Pages

Friday, September 10, 2010

ஸ்தூல சமாசாரம்...



एतयैव सविचारा निर्विचारा च सूक्ष्मविषया व्याख्याता ।।44।।

ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்ம விஷயா வ்யாக்²யாதா || 44||

முன் கூறப்பட்ட ஸ்தூல விஷயமுடைய ஸவிதர்க்க, நிர்விதர்க்க ஸமாதியை கொண்டே பரமாணு முதலிய ஸூக்ஷ்ம வஸ்துக்களை விஷயமாக உடைய ஸவிசாரம், நிர்விசாரம் என்று சொல்லப்படும் சமாபத்தி (ஸமாதி) தெளிவாக உபதேசிக்கப் பட்டதாகிறது.

ஸ்தூல சமாசாரம் எளிதாக புரிகிறது. ஒரு குடம் என்றால் அது ஸ்தூலமாக இருப்பதால் எளிதாக புரிகிறது. ஸூக்ஷ்ம வஸ்துக்கள் அப்படி புரிவதில்லை.
பெயர்களும் ரூபங்களும் (உருவங்களும்) நிரம்பியுள்ள இவ்வுலகத்தில் கீழ் மட்ட ஸவிசார, நிர்விசார ஸமாதிகளை புரிந்து கொள்வதே கடினம்.
ஸூக்ஷ்ம ஸமாதி ஸவிசாரம், நிர்விசாரம் என இரு வகைப்படும். இதை வகைப்படுத்த விஷயமாவது (parameter) பரமாணு மட்டுமில்லை; பஞ்ச தன் மாத்திரை முதல் ப்ரக்ருதி வரை உள்ள தத்துவங்களும் கூட. இவை ஸூக்ஷ்ம மானதால் ஸூக்ஷ்ம ஸமாதி என பெயர் வந்தது.

3 comments:

Jayashree said...

சம்ப்ரக்ஞாத சமாதி = த்யானி த்யானிக்கும் வஸ்துவில் ஒன்றி விடுவது
த்யானிக்கும் வஸ்து = பொருள்/ உருவம்; அரூபம்;விசாரம்; ஆனந்தம் இதுல ஏதாவது ஒன்றா இருக்கலாம்னு புரியறது.
ஆனா படிப்படியா எல்லாம் மறைந்து போகும் என்ற நிலமை போலிருக்கிறது. இதைத்தான் த்யானிக்கும் வஸ்துவின் அடிப்படையில் நீங்க விதர்கம், சவிதர்கம் நிர்விதர்கம் நு சொல்லறேள் இல்லையா?இதேமாதிரி ஸ்தூலமில்லாமல் சூக்ஷும வஸ்துவும் அங்கேந்து சவிசாரம், நிர்விசாரம்னு ஒவ்வொரு படியா அழைத்து செல்லும்போல? அதுக்கு தான் கோ என்பது என்ன பொருள், உணர்ச்சி யை உண்டாக்கறதுன்னு EXAMPLE காமிச்சு இருக்கேள்? பசு நு உருவமா , யாருன்னு அரூபமா வேறு படலாம்? ஒவ்வொரு LEVELக்கு ஏத்தாப்ல அது மாறறதுன்னு பொருளா? படிக்க யோசிக்க ஆச்சர்யமா curiosity ஐ உண்டு பண்ணுவதாக இருக்கிறது என்னமோ வாஸ்தவம் தான் . ஆனா இந்த அறிவு எனக்கு அதை காட்டதுனு ஏதோ ஒண்ணு உள்ளேந்து சொல்லற மாதிரி இருக்கே Mr திவா(.அது என் சந்தேகமா, நம்பிக்கை குறைவா இல்லை உண்மையிலேயா ந்னு தெரியல்லை. ஆராய முயலறச்சே நான் fight பண்ணற மாதிரி இருக்கு (( அதனால இத்தனைநாள் இந்த TOPIC படிக்க ஆரம்பிச்சவுடனேயே மூடிடுவேன். இப்பத்தான் தொடர்ந்து கொஞ்ச நேரம் படிக்கறேன். ரமணர் சொல்லர த்ரிபுர ரஹஸ்யமும் சிலதை SIMPLE புரிஞ்சுக்க வைக்கறது mechanics VS mechanism மாதிரி!!
?

திவாண்ணா said...

//ஆனா படிப்படியா எல்லாம் மறைந்து போகும் என்ற நிலமை போலிருக்கிறது. இதைத்தான் த்யானிக்கும் வஸ்துவின் அடிப்படையில் நீங்க விதர்கம், சவிதர்கம் நிர்விதர்கம் நு சொல்லறேள் இல்லையா?//
yes.
//இதேமாதிரி ஸ்தூலமில்லாமல் சூக்ஷும வஸ்துவும் அங்கேந்து சவிசாரம், நிர்விசாரம்னு ஒவ்வொரு படியா அழைத்து செல்லும்போல? //
yes of course.

//அதுக்கு தான் கோ என்பது என்ன பொருள், உணர்ச்சி யை உண்டாக்கறதுன்னு EXAMPLE காமிச்சு இருக்கேள்? பசு நு உருவமா , யாருன்னு அரூபமா வேறு படலாம்? ஒவ்வொரு LEVELக்கு ஏத்தாப்ல அது மாறறதுன்னு பொருளா? //
mmm not exactly!
a picture a sound and an object. the three can be perceived by the mind as one by training though they are three different things. once the association is made just the sound 'go' or the word will bring the picture as the cow to you along with so many other related things. that is one is not multiplying here; but many are perceived as one.

திவாண்ணா said...

/ஆனா இந்த அறிவு எனக்கு அதை காட்டதுனு ஏதோ ஒண்ணு உள்ளேந்து சொல்லற மாதிரி இருக்கே Mr திவா(.அது என் சந்தேகமா, நம்பிக்கை குறைவா இல்லை உண்மையிலேயா ந்னு தெரியல்லை. //
of course it is the budhdhi that is illuminating things. why think of it as something bad? satvic budhdhi is most welcome. actually these things are not easy to understand and so far you have done very well following it.

ஆராய முயலறச்சே நான் fight பண்ணற மாதிரி இருக்கு//
you need not fight. read a few times more and things will be clear.

// (( அதனால இத்தனைநாள் இந்த TOPIC படிக்க ஆரம்பிச்சவுடனேயே மூடிடுவேன். இப்பத்தான் தொடர்ந்து கொஞ்ச நேரம் படிக்கறேன். ரமணர் சொல்லர த்ரிபுர ரஹஸ்யமும் சிலதை SIMPLE புரிஞ்சுக்க வைக்கறது mechanics VS mechanism மாதிரி!!
?//
his level of thinking is very deep but it is a pleasure to read him once you are into the groove!