मैत्रीकरुणामुदितोपेक्षाणां सुखदुःखपुण्यापुण्यविषयाणां भावनातश्चित्तप्रसादनम् ।।33।।
மைத்ரீ கருணா முதி³தோபேக்ஷாணாம்° ஸுக² து³:க² புண்யாபுண்ய விஷயாணாம்° பா⁴வநாதஶ் சித்த ப்ரஸாத³நம் || 33||
சுக துக்கமுள்ளவர்கள், புண்ய அபுண்யம் செய்பவர்கள் விஷயத்தில் முறையே சிநேகம், கருணை, தயை, உதாசீனம் ஆகியன கொள்ள சித்தத்தில் தெளிவு உண்டாகிறது.
சித்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அசூயை முதலான குணங்கள் அங்கே குடி ஏறி விடும். பின் அவ்விடத்தில் ஸமாதி உண்டாகாது.
அதற்கு என்ன வழி? பிறருக்கு துக்கத்தை தரக்கூடாது. முடிந்த வரை மற்றவர் துக்கத்தை போக்க வேண்டுமென சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்ய மற்றவருக்கு உபகாரம் செய்கிறோமோ இல்லையோ அபகாரம் செய்யாது இருப்போம்.
மற்றவருக்கு - சுகமாக இருப்பவரிடம் நட்பு வேண்டும். துக்கமுள்ளவரிடம் கருணை வேண்டும். புண்ய சீலர்களிடம் ப்ரீதி இருக்க வேண்டும். புண்யம் செய்யாதவரிடம் உதாசீனம் இருக்க வேண்டும். (அப்போதுதான் வெறுப்பு இல்லாதிருக்கும். எனக்கு மிகவும் பயனானது இது.)
இப்படி செய்ய ரஜோ தமோ குணங்கள் போய் சத்வம் பெருகும்.
2 comments:
பிறருக்கு துக்கத்தை தரக்கூடாது. முடிந்த வரை மற்றவர் துக்கத்தை போக்க வேண்டுமென சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்ய மற்றவருக்கு உபகாரம் செய்கிறோமோ இல்லையோ அபகாரம் செய்யாது இருப்போம்.//
இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று.
noted
Post a Comment