Pages

Saturday, September 11, 2010

ஸூக்ஷ்மமானவை ...



सूक्ष्मविषयत्वं चालिङ्गपर्यवसानम् ।।45।।

ஸூக்ஷ்ம விஷயத்வம்° சாலிங்க³பர்யவஸாநம் || 45||

மேற்கூறிய ஸமாதிக்கு ஸூக்ஷ்மமான விஷயத்தை உடைய தன்மையும் பிரதானத்தை முடிவாக உடையது.

ஸூக்ஷ்மமானவை யாவை?
பரமாணுக்கள் ஐந்து வகைப்படும். பஞ்ச தன் மாத்திரைகளில் ஒவ்வொரு தன் மாத்திரையும் அதனதன் பரமாணுவுக்கு முக்கிய காரணம் ஆகும். மற்றதன் பரமாணுவுக்கு அங்கமாகும். (வேதாந்தத்தில் பஞ்சீகரணம் பற்றி அறிந்தவருக்கு இது புரிய சுலபமாக இருக்கும். ஆனால் வேறானது.)

பரமாணுக்கள் ஐந்து.

௧.பார்த்திவம். ௨.ஆப்யம். ௩.தைஜசம் ௪.வாயவ்யம். ௫.நாபசம்
முக்கிய காரணங்கள்: ௧.பார்த்திவம். – கந்தம் (வாசனை). அங்கம்: ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௨.ஆப்யம். - ரசம்.- அங்கம்: ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௩.தைஜசம் – ரூபம் அங்கம்: ஸ்பர்சம் சப்தம்
௪.வாயவ்யம்.- ஸ்பர்சம் அங்கம்: சப்தம்
௫.நாபசம் – சப்தம்.

இந்த பரமாணுக்கள் காரியங்கள். அதாவது (result) ரிசல்ட். இவற்றுக்கு காரணம் (cause) தன் மாத்திரைகள். பரமாணுக்கள் மிக சிறியன ஆயினும் ஸ்தூலமானவை.

தன் மாத்திரைகள் ஸூக்ஷ்ம மானவை. இவை எங்கிருந்து வந்தன? அஹம் தத்துவத்திலிருந்து வந்தன. அது தன் மாத்திரைகளை விட ஸூக்ஷ்மமானது. அஹம் மஹத் தத்துவத்தில் இருந்து வந்தது. மஹத் தத்துவம் பிரக்ருதியில் இருந்து உண்டானது. இந்த ப்ரக்ருதி பரம ஸூக்ஷ்மமானது.

பரமாணு முதல் ப்ரக்ருதி முடிய அனைத்தும் ஒன்றை விட ஒன்று ஸூக்ஷ்ம மானது. ஆகவே இங்கு உபதேசிக்கப்பட்ட ஸமாதி, ப்ரக்ருதி வரை உள்ள ஸூக்ஷ்ம வஸ்துக்களை விஷயமாக கொண்டது.

2 comments:

R.DEVARAJAN said...

*௫.நாபசம்*

இதன் நாகர வடிவம் கிடைக்குமா ?
வ்யுத்பத்தி தெரிவித்தால் நல்லது.

‘அஹம்’ என்பது சித்தம், புத்தி, அஹங்காரம் என்பதிலுள்ள அஹமா ?


தேவ்

திவாண்ணா said...

வாங்க தேவ் சார்! நலமா?

இந்த அஹ்ம் தத்துவம் அஹங்காரத்திலிருந்து வேறுபட்டதாகத்தான் தோணறது. வேதாந்த பஞ்சீகரணத்திலே இருக்கிற தன்மாத்திரைக்களுக்கும் ப்ரக்ருதிக்கும் நடுவே இந்த மஹத் தத்துவமும் அஹம் தத்துவமும் இந்த சாஸ்திரத்திலே இருக்கு.