன்னா இருக்கு. but இது எப்படி அனுபவம் இல்லாம (கேள்வி ஞானத்துள மட்டும் ) புரிந்து கொள்ள முடியும் ?

திவாண்ணா said...

வியாதி = வாதம், பித்தம், சிலேஷ்மம் என்ற தாதுக்களின் அன்னரசமான ரத்தத்தின் இந்திரியங்களுடைய இயற்கைக்கு மாறான நிலையும், :
காபி குடிப்பதால் பித்தம் மாறுவது - இதுனாலேதானா பரமாச்சாரியார் அதை ஒதுக்கணும்னு சொல்லுறார்?//

ம்ம்ம் ஆமாம். அவர் காப்பிக்கு டீயே பரவாயில்லைன்னு சொல்லி இருக்கிறதா கேள்வி.

//ஸ்த்யான = கர்மம் செய்வதற்கு சித்தத்தின் நிலையும் : இது புரியல ; உடம்போட ஒரு state அப்படித்தானே அர்த்தம் ஆறது? இது எப்படி விக்னம் என்கிற ஒரு வினைச்சொல்லுக்கு அர்த்தம் ஆகிறது?//

இல்லை இது mind set.சித்தம் மனசா ஆகி அலை பாய்ந்து கொண்டு இருந்தா அது தடைதானே?//

// அனவஸ்தி தத்வானி = கிட்டிய ஸமாதி நிலையில் சித்தம் நிலை பெறாமை. :
எனக்கு இது நன்னா புரியுது, இதுல அப்யாசம் இல்லாம இதை புரிந்து கொள்ள முடியாதே ? இது ஒரு புறம் இருந்தாலும் இதெல்லாம் ஒரு யோகாபியாசத்ல இருக்கிற நிலைன்னா, அது எப்படி ஒரு ஆரம்ப விக்னம் ஆகும்? //

ஆரம்பம்ன்னு சொல்லையே? சித்தம் நிற்கணும். அதுக்கு பயிற்சியிலே சித்தம் ஒரு இடத்தில் நிலைச்சு நிற்கணும். அதாவது சமாதியில். அங்கே நிலைச்சு இல்லை ன்னா அது தடையே.

//- இதை type செய்யும் போதே அப்யாசம் நா அது சித்தி ஆகிறவரை அப்யாசம் தானேன்னு புரிஞ்சது ...// ஆமாம். அப்பியாசத்திலே ப ல நிலைகளிலே பல தடைகள்.

// ரொம்ப நன்னா இருக்கு. but இது எப்படி அனுபவம் இல்லாம (கேள்வி ஞானத்துள மட்டும் ) புரிந்து கொள்ள முடியும் ? //

உண்மை; தியரிடிகலா புரியறது பயிற்சியில இறங்க ஒரு உந்துததலா இருக்கலாம் என்கிறதே இதன் பயன். வேறு ஒண்ணுமில்லை.

சீரியஸா படிக்கிறதைப் பார்த்து சந்தோஷம்!

Geetha Sambasivam said...

ரொம்ப நன்னா இருக்கு. but இது எப்படி அனுபவம் இல்லாம (கேள்வி ஞானத்துள மட்டும் ) புரிந்து கொள்ள முடியும் ?//

நிச்சயமா முடியாதுதான். சித்தம் நிலைபெறலைனாலே நாம அப்பியாசம் செய்தது சரியில்லைனு தெரியறது இல்லையா? சித்தத்தை ஒருமுகப் படுத்தத் தானே இவை எல்லாமே.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, பதில் கமெண்ட்ஸ் பத்துத் தரம் வந்திருக்கு! :))))))))))சித்தி பத்தி எழுதறீங்களா? சித்தர் வேலை போல! :D

vijayaragavan said...

/* ம்ம்ம் ஆமாம். அவர் காப்பிக்கு டீயே பரவாயில்லைன்னு சொல்லி இருக்கிறதா கேள்வி. */

"அதுனால பெரியவா டீ சாப்பிட சொல்லுறான்னு வெளில போய் சொல்லிடாதீங்கோ ..."
- பரமாச்சாரியார் Deivathin kural la iruuku :)

http://sowvee.blogspot.com/2010/08/blog-post_18.html

Jayashree said...

Disease, langour, carelessness-including feeling guilt?.laziness_:((, craving , delusion or misconceptions , failure , instability இது பாதின்னா, இதன்விளைவா அடங்காத மனத்தின் அழிசாட்டியம்!! அதன் விளவு மூச்சிலும் சித்தத்திலும் , அதை ஏன் விட்டார்களோ பெரியவர்கள்!! ஆக தடைனு ஒண்ணு இருந்தா நிவர்த்தினு ஒண்ணு இருக்கணும் இல்லியா ?என்ன வழியா இருக்க முடியும் மனசை சுத்தப்படுத்துவதை விட?அப்போ back to square one !தான்! திரும்பவும் நியமங்கள் தான் .!! perseverance தானோ? வேற வழி !!!So precisely it is to give the monkey a task and train it நாம செய்யறதை செஞ்சு வைப்போம். அவன் போட்டது எதுவோ அது வரப்போ வரும்


அருட்பெருஞ்சோதியார் சொல்வதுபோல் "வேண்டுதல் வேண்டாமை என்றத் தன்மைகளைக் கடந்து நிர்க்குணமாய் ஒருமையுற்று நின்றால், நாதாந்தத்தே ஜோதிபதியின் காட்சி கிடைக்கும்."அப்போ qualities ஐ develop பண்ணிக்கணும்.