तत्र शब्दार्थज्ञानविकल्पैः संकीर्णा सवितर्का समापत्तिः ।।42।।
தத்ர ஶப்³தா³ர்த²ஜ்ஞாந விகல்பை: ஸம்°கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி: || 42||
முன் சொல்லிய ஸமாதிகளுள் சப்தம், அர்த்தம், அர்த்தத்தைப்பற்றிய ஞானம் இவற்றின் பேதம் தெரியாமல் இருக்கும் நிலைக்கு ஒப்பான சாக்ஷாத்காரம் ஸவிதர்க்கம் எனப்படும்.
கோ என்ற சம்ஸ்க்ருத சப்தம் ஒரு சொல். அதற்கு பசு என்பது பொருள். கோ என்று கேட்கும் போது அது நம் புத்தியில் ஒரு ஞானத்தை உண்டாக்குகிறது. ஒரு சொல்லின் சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக சம்பந்தப்படுத்தி அறிவது விகல்ப ஞானம். இதற்கு ஒப்பானதே ஸவிதர்க்க ஸமாதி. இதில் சப்தம், பொருள், ஞானம் மூன்றும் ஒன்றாக கலந்ததாகவே கொள்ளப்படும்.
4 comments:
கொஞ்சம் குழப்பமா இருக்கே! :(
கோ என்று சொல்லும்போதே பசுவைத் தானே புத்தி/அறிவு புரிந்து கொள்கிறது???
ஒரு சொல்லின் சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும்//
எப்படி வேறாகும்??? கோ என்று சொல்லும்போது ஏற்படும் சப்தத்தைக் குறிக்குமா?? கோமாதா என்று சொல்லும்போதே பசுவைத் தான் புரிந்து கொள்ள முடியுது. :(
அக்கா! விஷயமே அதுதான். கோ என்ற சப்தம் கேட்டதுமே நம் மனசு எதை நினைக்குது? கோ மாதாவை. ஆனால் கோ என்கிற சப்தம் ஒரு சப்தம்தான். அதில் பால் கறக்க முடியாது. அது வேறதானே? அதே போல கோ என்கிற பொருள் வேறு. அறிவுதான் எல்லாத்தையும் சம்பந்தப்படுத்தி பார்க்கிறது. குழந்தையாக இருக்கும்போது இது கல்பிக்கப்பட்டு கற்றுக்கொள்ளப்படுது.
அதே போல கோ என்கிற பொருள் வேறு. அறிவுதான் எல்லாத்தையும் சம்பந்தப்படுத்தி பார்க்கிறது. //
mmmmmm???????
Post a Comment