स एषः पूर्वेषामपि गुरुः कालेनानवच्छेदात् ।।26।।
ஸ ஏஷ: பூர்வேஷாமபி கு³ரு: காலேநாநவச்சே²தா³த் || 26||
அந்த ஈஸ்வரன் ஆதியில் உண்டான பிரம்மா முதலானவர்களுக்கும் குருவாக இருக்கிறார். காலத்தால் ஆயுளின் அளவு கூறப்படாமல் இருக்கிறார்.
तस्य वाचकः प्रणवः ।।27।।
தஸ்ய வாசக: ப்ரணவ: || 27||
பிரணவமானது அவருக்கு வாசகமாகும். (பெயராகும்.)
பிரணவம் என்பது பகவானின் மங்களகரமான சுபத்தை செய்யும் குணத்தை குறிக்கும். எப்படி ஒரு குழந்தை தன்னை "அம்மா" என்று அழைப்பதால் அன்னை மகிழ்வாளோ அது போல பகவான் தன்னை குறிக்கும் பிரவணத்தை கூறி தன்னை உபாசிப்பவன் மீது சந்தோஷம் கொண்டு அவனுக்கு கைவல்யம் முதலான நன்மைகளை செய்கிறார்.
3 comments:
மிகவும் நன்றாகப் புரிகிறது;
நன்றி
தேவ்
அது போல பகவான் தன்னை குறிக்கும் பிரவணத்தை கூறி தன்னை உபாசிப்பவன் மீது சந்தோஷம் கொண்டு அவனுக்கு கைவல்யம் முதலான நன்மைகளை செய்கிறார்.//
நல்ல விளக்கம், புரியுது. ஓம், ஓம், ஓம், ஓம், ஓம், னு ஏன் சொல்லணும்னு சொல்றாங்க என்பதற்கான காரணமும் புரிய வருகிறது. அதுவும் அடி வயித்தில் மூலாதாரத்தில் இருந்து எழும்பணும்னு சொல்வாங்க. அருமையான அநுபவத்தைக் கொடுக்கும் சொல்! நன்றி,.
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே !
அ ஔ ம் ஈஸன், குரு, ஜீவி ??
Post a Comment