Pages

Thursday, September 9, 2010

サムスン



サムスン

இது என்ன?
இது சர்வ சாதாரணமா இந்தியாவில புழங்கற சொல்!
ஆனால் இதை பார்க்கும்போது அது தெரியலை இல்லையா?
இதே போலத்தான் கோ என்ற வார்த்தையும். சாதாரணமா தமிழ் படிச்சு இருந்தாக்கூட யாரும் இதுக்கு பசுமாடு என்று பொருள்ன்னு சொல்லைன்னா ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... ஆங்கிலம் எழுதி இருக்கிறதா நினைச்சு போ ன்னு அர்த்தம் பண்னிடுவாங்க. அப்ப இந்த சித்திரம் - ஆமாம், அதுக்குன்னு ஒரு பொருள் தெரியறவரை அது ஒரு சித்திரமாத்தான் இருக்கும்- என்னத்தை குறிக்குதுன்னு யாரும் சொல்லும் வரை நமக்கு அது ஒரு அறிவையும் உண்டு பண்ணாது. அதை தெரிஞ்சு கொண்டபின் அதை எப்போ பார்த்தாலும் சட்டுன்னு நமக்கு அது என்னனும் அது தொடர்பான விஷயங்களும் உடனே நினைவு வரும்.
ஆக ஒரு சித்திரத்தை வார்த்தையாக ஆக்குகிறது நம் அறிவுதான். அந்த வார்த்தையுடன் சில விஷயங்களை சம்பந்தப்படுத்தி புரிஞ்சு கொள்வதும் நம் அறிவுதான். பழகின பிறகு எல்லாத்தையுமே ஒண்ணாதான் புரிஞ்சுப்போம். பழகாத வரை எல்லாம் வேறு வேறாத்தான் தோணும். இதைத்தன் போன பதிவிலே சொன்னோம்.
அது சரி முதல் வரிலே எழுதி இருக்கிறது என்ன? ஹிஹிஹி! கண்டு பிடிங்க!

2 comments:

Jayashree said...

என்ன இது என்னோட samsung appliance ல இருக்கற எழுத்து மாதிரி இருக்கு!:) இதுக்கும் கோஹம் க்கும் என்ன சம்பந்தம் Mr திவா!!!!!

திவாண்ணா said...

அட! அக்கா, அது 'சாம்சங்' தான்! போன பதிவிலே பசு வுடைய சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் ....ன்னு சொன்னப்ப சிலருக்கு விளங்கலைன்னு இது.