ईश्वरप्रणिधानाद्वा ।।23।।
ஈஶ்வர ப்ரணிதா⁴நாத்³வா || 23||
ஈஸ்வரனுடைய பக்தி விசேஷத்திலிருந்தோ [மிக விரைவில் ஸமாதி லாபம் உண்டாகிறது.]
முன்னே பார்த்தது எல்லாம் ஜீவனின் முயற்சியில் செய்தவை. இப்போது ஈஸ்வர பக்தியால் மிக விரைவில் ஸமாதி உண்டாகும் என சொல்லப்படுகிறது. இந்த வழியில் க்லேசங்கள் ஏதும் இரா. ஆகவே இது சுலபமாக சாத்தியமாகும்.
क्लेशकर्मविपाकाशयैरपरामृष्टः पुरुषविशेष ईश्वरः ।।24।।
க்லேஶ கர்ம விபாகாஶயைரபராம்ரு«ஷ்ட: புருஷ விஶேஷ ஈஶ்வர: || 24||
முக்காலத்திலும்ன்னு சொல்லி இருக்கு இல்லையா? அதனால ஒரு வேளை ஜீவன் ரொம்ப முன்னேறி ஈஸ்வரனுக்கு நிகரான சக்திகளை பெற்றாலும் ஈஸ்வரனாக முடியாது. பிரகிருதி சம்பந்தம் இல்லாம கைவல்ய நிலையிலே இருந்தாக்கூட ஒரு காலத்திலே க்லேசங்களோட இருந்ததால ஈசனாக முடியாது. பிரகிருதி லயமடைந்தாலும் வியவகாரிகங்களிலே (நடைமுறையிலே) பந்தம் இருக்கும்; தேவர்களும் மனிதர்களும் போல் போகம் அனுபவிக்கிறது தெரியும்; தாக்ஷ்ணிக பந்தம் இருக்கும். யோக சித்தாந்தப்படி கைவல்ய நிலை அடைந்தவர் முன்னரே இந்த பந்தங்களை அனுபவிச்சுட்டு அப்புறமே கைவல்ய நிலை அடைந்தவர். ஈஸ்வரனுக்கோ முக்காலங்களிலும் பந்தங்களில்லை.
ஜீவனுக்கு புருஷன் என்று பெயர். க்லேசங்கள் அந்தக்கரணத்தை சார்ந்தவை. இந்த அந்தக்கரணமே ஜீவனோட முக்கிய லக்ஷணம். ஆகவே ஜீவனுக்கு அந்தக்கரணத்தோட க்லேசங்களால உண்டாகும் சுக துக்கங்களுடைய சம்பந்தம் உண்டு. ஈஸ்வரனோ தன் சங்கல்பத்தாலேயே எதையும் சாதிக்க வல்லவன்.
5 comments:
ஜீவன் என்ன முயற்சி செய்தாலும் ஈஸ்வரனாக முடியாது.//
இதெல்லாம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணறதே பெரிய விஷயம். ஈஸ்வரனாக ஆசைப்பட முடியுமா?
இங்கே சொல்லப் படும் ஈஸ்வரனுக்கு இன்னும் கொஞ்சம் அதிக விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்குமே!
இதெல்லாம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணறதே பெரிய விஷயம். ஈஸ்வரனாக ஆசைப்பட முடியுமா?//
:-))
// இங்கே சொல்லப் படும் ஈஸ்வரனுக்கு இன்னும் கொஞ்சம் அதிக விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்குமே!//
அடுத்த 2 பதிவுகளில் வரும்.
"ஜீவன் என்ன முயற்சி செய்தாலும் ஈஸ்வரனாக முடியாது."
Initially this statement left me awe struck. I let my mind ponder over this for few days. சில insights:_
1 நான் முயற்சி பண்ணறேன், போறேன்,-- அதுவே hinderance.- அஹம்காரம்.
2 முடியும், முடியாது ங்கற அறிவிப்புகளும thought bundles லேந்துதான்.
3 PEA BRAIN க்கு தோணின ANALOGY :- அலை சமுத்திரத்தில் இருக்கு ஆனா சமுத்திரம் அலை இல்லை. நானும் ஒரு அலை, நதி மாதிரி தான் . சமுந்திரத்தில் அலை/ நதி கலந்து நின்னுட்டா அப்போ தனி identity கிடையாது. அலை, நதி திரும்பிவந்து கடல் எப்படி இருக்கும்னு சொல்லுமோ அப்படித்தான் SO கலக்கமுடியும், ஆக முடியாது?
4 கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் !!அப்படிங்கறா seers
5 உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல கதாமல்ல மறதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானுமல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே –
சிவவாக்கியர்
அந்த ஈஸ்வரனை விவரிக்கறதும் MIND THAAN போலிருக்கு.
6 ஆராய்ச்சில கிடைக்கல , அறியல . “LET BE” அன்பே சிவம்!அதுவே சிவம். அது ஒரு சுகானுபவமோ!! "எனக்கு தெரியாது" அதுதான் என்னோட PRESENT. (which helps me to be mindful)
7 அவரவர் அனுபவம் அவர் தமை அறிவது; ஒவ்வொதருக்கும் ஒவ்வொருமாதிரி!!
இந்த INSIGHT எல்லாம் வந்தப்போ மனம் நெகிழ்ந்து HUMBLE ஆனது நிஜம்!!
ம்.. அடுத்தது என்ன சொல்லறா பெரியவா
TA!!
ஜெயஸ்ரீ அக்கா! அமேஃசிங்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. நல்ல அனாலைஸிஸ்!அடுத்து வர டெபினஷனே ப்ரூஃபா போதும்னாலும் யோசிக்கிறது நல்லது. நமஸ்காரம்!
Post a Comment