विरामप्रत्ययाभ्यासपूर्वः संस्कारशेषोऽन्यः ।।18।।
விராம ப்ரத்யயாப்⁴யாஸ பூர்வ: ஸம்°ஸ்கார ஶேஷோ'ந்ய: || 18||
விருத்தி இல்லாமைக்கு காரணமான பர வைராக்கியத்தோட பயிற்சியை உபாயமாக உடையதும், சம்ஸ்காரத்தை மட்டும் மீதமாக உடையதுமான யோகமே மற்றது (அஸம்ப்ரக்ஞாத ஸமாதி.)
ஸம்ப்ரக்ஞாத ஸமாதியிலே ஒரு விஷயத்தில் பாவனை வைக்கப்பட்டது இல்லையா? அதிலே சித்த விருத்தி கொஞ்சம் இருந்தது. ஆனால் அலைய விடாம ஒரே விஷயத்தில வைக்கப்பட்டது என்பதே அதில சிறப்பு. ஆனா யோகம்ன்னா சித்த விருத்தியை நிறுத்தறது ன்னு இல்லை பார்த்தோம்? ஆக நாம் இதையும் தாண்டனும். அப்ப எதோட பயிற்சி செய்யணும்? முன்னே பர வைராக்கியம்ன்னு பார்த்தோமில்லையா? எல்லாவற்றிலிருந்தும் பற்றற்று இருப்பது- அதே உபாயம்.
இது அஸம்ப்ரக்ஞாத ஸமாதி. இப்ப யோகியோட நிலை என்ன? ஸ்தூல -பருப் - பொருட்களோட சம்பந்தமில்லை; ஸூக்ஷ்ம பொருட்களோட சம்பந்தமில்லை. இந்திரியங்களோட சம்பந்தமில்லை. ஏன் இப்படி சம்பந்தமில்லை? ஏன்னா ஒரு சித்த விருத்தி இல்லாம இவற்றோட சம்பந்தம் இருக்க முடியாது. என் கண், என் காதுன்னு ஒரு எண்ணம் இருந்தாதானே அவற்றோட சம்பந்தம் இருக்க முடியும்? அந்த எண்ணங்களே இல்லாம போயிடும்.
பின்னே என்னதான் மிஞ்சி இருக்குன்னு பார்த்தா, சித்தத்தோட சம்ஸ்காரம் – இவ்வளோ நாள் பயிற்சி செய்ததால இருக்கிற பண்பு- மட்டுமே ஒட்டிக்கொண்டு இருக்குமாம்.
அட! பர வைராக்கியத்திலே எல்லாம் விட்டுப்போயிடும்ன்னு சொன்னாபோல இருக்கேன்னா, ஆமாம், முந்தைய சம்ஸ்காரம் எல்லாம் விட்டுடும்; ஆனா இப்ப பழகுகிற பர வைராக்கியம் ஒரு சம்ஸ்காரத்தை உண்டு பண்ணுமே? அது மிஞ்சும். இது கொஞ்சம் விசேஷமானதால் இது வேற ஒரு சித்தத்தை –எண்ண ஓட்டத்தை- தோற்றுவிக்காது. இதுக்கு அடுத்தபடியான மோக்ஷத்தில இந்த சித்தம் கூட இல்லாம போயிடும். அந்த சித்தத்தோட ஒட்டிக்கொண்டு இருக்கிற சம்ஸ்காரமும் போயிடும்.
6 comments:
ஸம்ப்ரக்ஞாத சமாதியிலே இருந்து திரும்ப வரேன்! கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு! :(
ஆமாம். இந்த பதிவுகளிலே மட்டும் நிறையவே யோசிக்க வேண்டி இருக்கும். திருப்பி திருப்பி பார்க்க வேண்டி இருக்கும். ஸ்லோ அன்ட் ஸ்டெடி.....
ரூப த்யானம் _ அரூப த்யானம் _ cessation of all psychomental activities(வ்ருத்தி அழியறது)
So அஸம்ப்ரஞாத சமாதிங்கறது
அரூப த்யானம் –ரூபமில்லாத ஒன்றில் மூழ்கி போறது அதாவது INCORPOREAL REALM ரைட்? அப்போ நிர்விகல்ப சமாதியா? விகல்பங்கள் இல்லாதது? புத்தர் சொல்லற ascent ல பெர்செப்ஷனுக்கு மேல அதுக்கப்புறம் சூன்யம் ஒண்ணுமே இல்லாதது அதுக்கப்பறம் எங்கும் நிறைகின்ற, EXPANSIVE CONSCIOUSNESS அதுக்கப்புறம் அளவிடமுடியாத வள்ளலார் சொல்லற தப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்கம் திகழ்ந்தோங்க ! BOUNDLESS!! அகண்டாகாரம் கொட்டிக்கிடக்குது ஐயோ!! காணவாரும் ஜகத்தீரே! அங்க கர்மம், வாசனை, சித்தம் ஒண்ணும் இருக்காது!! HOW NICE!! DISAPPEAR INTO THIN AIR. அதுக்கு எத்தனை வைராக்யம் வேணும் ! !” திருக்கதவம் திறவாதோ திரைகள் எல்லாம் தவிர்த்தே!”
அப்போ ஸம்ப்ரஞாத ஸமாதில மெதுவா மெதுவா முதல்ல MENTAL ACTIVITY பாவனை உணர்வுகளோட, அப்புறம் அந்த வ்ருத்தி குறைந்து சந்தோஷம் JOY (மென்டல் அக்டிவிடி ஸீஸ் ஆறதுனால , அப்புறம் பறக்கற மாதிரி ஒரு சுக அனுபவம், SENSE OF WELL BEING!, அங்கேந்து EQUANIMITY ???
இதுவற நான் புரிஞ்சுண்டது என்னன்னா ரூப த்யானம், வைராக்யம் எல்லாம் மனச CULTIVATE பண்ண உதவும். அது REACH பண்ணினா அங்கேந்து அரூப த்யானம் சித்திக்கும் ORசம்ப்ரஞாத சமாதி COULD BE A ROUTE TO ASAMPRGNYATHA SAMAATHI ??PRECISELY TO ME ரூப அரூபம = INTUBATING A BODY GIVES YOU A BETTER FEEL THAN INTUBATING A DUMMY!! நான் புரிஞ்சுண்டது ரைட்டா ராங்காங்கறது முக்யமில்லை. முயற்சியின் ஆரம்பம்… அது முக்யம் .But something inside me feels happy when I made this effort to understand. !!:)))))))))))))) Thanks a lot sir !! bless you
ஏன்னா ஒரு சித்த விருத்தி இல்லாம இவற்றோட சம்பந்தம் இருக்க முடியாது. என் கண், என் காதுன்னு ஒரு எண்ணம் இருந்தாதானே அவற்றோட சம்பந்தம் இருக்க முடியும்? அந்த எண்ணங்களே இல்லாம போயிடும்.
பின்னே என்னதான் மிஞ்சி இருக்குன்னு பார்த்தா, சித்தத்தோட சம்ஸ்காரம் – இவ்வளோ நாள் பயிற்சி செய்ததால இருக்கிற பண்பு- மட்டுமே ஒட்டிக்கொண்டு இருக்குமாம்...
ஸ்திதப்ரக்ஞர்னு சொல்லலாமா???
//நான் புரிஞ்சுண்டது ரைட்டா ராங்காங்கறது முக்யமில்லை. முயற்சியின் ஆரம்பம்… அது முக்யம்//
ரொம்பவே சரி!
உங்க புரிதல் பெருமளவு சரியாவே இருக்கு!எவ்வளோ படிச்சு புரிஞ்சு வச்சுருக்கீங்க!
//இதுவற நான் புரிஞ்சுண்டது என்னன்னா ரூப த்யானம், வைராக்யம் எல்லாம் மனச CULTIVATE பண்ண உதவும்.//
ஆன்மீகத்தை எந்த வழியிலே சுத்தி சுத்தி வந்தாலும் இந்த மனசு... இதுதான் முக்கியம். கல்டிவேஷன், நிலைப்படுத்தறது, கொஞ்சம் கொஞ்சமா குறைக்கிறது அப்புறம் இல்லாம ஆக்கறது......
//ஸ்திதப்ரக்ஞர்னு சொல்லலாமா???// ம்ம்ம்ம்! அவ்வளோ பொருந்தாதுன்னு தோன்றது. சுகம் துக்கம் இரண்டையுமனுபவிச்சு கொண்டு அப்பவும் நிலை பெயராம, கவலைப்படாம இருக்க அவன் ஸ்தித பிரக்ஞன். இதில பிரக்ஞை இருக்கே?
Post a Comment