Pages

Friday, August 20, 2010

பக்தி, வைராக்கியம் இல்லையெனில்???




तत्प्रतिषेधार्थमेकतत्त्वाभायासः ।।32।।
தத் ப்ரதிஷேதா⁴ர்த²மேகதத்த்வாபா⁴யாஸ​: || 32||

அந்த விக்கினங்களை தவிர்க்க ஏதாவது தத்துவம் ஒன்றில் மனதை நிறுத்தி த்யானம் செய்வதே.
சூத்திரம் 29 இல் ஈஸ்வர ப்ரணிதானம் விக்கினங்களை போக்கும் எனச்சொல்லப்பட்டது. அந்த திட பக்தி, வைராக்கியம் இல்லையெனில் என்ன செய்வது? ஏதேனும் ஒரு மூர்த்தியில் மனதை நிறுத்தி தாரணை, த்யானம் செய்து வர வேண்டும். வேறு வஸ்துவிடம் லயித்த மனது வியாதி முதலான துக்கங்களை உணராது.


1 comment:

Geetha Sambasivam said...

வேறு வஸ்துவிடம் லயித்த மனது வியாதி முதலான துக்கங்களை உணராது.//

எங்கே?? அந்த நிலைக்கு வர எவ்வளவு படிகள் முன்னேறணும்?? என்னளவில் முயற்சி செய்யலாம், போன ஜன்மத்துக் கொடுப்பினை இருந்தால், இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சீக்கிரமே லபிக்கும். மத்தவங்க அனுபவிச்சுத் தானே தீரணும்!

கொஞ்ச நஞ்சம் இதில் ஆர்வம் வரதுக்கே போன ஜன்மத்து மிச்சம்னு தோணுது. இன்னும் எத்தனை பாக்கி இருக்கோ? :(((((