श्रुतानुमानप्रज्ञाभ्यामन्यविषया विशेषार्थत्वात् ।।49।।
ஶ்ருதாநுமாந ப்ரஜ்ஞாப்⁴யா மந்யவிஷயா விஶேஷார்த²த்வாத் || 49||
ஶ்ருத அநுமாந ப்ரஜ்ஞாப்⁴யாம் அந்ய விஷயா விஶேஷார் த²த்வாத்
சப்தத்தாலும் அனுமானத்தாலும் உண்டாகிற பிரக்ஞையை விட இது வேறானது. அது சாமான்யமானது. இந்த ருதம்பரா பிரக்ஞை அவற்றுக்கு எட்டாததை விஷயமாக உடையது.
ஞானம் பிரமாணங்களால் உண்டாகும். இவற்றில் சப்தமும், அனுமானமும் சாமான்ய ஞானத்தையே தரும். மலையில் புகை என்றால் அது மலையில் புகை இருக்கிறது என்ற சாமான்ய ஞானத்தையும், அங்கே ஏதோ எரிகிறது, அதனால் புகை வருகிறது என்ற சாமான்ய ஞானமும் கிடைக்கும். ஏன் புகை? எப்படிப்பட்ட நெருப்பு? எப்படி வந்தது போன்ற விசேஷ ஞானம் கிடைக்காது.
பிரத்யக்ஷம் என்பது இன்னொரு பிரமாணம். இது இரு வகை. சாமான்ய ப்ரத்யக்ஷம், யோக பயிற்சியால் உண்டாகும் ப்ரத்யக்ஷம்.
சாமான்ய ப்ரத்யக்ஷம் புலன்களால் ஏற்படுகிறது. இதன் வீச்சு குறைவானது. புலன்களில் குற்றம் இருந்தால் அது ஞானத்தை பொய்யாக்கி விடுகிறது. ஒரு புலன் அறிவதை மற்றொன்று அறிவதில்லை. அதனால் அப்படியே உண்மை ஞானம் கிடைத்தாலும் விசேஷமான ஞானம் ஒன்றும் முழுமையாக கிடைப்பதில்லை.
யோக ப்ரத்யக்ஷ ஞானம் அப்படி இல்லை. அது இந்திரியங்களை சார்ந்து இல்லை. ப்ரக்ருதி வரை உள்ள ஸூக்ஷ்ம வஸ்துக்களை க்ரஹிக்கும். புதையல் போன்ற மறைந்துள்ளவற்றையும் கிரஹிக்கும். வேறு தேசம், லோகம் இவற்றிலுள்ளதையும் கிரஹிக்கும். அகவே இந்த யோகஜ ப்ரத்யக்ஷ ஞானத்தை ருதம்பரா அல்லது சத்தியமான பிரக்ஞை என உபதேசிக்கிறார்.
இயற்கையில் சுத்த சத்வ புத்தி எல்லாவற்றையும் பிரகாசப்படுத்தக்கூடியது. ஆனால் தமோ குணத்தால் மறைக்கப்பட்டு இருப்பதால் அது இந்திரியங்கள் அறிவதை மட்டுமே பிரகாசப்படுத்துகிறது. யோகப்பயிற்சியால் தமோ குணம் விலக இந்திரியங்கள் துணை இல்லாமலே அனைத்தையும் யோகி அறிகிறான்.
இப்படி மேலான நிலைக்கு செல்லாமல் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களை கண்டு ருதம்பரா பிரக்ஞன் சோகப்படுகிறான்.
2 comments:
/// இயற்கையில் சுத்த சத்வ புத்தி எல்லாவற்றையும் பிரகாசப் படுத்தக் கூடியது. ஆனால் தமோ குணத்தால் மறைக்கப்பட்டு இருப்பதால் அது இந்திரியங்கள் அறிவதை மட்டுமே பிரகாசப் படுத்துகிறது. யோகப் பயிற்சியால் தமோ குணம் விலக இந்திரியங்கள் துணை இல்லாமலே அனைத்தையும் யோகி அறிகிறான். இப்படி மேலான நிலைக்கு செல்லாமல் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களை கண்டு ருதம்பரா பிரக்ஞன் சோகப்படுகிறான்.///
மிகவும் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள், தி வா சார்.
நன்றி
தேவ்
தேவ் சார். இதுக்கு முன் பதிவிலே இன்னும் அதிகமா எழுதச்சொல்லி கேட்டிங்க. ருதம்பரா பத்தி இந்த புத்தகத்திலே அவ்வளொதான் இருக்கு. ஆனா இப்ப தெளிவாகி இருக்கும்ன்னு நம்பறேன்.
Post a Comment