ततः प्रत्यक्चेतनाधिगमोऽप्यन्तरायाभावाश्च ।।29।।
தத: ப்ரத்யக் சேதநாதி⁴ க³மோ'ப்யந்தராயா பா⁴வாஶ்ச || 29||
ஈஸ்வர ப்ரணிதானத்தால் தேகம் முதலானவற்றை விட வேறாக அறியப்படுகின்றவனும் சேதனனுமான ஜீவனுடைய உண்மையான அறிவும் உண்டாகிறது; வியாதி முதலான யோகாப்யாச தடைகளின் நிவிருத்தியும் உண்டாகிறது.
எந்த வஸ்துவை த்யானிக்கிறோமோ அதன் உண்மையான ஞானம் அல்லவா உண்டாக வேண்டும்? பரமாத்மாவை த்யானிக்க ஜீவனுக்கு தன் சொரூப ஞானம் எப்படி உண்டாயிற்று? ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்று இல்லையானாலும் யோக சித்தாந்தப்படி அவற்றின் சொரூபம் ஒன்றே. (அத்வைத சித்தாந்தத்தில் கூடஸ்தனும் பிரம்மமும் வேறில்லை என்பது போல)
3 comments:
எந்த வஸ்துவை த்யானிக்கிறோமோ அதன் உண்மையான ஞானம் அல்லவா உண்டாக வேண்டும்? //
ஆஹா, அப்படி மட்டும் நடந்துட்டால்?? கதையே வேறேயா ஆயிடுமே! நினைச்சாலே பரவசமா இருக்கு!
அதிகம் ஆசைப்படறேனோ? :(
யத் பாவம் தத் பவதி!
""வியாதி முதலான யோகாப்யாச தடைகளின் நிவிருத்தியும் உண்டாகிறது.""
True indeed!! படித்துஅறிந்ததினால் இல்லை நிகழ்ந்ததினால் அறிந்தது!.
Post a Comment